Featured Posts

ரமழானின் இறுதிப் பத்து நாட்கள் மற்றும் லைலதுல் கத்ர் குறித்த 38 பயனுள்ள தகவல்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.

மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரைப் பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக!

ரமழானின் இறுதிப் பத்து நாட்கள் மற்றும் லைலதுல் கத்ர் குறித்த 38 பயனுள்ள தகவல்கள்”  (Click here to Download) என்ற இச்சிறிய நூலின் அரபு மொழி மூலவடிவம், கண்ணியத்திற்குரிய அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித் (ஹபிழஹுல்லாஹ்) அவர்களால் தொகுக்கப்பட்டது. இது அவர்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. (Original Arabic book link)

காலத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு, ரமழானின் இறுதிப் பத்து நாட்களின் சிறப்புகளையும், அதிலே நாம் செய்ய வேண்டிய செயல்கள் என்ன? அவைகளை செய்வதால் கிடைக்கும் பாக்கியங்கள் என்ன? அதில் பொதிந்துள்ள மகத்துவமிக்க ‘லைலதுல் கத்ர்’ இரவு பற்றியும், அதன் அடையாளங்கள் என்ன? அந்த இரவில் செய்யும் இபாதத்களின் தன்மை எப்படிப்பட்டது? என்ற பல முக்கிய செய்திகளையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் 38 குறிப்புகளாக இந்த நூல் விவரிக்கின்றது.

எனவே, தமிழ் பேசும் சகோதரர்களும் இந்த அரிய தகவல்களைத் தங்களின் மொழியில் படித்துப் பயன்பெற வேண்டும்; அதன் மூலம் ரமழானின் இறுதிக்கட்டத்தை மிகச் சிறப்பாகவும், பிரயோஜனமானதாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் அல்லாஹ்வின் பெரும் உதவியால், எனது சக்திக்குட்பட்ட விதத்தில் 13-03-2026 (ஹிஜ்ரி 1447 ரமழான் 23) அன்று இதனைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன்.

இந்த ரமழான் மாதத்தை மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்தி, அதிலே பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியார்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக!

இவ்வண்ணம்,

உங்கள் சசோதரன்

றஸீன் அக்பர் (மதனி)

13-03-2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *