இனம், வர்ணம், நாடு, கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து, தென் பிலிப்பைனிலிருந்து நைஜிரியா வரை உலகின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை பல்வேறு பாகங்களிலும் ஏறக்குறைய ஒரு பில்லியன் மக்களை அவர் தம் நம்பிக்கை ஒன்றே இணைத்து வைத்திருக்கின்றது. அந்த நம்பிக்கையே இஸ்லாம்!
ஏறக்குறைய 18 மில்லியன் முஸ்லிம்கள் அரபுலகில் வசிக்கின்றனர். அதிகமான முஸ்லிம்கள் வசிப்பது இந்தோனேசிய நாட்டில்! அது மட்டுமன்று, ஆசியக் கண்டத்தின் பல பகுதிகள், ஆப்ரிக்கக் கண்டத்தின் பெரும்பகுதி ஆகியன பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்டுள்ளன. மேலும், ரஷ்யா மற்றும் அதிலிருந்து பிரிந்து சென்ற நாடுகள், சீனா, வட – தென் அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றிலும் கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் (IPC) – தமிழ் பிரிவு
குவைத்.