Featured Posts

38. ஹவாலா (ஒருவரின் கடனை மற்றொருவருக்கு மாற்றுதல்)

பாகம் 2, அத்தியாயம் 38, எண் 2287

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “செல்வந்தன் (வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 38, எண் 2288

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தர் மீது மாற்றப்பட்டால் அவர் ஒத்துக் கொள்ளட்டும்! என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 38, எண் 2289

லைமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. ‘நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இவர் கடனாளியா?’ என்று கேட்டபோது நபித்தோழர்கள் ‘இல்லை’ என்றனர். ‘ஏதேனும் (சொத்தை) இவர்விட்டுச் சென்றிருக்கிறாரா?’ என்று நபி(ஸல்) கேட்டபோது ‘இல்லை’ என்றனர். நபி(ஸல்) அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது ‘இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு ‘நபி(ஸல்) அவர்கள் ‘இவர் கடனாளியா?’ என்று கேட்டபோது ‘ஆம்’ எனக் கூறப்பட்டது. ‘இவர் ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது ‘இல்லை’ என்றனர். ‘இவர் எதையேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘இவர் கடனாளியா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது ‘மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்’ என்று நபித்தேழர்கள் கூறினார். நபித்தோழர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்’ என்றனர். அப்போது நடத்துங்கள்’ என்றனர். அப்போது அபூ கதாதா(ரலி) ‘இவரின் கடனுக்கு நான் பொறுப்பு; தொழுகை நடத்துங்கள்’ என்று கூறியதும் நபி(ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்