இஸ்லாமிய கண்ணோட்டத்தின்படி, பெண் என்பவள், தனக்குரிய சொத்துக்களையும் உடைமைகளையும் தனது விருப்பப்படி ஆகுமான வகையில் பயன்படுத்திக் கொள்ள தன்னுரிமைக் கொண்ட சுதந்திரப் பறவையாவாள். அவள் தனி ஒருத்தியாக இருந்தாலும் சரி, திருமணமானவளாக இருந்தாலும் சரியே!
தான் திருமணம் முடிக்க நாடும் ஆண்மகனிடமிருந்து தனக்குரிய பாதுகாப்புக் கவசமாக (மஹர் எனும் பெயரில்) ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்தையோ அல்லது அதற்கு பெறுமானமுள்ள ஒன்றையோ பெற்றுக் கொள்கின்றாள். அதுமட்டுமல்ல, மணமுடித்து சென்றாலும் தனது கணவனின் குடும்பப் பெயரை அவள் உடைமையாக்கிக் கொள்வதில்லை! மாறாக, தன்னுடைய குடும்பப் பெயரைக் கொண்டே அழைக்கப்படுகின்றாள். மானத்தைக் காக்கக் கூடியதாகவும், கண்ணியதுக்குரியதாகவும் இருக்கக்கூடிய ஆடைகளை உடுத்துவதற்கு ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமையுண்டு.
சில முஸ்லிம் நாடுகளில் காணப்படும் பெண்களுக்குரிய கண்ணியமான ஆடை வடிவமைப்புகள் அந்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன எனலாம்.
அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நன்னடத்தையும், தமது மனைவியிடம் (உண்மை) பரிவு கொண்ட இறைநம்பிக்கையாளரே தமது இறைநம்பிக்கையில் முழுமையானவர்!
நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.