பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2565
அபூ அய்மன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, நான் உத்பா பின் அபீலஹபுக்கு அடிமையாக இருந்தேன். அவர் இறந்து விட்டார். பிறகு, அவரது மக்கள் எனக்கு எஜமானர்கள் ஆனார்கள். மேலும், அபூ அம்ருடைய மகனுக்கு என்னை அவர்கள் விற்றார்கள். அப்போது உத்பாவின் மக்கள், எனது வாரிசுரிமை தமக்கே கிடைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள் என்று கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். பரீரா, என்னிடம் (தனக்கு) விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்ட நிலையில் வந்திருந்தார். என்னை வாங்கி விடுதலை செய்து விடுங்கள் என்று என்னைக் கேட்டுக் கொண்டார். நான், சரி என்று சொன்னேன். அதற்கு அவர், எஜமானர்கள் தங்களுக்கே (எனது) வாரிசுரிமை வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல் என்னை விற்க மாட்டார்கள் என்று கூறினார். அதற்கு நான், அப்படியென்றால் எனக்கு அது (உன்னை வாங்கி விடுதலை செய்வது) தேவையற்றது என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் இதைக் கேள்விப்பட்டார்கள். அல்லது இந்தச் செய்தி அவர்களுக்கு எட்டியது. உடனே, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இது பற்றிக் கேட்க, நான் பரீரா என்னிடம் கூறியதைச் சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவளை வாங்கி விடுதலை செய்து விடு. அவளது எஜமானர்கள் தாங்கள் விரும்பியவற்றை எல்லாம் நிபந்தனையிட்டுக் கொள்ளட்டும் (அது செல்லப் போவதில்லை) என்று கூறினார்கள். ஆகவே, நான் பரீராவை வாங்கி விடுதலை செய்து விட்டேன். (அப்போதும்) அவரது எஜமானர்கள் (அவரது) வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனை விதித்தார்கள். (இதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும், அவர்கள் (அடிமையின் எஜமானர்கள்) நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2566
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் பெண்களே ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2567
உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், என் சகோதரி மகனே- நாங்கள் பிறை பார்ப்போம். மீண்டும் பிறை பார்ப்போம். பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம்-. அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது என்று கூறினார்கள். நான், என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்ககை நடத்தினீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர், இரு கருப்பான பொருட்கள் (ஒன்று) பேரீச்சம் பழம் (மற்றெhன்று) தண்ணீர் தவிர அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்.) அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள். என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2568
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாக தரப்பட்டாலும் சரி, நான் அதைப் பெற்றுக் கொள்வேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2569
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: தச்சுவேலை தெரிந்த அடிமை ஒருவனை வைத்திருந்த முஹாஜிர் பெண் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்பி மிம்பருக்கு (மேடைக்கு)த் தேவையான மரச்சட்டங்களைச் செய்து தரும்படி உன் அடிமைக்குக் கட்டளையிடு என்று கூறினார்கள். அவ்வாறே, அப்பெண்மணி தன் அடிமைக்குக் கட்டளையிட, அவ்வடிமை (காட்டிற்குச்) சென்று, (இறகு போன்ற இலைகளை உடைய) தர்ஃபா எனும் ஒரு வகை மரத்தை வெட்டியெடுத்து வந்து நபி (ஸல்) அவர்களுக்கு மிம்பர் ஒன்றைச் செய்தார். அதைச் செய்து முடித்தபின் அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களுக்கு மிம்பரை அவர் செய்து முடித்துவிட்டதாகத் தகவல் சொல்லி அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் அதைக் கொடுத்தனுப்புமாறு சொன்னார்கள். பின்னர் அதைக் கொண்டு வந்தனர். நபி (ஸல்) அவர்கள் அதைச் சுமந்து சென்று இப்போது நீங்கள் பார்க்கும் இடத்தில் வைத்தார்கள்
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2570
அபூ கத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஹுதைபிய்யா ஆண்டில்) ஒரு நாள் மக்கா (செல்லும்) சாலையில் இருந்த ஒரு வீட்டில் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் எங்கள் முன்னால் தங்கியிருந்தார்கள். அனைவரும் இஹ்ராம் அணிந்திருந்தார்கள். நான் (மட்டும்) இஹ்ராம் அணியாமல் இருந்தேன். அப்போது அவர்கள் ஒரு காட்டுக் கழுதையைப் பார்த்தார்கள். நானோ, என் செருப்பைத் தைப்பதில் ஈடுபட்டிருந்தேன். ஆகவே, அ(வர்கள் பார்த்த)தை எனக்கு அறிவிக்கவில்லை. எனினும், நான் அதைப் பார்த்தால் நன்றாயிருக்கும் என்று அவர்கள் விரும்பினார்கள். (தற்செயலாக) நான் அதைத் திரும்பிப் பார்த்தேன். உடனே, நான் எழுந்து குதிரையின் பக்கம் சென்று, அதற்குச் சேணம் பூட்டி, பிறகு அதில் ஏறினேன். சாட்டையையும் ஈட்டியையும் (எடுத்துக் கொள்ள) நான் மறந்து விட்டேன். ஆகவே, அவர்களிடம், எனக்கு சாட்டையையும் ஈட்டியையும் எடுத்துக் கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், (இஹ்ராம் அணிந்திருந்ததால்), இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக* நாங்கள் உங்களுக்கு இந்த விஷயத்தில் சிறிதும் உதவ மாட்டோம் என்று கூறினர். எனவே, நான் கோபமுற்றேன். உடனே (குதிரையிலிருந்து) இறங்கி அவ்விரண்டையும் எடுத்துக் கொண்டேன். (குதிரையில்) மீண்டும் ஏறி கழுதையைத் தாக்கி காயப்படுத்தினேன் பிறகு, அது இறந்துவிட்ட நிலையில் அதைக் கொண்டு வந்தேன். அவர்கள் (என் தோழர்கள்) அதன் மீது பாய்ந்து உண்ணலானார்கள். பிறகு, தாங்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில் அதை உண்ட(து கூடுமா கூடாதா என்னும் விஷயத்)தில் சந்தேகம் கொண்டார்கள். ஆகவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேhம். நான் (கழுதையின்) ஒரு புஜத்தை என்னுடன் மறைத்து (எடுத்து)க் கொண்டேன். நாங்கள் அல்லாஹ்வின் தூதரை அடைந்ததும், அவர்களிடம் அது (காட்டுக் கழுதையை நான் வேட்டையாட, இஹ்ராம் அணிந்திருந்தவர்கள் அதை உண்டது) பற்றிக் கேட்டோம். அவர்கள், அதிலிருந்து (இறைச்சி) ஏதும் உங்களுடன் இருக்கின்றதா? என்று கேட்டார்கள். நான், ஆம் என்று அவர்களுக்கு (அதன்) புஜத்தை (முன்னங் காலை)க் கொடுத்தேன். நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அது உண்டு முடித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2571
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடைய இதே வீட்டில் எங்களிடம் வந்து தண்ணீர் புகட்டும்படி கேட்டார்கள். ஆகவே, நாங்கள் எங்களுடைய ஓர் ஆட்டின் பாலை அவர்களுக்காக கறந்தோம். பிறகு, நான் எங்களுடைய இந்தக் கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து அதை அவர்களுக்குக் கொடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இடப்பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் எதிரில் உமர் (ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் ஒரு கிராம வாசியும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் பாலை குடித்து முடித்தவுடன் உமர் (ரலி) அவர்கள் இதோ அபூபக்ர் என்று கூறினார்கள். எனினும், நபி (ஸல்) அவர்கள் தமது (பாலின்) மீதத்தை கிராம வாசிக்குக் கொடுத்தார்கள். பிறகு வலப்பக்கத்தில் இருப்பவர்களே முன்னுரிமை உடையவர்கள். ஆகவே, வலப்பக்கத்தில் இருப்பவர்களுக்கு முதலிடம் கொடுங்கள் என்று கூறினார்கள். இறுதியில் அனஸ் (ரலி) அவர்கள், அது நபிவழியாகும். அது நபிவழியாகும். என்று மும்முறை கூறினார்கள் என்று இதை அவர்களிடம் இருந்து கேட்டு அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் கூறுகிறார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2572
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மர்ருழ் ழஹ்ரான் என்னுமிடத்தில் நாங்கள் ஒரு முயலை (அதன் பொந்திலிருந்து) கிளப்பி விரட்டினோம். மக்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து களைத்துவிட்டார்கள். நான் அதைப் பிடித்துவிட்டேன். அதை எடுத்துக் கொண்டு அபூதல்ஹா (ரலி) அவர்களிடத்தில் வந்தேன். அவர்கள் அதை அறுத்து அதன் பிட்டத்தை அல்லது – தொடைகளை அல்லாஹ்வின் தூதரிடம் அனுப்பினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் உண்டார்களா? என்று ஓர் அறிவிப்பாளர் கேட்க, மற்றோர் அறிவிப்பாளர், (ஆம்,) நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து உண்டார்கள் என்று கூறிவிட்டு, அதன் பிறகு, அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று கூறினார
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2573
ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை பரிசாக அளித்தேன். அப்போது அவர்கள் அப்வா என்னுமிடத்தில் – அல்லது வத்தான்- என்னும் இடத்தில் – இருந்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். என முகத்தில் (தோன்றிய) கவலைக் குறியைக் கண்டபோது, நாம் இஹ்ராம் அணிந்திருப்பதனால் தான் உன்னிடம் அதைத் திருப்பித் தந்தோம் என்று கூறினார்கள்-.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2574
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள், நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் தங்கும் நாளையே, தமது அன்பளிப்புகளை அவர்களுக்கு வழங்குவதற்காகத் தேர்ந்தெடுத்து (வழங்கி) வந்தார்கள். அதைக் கொண்டு நபி (ஸல்) அவர்களின் திருப்தியைப் பெற விரும்பியே அவர்கள் இப்படிச் செய்து வந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2575
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாயாரின் சகோதரியான உம்மு ஹுஃபைத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு (உலர்ந்த) பாலாடைக் கட்டியையும் வெண்ணையையும் உடும்புகளையும் அன்பளிப்பாகத் தந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பாலாடைக் கட்டியிலிருந்தும். வெண்ணையிலிருந்தும் (சிறிது எடுத்து) உண்டார்கள். ஆனால், அவர்களுக்கு அருவருப்பாகத் தோன்றியதால் உடும்புகளை உண்ணாமல் விட்டு விட்டார்கள். (எனினும்) அது (உடும்பு) அல்லாஹ்வின் தூதருடைய உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டது. அது ஹராமாக (தடை செய்யப்பட்டதாக) இருந்திருந்தால் அல்லாஹ்வின் தூதருடைய உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டிருக்காது
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2576
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் உணவுப் பொருள் கொண்டு வரும் போது இது அன்பளிப்பா? தருமமா? என்று அவர்கள் கேட்பார்கள். தருமம் தான் என்று பதிலளிக்கப்பட்டால் தம் தோழர்களிடம், நீங்கள் உண்ணுங்கள் என்று கூறிவிடுவார். தாம் உண்ண மாட்டார்கள். அன்பளிப்பு என்று கூறப்பட்டால், தம் கையை தட்டிக் கொண்டு (விரைந்து) தோழர்களுடன் சேர்ந்து உண்பார்
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2577
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஓர் இறைச்சி கொண்டு வரப்பட்டது. இது பரீரா (ரலி) அவர்களுக்கு தர்மமாகக் கிடைத்தது என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், இது அவருக்கு தருமமாகும். நமக்கு அன்பளிப்பாகும் என்று கூறினார்கள்-.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2578
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பரீராவை (விலைக்கு) வாங்கிட விரும்பினேன். அவர்கள் (அவருடைய எஜமானர்கள்) அவருடைய வாரிசுரிமை தமக்கே சேர வேண்டும். (என்று ஒப்புக் கொண்டால் மட்டுமே அவரை விற்போம்) என்று நிபந்தனையிட்டார்கள். நபி (ஸல்) அவர்களிடம் இது குறித்துச் சொல்லப்பட்டது. அப்போது அவர்கள், அவரை நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், (ஓர் அடிமையை) விடுதலை செய்தவருக்கே (அவ்வடிமையின்) வாரிசுரிமை உரியதாகும் என்று கூறினார்கள். பரீரா (ரலி) அவர்களுக்கு இறைச்சி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களிடம், இது பரீரா அவர்களுக்கு தருமமாக கிடைத்தது என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், இது அவருக்கு தருமமாகும். நமக்கு அன்பளிப்பாகம் என்று கூறினார்கள். மேலும், பரீரா (ரலி) அவர்கள் (தம் கணவரை பிரிந்து விடுவது அல்லது தொடர்ந்து அவருடன் வாழ்வது என்னும் இரு விஷயங்களில்) தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டார்கள். அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் காசிம் (ரஹ்) அவர்கள் பரீரா (ரலி) அவர்களின் கணவர் சுதந்திரமானவரா? அடிமையா? என்று கேட்டார்கள். நான் அப்துர் ரஹ்மானிடம் பரீரா (ரலி) அவர்களின் கணவரைப் பற்றிக் கேட்டேன். அவர் சுதந்திரமானவரா, அடிமையா என்று எனக்குத் தெரியாது என்று கூறினார் என்பதாக மற்றோர் அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) கூறுகின்றார்கள
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2579
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என் (வீட்டில் தங்குகின்ற) நாளையே அவர்களுக்குத் தங்கள் அன்பளிப்புகளை வழங்குவதற்காக மக்கள் தேர்ந்தெடுத்து வந்தார்கள். உம்மு ஸலாமா (ரலி) அவர்கள் கூறுகிறhர்கள்„ என் தோழிகள் (நபி (ஸல்) அவர்களின் பிற மனைவிமார்கள் எனது வீட்டில்) ஒன்று கூடி(ப் பேசி)னர். (அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க) நான் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களின் கோரிக்கையைச்)- சொன்னேன். அவர்கள் அதை (கண்டு கொள்ளாமல்) புறக்கனித்து விட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2581
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதருடைய மனைவிமார்களான நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, மற்றும் சவ்தா ஆகியோரும் இருந்தோம். மற்றொரு குழுவில் உம்மு சலாமா அவர்களும் அல்லாஹ்வின் தூதருடைய மற்ற மனைவிமார்களும் இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் என்னை எவ்வளவு (ஆழமாக) நேசித்து வந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, அன்பளிப்பு செய்பவர் தம்மிடம் பரிசுப் பொருள் ஏதும் இருந்தால், அதை அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்புச் செய்ய அவர் விரும்பினால், அதை தள்ளிப் போட்டு, என் வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தங்கும் நாள்) வரும்போது என் வீட்டிற்கு அன்பளிப்பு கொடுத்தனுப்புவார். ஆகவே, (இது தொடர்பாக) உம்மு சலாமா குழுவினர் (தங்களிடையே கலந்து) பேசினர். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் பேசி, எவர் எனக்கு ஓர் அன்பளிப்பைத் தர விரும்புகிறாரோ அவர், நான் என் மனைவிமார்களின் வீடுகளில் எங்கிருந்தாலும் அங்கு அந்த அன்பளிப்பை அனுப்பி வைக்கட்டும் என்று கூறும்படி (அல்லாஹ்வின் தூதரை) கேட்டுக் கொள் என்று உம்மு ஸலாமா அவர்களிடம் அவர்களின் குழுவினர் கூறினர். அவ்வாறே உம்மு சலாமா அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் தம் குழுவினர் கூறியதை எடுத்துச் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் ஏதும் கூறவில்லை. பிறகு, உம்மு சலமா அவர்களின் குழுவிலிருந்த மற்ற மனைவிமார்கள் உம்மு சலமா அவர்களிடம், (நமது கோரிக்கையை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களா? என்று) கேட்டனர். உம்மு சலமா அவர்கள், எனக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை என்று சொன்னார்கள். அவர்கள், மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் (இது பற்றிப்) பேசு என்று கூறினர். உம்மு சலமா அவர்களும் அடுத்து தமது முறை வந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துப் பேசினார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை. மீண்டும் உம்மு சலமா (ரலி) அவர்களின் குழுவினர், அவர்களிடம் (நபி (ஸல்) அவர்கள் என்ன பதில் சொன்னர்கள் என்று) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எனக்கு பதில் எதுவும் கூறவில்லை என்று உம்மு சலமா அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்கள், அவர்கள் உனக்கு பதில் தரும்வரை நீ அவர்களிடம் (இது குறித்துப்) பேசிக் கொண்டேயிரு என்று கூறினார்கள். மீண்டும் உம்மு சலமா (அவர்களின் முறை வந்தபோது) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். உம்மு சலமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மீண்டும் (இது குறித்துப்) பேசினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், ஆயிஷhவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனை) தராதே. ஏனெனில், ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள். உம்மு சலமா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே* உங்களுக்குத் துன்பம் தந்ததற்காக அல்லாஹ்விடம் நான் பாவ மன்னிப்புக் கோருகிறேன் என்று கூறினார்கள். பிறகு, அந்த மனைவியர் அல்லாஹ்வின் தூதருடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அணுகி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், உங்கள் மனைவிமார்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மக(ளான ஆயிஷா (ரலி) அவர்க)ளின் விஷயத்தில் (தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவியரிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறார்கள் எள்று கூறுமாறு (சொல்லி) அனுப்பினார்கள். (அவ்வாறே) ஃபாத்திமாவும் நபி (ஸல்) அவர்களிடம் பேசினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், என் அன்பு மகளே* நான் நேசிப்பதை நீயும் நேசிக்கவில்லையா? என்று கேட்டார்கள். அதற்க அவர்கள், ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்) என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று அவர்களிடம் (தன் சின்னம்மாக்களிடம்) செய்தியைத் தெரிவித்து விட்டார்கள். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் மறுபடியும் போ(ய்ச் சொல்) என்று கூறினார்கள். மீண்டும் (இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம்) செல்ல ஃபாத்திமா அவர்கள் மறுத்து விட்டார்கள். ஆகவே, அவர்கள் (தம் சார்பாக) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (சற்று) கடுமையாகப் பேசி, உங்கள் மனைவிமார்கள் அபூ கஹாஃபாவின் மகனுடைய (அபூபக்ருடைய) மகளின் (ஆயிஷாவின்) விஷயத்தில் (நடந்து கொள்வது போன்றே பிற மனைவிமார்களிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றhர்கள் என்று கூறினார்கள். நான் (ஆயிஷா) அமர்ந்து கொண்டிருக்க, அவரது குரல் உயர்ந்தது. அவர் என்னைக் குறை கூறித் திட்டினார். எந்த அளவுக்கென்றால், அல்லாஹ்வின் தூதர் நான் பதில் பேசுவேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே, நான் ஸைனபுவுக்கு பதில் சொல்லி, இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, இவள் (உண்மையிலேயே) அபூபக் ருடைய மகள் தான் என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது, ஃபாத்திமா அனுமதி கேட்டு உள்ளே வந்தார் என்று ஆயிஷா (ரலி) கூறியுள்ளார்கள
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2582
அஸ்ரா பின் ஸாபித் அல் அன்சாரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் சுமாமா பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் சென்றேன், அவர்கள் எனக்கு வாசனைத் திரவியத்தைக் கொடுத்து, அனஸ் (ரலி) அவர்கள் வாசனைத் திரவியத்தை (எவராவது அன்பளிப்பாகக் கொடுத்தால்) நிராகரிப்பதில்லை என்றும் கூறினார். மேலும், சுமாமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் வாசனைத் திரவியத்தை நிராகரிப்பதில்லை என்று அனஸ் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2583
மிஸ்வர் பின் மக்ராமா (ரலி) அவர்களும் மர்வான் (ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தம்மிடம் ஹவாஸின் குலத்தாரின் தூதுக் குழு ஒன்று வந்தபோது, மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியான பண்புகளை எடுத்துரைத்துப் புகழ்ந்து விட்டு பிறகு, (மக்களே!) உங்கள் சகோதரர்கள் (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களுடைய போர்க் கைதிகளை அவர்களிடமே திருப்பித் தந்து விடுவதையே நான் உசிதமாகக் கருதுகிறேன். ஆகவே, உங்களில் எவர் மனப்பூர்வமாகத் திருப்பித் தந்துவிட விரும்புகிறாரோ அவர் அவ்வாறே திருப்பித் தந்துவிடட்டும். எவர், அல்லாஹ், நமக்கு முதலாவதாக (கிடைக்கும் வெற்றியில்) அளிக்கின்ற பொருள்களிலிருந்து அவருக்கு நாம் கொடுக்கின்றவரை தனது பங்கைத் தானே வைத்துக் கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும் என்று கூறினார்கள். மக்கள் நாங்கள் உங்களுக்காக மனப்பூர்வமாக (போர்க் கைதிகளைத் திருப்பித் தந்து விட) சம்மதிக்கின்றோம் என்று கூறினார்கள
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2584
மிஸ்வர் பின் மக்ராமா (ரலி) அவர்களும் மர்வான் (ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தம்மிடம் ஹவாஸின் குலத்தாரின் தூதுக் குழு ஒன்று வந்தபோது, மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியான பண்புகளை எடுத்துரைத்துப் புகழ்ந்து விட்டு பிறகு, (மக்களே!) உங்கள் சகோதரர்கள் (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களுடைய போர்க் கைதிகளை அவர்களிடமே திருப்பித் தந்து விடுவதையே நான் உசிதமாகக் கருதுகிறேன். ஆகவே, உங்களில் எவர் மனப்பூர்வமாகத் திருப்பித் தந்துவிட விரும்புகிறாரோ அவர் அவ்வாறே திருப்பித் தந்துவிடட்டும். எவர், அல்லாஹ், நமக்கு முதலாவதாக (கிடைக்கும் வெற்றியில்) அளிக்கின்ற பொருள்களிலிருந்து அவருக்கு நாம் கொடுக்கின்றவரை தனது பங்கைத் தானே வைத்துக் கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும் என்று கூறினார்கள். மக்கள் நாங்கள் உங்களுக்காக மனப்பூர்வமாக (போர்க் கைதிகளைத் திருப்பித் தந்து விட) சம்மதிக்கின்றேhம் என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2585
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்று அதற்கு (பதிலாக எதையாவது கொடுத்து) ஈடு செய்து வந்தார
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2586
நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னை என் தந்தையார் (பஷீர் பின் சஅத் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று, நான் எனது இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்திருக்கின்றேன் என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் இதைப் போன்றே அன்பளிப்புச் செய்துள்ளீரா? என்று கேட்டார்கள். என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் அதை (உங்கள் அன்பளிப்பைத்) திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2587
ஆமிர் பின் ஷர்ஹபீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன், அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2588
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் வேதனை அதிகரித்தபோது, என் வீட்டில் (தங்கி) நோய்க்கான கவனிப்பையும் சிகிச்சையையும் பெற்றுக் கொள்ள அனுமதியளிக்கும்படி தம்முடைய மற்ற மனைவிமார்களிடம் கேட்டார்கள், அவர்களும் அனுமதி அளித்துவிட்டனர். பின்னர் (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள், தம் இரு கால்களும் பூமியில் இழுபட, இரு மனிதர்களுக்கிடையே தொங்கிய வண்ணம் புறப்பட்டார்கள். அப்போது, அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்குமிடையே இருந்தார்கள். அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதை இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள், ஆயிஷh (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாமல் விட்ட மனிதர் யாரென்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான், தெரியாது என்று பதிலளித்தேன். அவர்கள், அந்த மனிதர் அலீ பின் அபீதாலிப் அவர்கள் தாம் என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2589
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2590
அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் என்னிடம் இல்லை. அதை நான் தர்மம் செய்யலாமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தர்மம் செய். கஞ்சத்தனமாக பையில் (சேரித்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் உன்னிடமும் கஞ்சத்தனம் காட்டப்படும் என்று கூறினார்கள்-.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2591
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செலவழி கணக்கிட்டு (செலவழித்து)க் கொண்டிருக்காதே! (அப்படிக் கணக்கிட்டு நீ செலவழித்தால்) அல்லாஹ்வும் உனக்கு (தரும் போது) கணக்கிட்டு (தந்து) விடுவான். கஞ்சத்தனமாகப் பையில் (சேர்த்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும் உன்னிடம் கஞ்சத்தனமாக நடந்து கொள்வான். இதை அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறhர்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2592
அன்னை மைமூனா பின்த்து ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால், நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்தபோது, அல்லாஹ்வின் தூதரே* அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டேனே, அறிவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ (விடுதலை) செய்து விட்டாயா? என்று கேட்க, நான், ஆம், (விடுதலை செய்து விட்டேன்) என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (தாய் மாமன்களுக்கு அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2593
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரயாணம் செய்ய நாடினால் தம் மனைவிமார்களுக்கிடையே (எவரைத் தம்முடன் அழைத்துச் செல்வது என்று) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். எவரது பெயர் (குலுக்கலில்) வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்படுவார்கள். தம் மனைவி மார்களில் ஒவ்வொருவருக்கும் தம் பகலையும் இரவையும் பங்கு வைத்து வந்தார்கள். ஆனால், சவ்தா பின்த்து ஸம்ஆ (ரலி) அவர்கள் மட்டும் தம் பங்குக்குரிய நாளை, நபி (ஸல்) அவர்களின் (பிரியத்திற்குரிய) மனைவியான ஆயிஷh (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி விட்டிருந்தார்கள். அதன் வாயிலாக, அல்லாஹ்வின் தூதருடைய திருப்தியை அடைவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2594
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையான குரைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான மைமூனா (ரலி) அவர்கள் தமது அடிமைப் பெண் ஒருத்தியை விடுதலை செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடம், (இந்த அடிமைப் பெண்ணை அன்பளிப்பாகக் கொடுத்து,) உன் தாய்மாமன்கள் சிலரின் உறவைப் பேணியிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2595
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அண்டை வீட்டுக்காரர்கள் இருவர் உள்ளனர். அவர்களில் எவருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன். அவ்விருவரில் எவரது வாசல் உன் வீட்டு வாசலுக்கு அருகிலுள்ளதோ அவருக்கு அன்பளிப்புச் செய் என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2596
ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் அப்வா என்னும் இடத்தில் அல்லது வத்தான் என்னும் இடத்தில் இருந்தபோது, (வேட்டையாடிய) காட்டுக் கழுதையை அவர்களுக்கு நான் அன்பளிப்பாகத் தந்தேன், அப்போது அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்தார்கள். ஆகவே, அதைத் திருப்பித் தந்து விட்டார்கள். அவர்கள் என் அன்பளிப்பை ஏற்க மறுத்து விட்டதால் என் முகத்தில் தோன்றிய கவலைக் குறியைக் கண்டபோது, நாம் இஹ்ராம் அணிந்திருப்பதால் தான் உன் அன்பளிப்பைத் திருப்பித் தந்தோம் என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2597
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அஸ்த் என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்தபோது, இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்புக் கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே!என் உயிரைத் தனது கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக!உங்களில் யாரேனும் அந்த ஸகாத் பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றhலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும் என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, இறைவா* (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மும்முறை கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2598
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் பஹ்ரைனின் நிதி வந்துவிட்டால் நான் உனக்கு இவ்வளவு தருவேன் என்று மூன்று முறை கூறினார்கள். ஆனால், அந்த நிதி வருவதற்குள் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்துவிட்டார்கள். அப்போது (ஆட்சித் தலைவராகத் தேர்வு பெற்ற) அபூபக்ர் (ரலி) அவர்கள், எவருக்காவது நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாக்களித்திருந்தால் அல்லது எவருக்காவது அவர்கள் பாக்கி வைத்திருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் என்று (பொது) அறிவிப்புச் செய்யும்படி பறையறிவிப்பவருக்குக் கட்டளையிட, அவர் அவ்வாறே அறிவித்தார். ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, எனக்கு (பஹ்ரைனின் நிதியிலிருந்து) தருவதாக நபி (ஸல்) அவர்கள் வாக்களித்திருந்தார்கள் என்று கூறினேன். இதைக் கேட்ட அவர்கள் எனக்கு (நிதியை) மூன்று முறை கைகளால் அள்ளிக் கொடுத்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2599
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில அங்கிகளைப் பங்கிட்டார்கள். ஆனால், என் தந்தை (மக்ரமாவு)க்கு ஒன்றையும் கொடுக்கவில்லை. என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள், என் அன்பு மகனே! என்னுடன் அல்லாஹ்வின் தூதரிடம் வா! என்று கூறினார்கள். நான் அவர்களுடன் சென்றேன். என் தந்தை, எனக்காக நபி (ஸல்) அவர்களைக் கூப்பிடு என்று கூற, நான் நபி (ல்) அவர்கள் வெளியே வந்தார்கள். அவர்கள் மீது அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. அவர்கள், நான் உங்களுக்காக இதை (யாருக்கும் தராமல்) எடுத்து வைத்திருந்தேன் என்று கூறினார்கள். என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் அதைப் பார்த்துவிட்டு, மக்ரமா திருப்தியடைந்தான் என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2600
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனி[தர் வந்து, நான் அழிந்து விட்டேன் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்ன (நடந்தது)? என்று கேட்டார்கள். அவர் நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் உடலுறவு கொண்டு விட்டேன் என்றhர். நபி (ஸல்) அவர்கள் உன்னிடம் அடிமை எவரும் உண்டா? என்று கேட்டார்கள். அம்மனிதர், இல்லை என்று கூறினார். தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உன்னால் முடியுமா என்று கேட்டார்கள். அதற்கும் அவர், முடியாது என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் அறுபது ஏழைகளுக்கு உன்னால் உணவளிக்க முடியுமா என்று கேட்டார்கள். அதற்கும் அவர் முடியாது என்று பதிலளித்தார். அப்போது அன்சாரி ஒருவர், அரக் ஒன்றை கொண்டு வந்தார். அரக் என்பது பேரீச்சம் பழக்கூடையாகும். நபி (ஸல்) அவர்கள் (கேள்வி கேட்ட) அம்மனிதரிடம், இதை எடுத்துச் சென்று தர்மம் செய்து விடு என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! எங்களை விட அதிகத் தேவையுடைய (வறிய)வர்களுக்கா நான் இதை தர்மம் செய்வது? உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்த (இறை)வனின் மீதாணையாக! மதீனாவின் இருமலைகளுக்கிடையே எங்களை விட அதிகத் தேவையுடைய வீட்டார் எவருமில்லை என்று கூறினார், அப்போது நபி (ஸல்) அவர்கள் போ! (போய்) உன் வீட்டாருக்கு இதை உண்ணக் கொடு என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2601
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை உஹுதுப் போரின் போது ஷஹீதாகக் கொல்லப்பட்டார்கள். கடன்காரர்கள் தங்கள் உரிமைகள் விஷயத்தில் (கடனைத் திரும்பப் பெறுவதில்) கடுமை காட்டினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று (இது பற்றிக்) கூறினேன். அவர்கள், என் தந்தைக்குக் கடன் கொடுத்தவர்களிடம், என் தோட்டத்தின் கனிகளைப் பெற்றுக் கொள்ளும்படியும் (மீதியுள்ள கடனை) மன்னித்து விடும்படியும் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையை) ஏற்க மறுத்து விட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோட்டத்தை அவர்களிடம் கொடுக்கவுமில்லை, கனிகளைப் பறித்து அவர்களுக்குத் தரவுமில்லை. மாறாக, நான் உன்னிடம் நாளை வருவேன் என்று கூறினார்கள். (அடுத்த நாள்) காலையில் எங்களிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களுக்கிடையே சுற்றி வந்து, அதன் கனிகளில் பரக்கத் (எனும் அருள் வளத்திற்காக பிரார்த்தித்தார்கள். நான் அவற்றைப் பறித்துக் கடன்காரர்களின் உரிமைகளை நிறைவேற்றினேன். எங்களுக்கு அவற்றின் பழங்களில் சிறிதளவு எஞ்சியது. பிறகு, நான் அல்லாஹ்வின் தூதரிடம் அவர்கள் (தமது அவையில்) அமர்ந்திருந்த பொழுது வந்து, நடந்ததைத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு அமர்ந்திருந்த உமர் (ரலி) அவர்கள், தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2602
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது. (அதை) அவர்கள் குடித்தார்கள். அப்போது அவர்களுடைய வலது பக்கத்தில் ஒரு சிறுவரும் இடது பக்கத்தில் முதியவர்கள் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அந்த சிறுவரிடம், நீ அனுமதியளித்தால் நான் இவர்களுக்கு (என் பக்கத்திலுள்ள முதியவர்களுக்கு) கொடுத்து விடுகின்றேன் என்று கூறினார்கள். அந்தச் சிறுவர், அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து (எனக்குக் கிடைக்கக் கூடிய) என் பங்கை வேறெவருக்காகவும் விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரின் கையில் அந்த (மீதி) பானத்தை வைத்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2603
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் பள்ளி வாசலில் சென்றேன், எனக்கு (என்னிடம் வாங்கிய ஒட்டகத்தின் விலையைச்) செலுத்தி எனக்கு அதிகமாகவும் தந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2604
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பிரயாணத்தில் ஒட்டகம் ஒன்றை நான் விற்றேன். மதீனாவிற்கு நான் வந்தபோது நபி (ஸல்) அவர்கள், பள்ளிவாசலுக்கு வந்து இரண்டு ரக்அத்துக்களைத் தொழு என்று கூறினார்கள். பிறகு நிறுத்(துத் தந்)தார்கள். ஷாம் வாசிகள் ஹhராவுடைய நாளில் அதை எடுத்துக் கொள்ளும்வரை அதிலிருந்து சிறிதளவு எப்போதும் என்னிடம் இருந்து ரக்அத்துக்களைத் தொழு என்று கூறினார்கள், சிறிது அதிகமாகவும் தந்தார்கள். ஷhம் வாசிகள் ஹர்ராவுடைய நாளில்- அதை எடுத்துக் கொள்ளும் வரை அதிலிருந்து சிறிதளவு எப்போதும் என்னிடம் இருந்து வந்தது.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2605
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதரிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது, அப்போது அவர்களின் வலப் பக்கத்தில் ஒரு சிறுவரும் அவர்களின் இடப் பக்கத்தில் முதியவர்கள் சிலரும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் சிறுவரை நோக்கி, இவர்களுக்கு இந்தப் பாலைக் கொடுப்பதற்கு எனக்கு அனுமதி தருகிறhயா? என்று கேட்டார்கள். அச்சிறுவர், மாட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய (நற்)பேற்றை வேறெவருக்காகவும் நான் விட்டுத் தரமாட்டேன் என்று கூறினார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அந்த பானத்தை சிறுவரின் கையில் வைத்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2606
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (அவர் நபி (ஸல்) அவர்களிடம் கடுமையாகப் பேசியதால்) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அந்த மனிதரை தண்டிக்க முனைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அவரை விட்டுவிடுங்கள். ஏனெனில், உரிமையுடையவர் (கடன் கொடுத்தவர்), தன் உரிமையை கேட்கும் போது கடுமையாகப் பேச(வும் கடுமையாக நடந்து கொள்ள)வும் அவருக்கு உரிமையுண்டு என்று கூறிவிட்டு, அவருக்கு (நான் தரவேண்டிய ஒட்டகத்தின் சம வயதுடைய ஒட்டகத்தை வாங்கி, அதை அவரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள். நபித்தோழர்கள், தாங்கள் தரவேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதுடைய ஒட்டகம் தான் எங்களுக்குக் கிடைக்கிறது என்று கூற, நபி (ஸல்) அவர்கள், அதை வாங்கி, அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறhரோ அவரே உங்களில் சிறந்தவர் ஆவார் என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2607
மர்வான் பின் ஹகம் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் ஹவாஸின் குலத்தார் முஸ்லிம்களாக வந்தபோது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், தங்கள் செல்வங்களையும் போர்க்கைதிகளையும் தங்களிடம் திருப்பித் தந்துவிடும்படி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், என்னுடன் நீங்கள் பார்க்கின்ற (இந்தப்) படைவீரர்களும் இருக்கின்றனர். உண்மை பேசுவது எனக்கு மிகவும் விருப்பமானதாகும். (உங்கள்) போர்க் கைதிகள் அல்லது (உங்கள்) செல்வம் இரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நான் (உங்களை) எதிர்பார்த்துக் காத்திருந்தேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், என்னுடன் நீங்கள் பார்க்கின்ற (இந்தப்) படைவீரர்களும் இருக்கின்றனர். உண்மை பேசுவது எனக்கு மிகவும் விருப்பமானதாகும். (உங்கள்) போர்க் கைதிகள் அல்லது (உங்கள்) செல்வம் இரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நான் (உங்களை) எதிர்பார்த்துக் காத்திருந்தேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்திலிருந்து புறப்பட்ட நேரத்திலிருந்து பத்துக்கு மேற்பட்ட இரவுகள் அவர்களை எதிர்பார்த்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் போர்ச் செல்வங்கள் அல்லது போர்க் கைதிகள் இரண்டிலொன்றைத் தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகி விட்டபோது, நாங்கள் எங்கள் போர்க்கைதிகளையே திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடயே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியுள்ள பண்புகளைக் கொண்டு புகழ்ந்தார்கள். பிறகு, (முஸ்லிம்களே*) உங்களுடைய இந்தச் சகோதரர்கள் தவ்பா செய்தவர்களாக (மனம் திருந்தியவர்களாக) நம்மிடம் வந்துள்ளனர். அவர்களிடம் அவர்களுடைய போர்க் கைதிகளை திரும்பக் கொடுத்து விடுவதை நான் உசிதமானதாகக் கருதுகிறேன். உங்களில் எவர் இதற்கு மனப்பூர்வமாகச் சம்மதிக்கின்ரோ அவர் அவ்வாறே செய்யட்டும். (போர்க் கைதிகளை விடுதலை செய்யட்டும்) எவர் நமக்கு (இனி கிடைக்கவிருக்கும் வெற்றிகளில்) முதன் முதலாகக் கொடுக்கவிருக்கும் செல்வத்திலிருந்து அவருக்கு நாம் கொடுக்கின்றவரை தனது பங்கைத் தானே வைத்துக் கொள்ள விரும்புகின்றாரோ அவர் அவ்வாறே செய்யட்டும், (அதுவரை தன்னிடமே வைத்துக் கொள்ளட்டும்) என்று கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே* நாங்கள் மனப்பூர்வமாக அவர்களிடம் (அவர்களுடைய உறவினர்களான போர்க் கைதிகளை திருப்பித்) தந்து விடுகிறோம் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர்களிடம் உங்களில் எவர் சம்மதிக்கிறhர், எவர் சம்மதிக்கவில்லை என்று எமக்குத் தெரியாதாகையால் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் தலைவர்கள் வந்து (உங்கள் முடிவை) எங்களிடம் தெரிவிக்கட்டும் என்று கூறினார்கள். பிறகு அவர்கள் (தலைவர்கள்) திரும்பி வந்து, நபி (ஸல்) அவர்களிடம் தங்கள் போர்க் கைதிகளைத் திருப்பித் தர மனப்பூர்வமாகச் சம்மதிப்பதாகத் தெரிவித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2608
மர்வான் பின் ஹகம் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஹவாஸின் குலத்தார் முஸ்லிம்களாக வந்தபோது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், தங்கள் செல்வங்களையும் போர்க்கைதிகளையும் தங்களிடம் திருப்பித் தந்துவிடும்படி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், என்னுடன் நீங்கள் பார்க்கின்ற (இந்தப்) படைவீரர்களும் இருக்கின்றனர். உண்மை பேசுவது எனக்கு மிகவும் விருப்பமானதாகும். (உங்கள்) போர்க் கைதிகள் அல்லது (உங்கள்) செல்வம் இரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நான் (உங்களை) எதிர்பார்த்துக் காத்திருந்தேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்திலிருந்து புறப்பட்ட நேரத்திலிருந்து பத்துக்கு மேற்பட்ட இரவுகள் அவர்களை எதிர்பார்த்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் போர்ச் செல்வங்கள் அல்லது போர்க் கைதிகள் இரண்டிலொன்றைத் தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகி விட்டபோது, நாங்கள் எங்கள் போர்க்கைதிகளையே திரும்பப் பெற்றுக் கொள்கிறேhம்†† என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியுள்ள பண்புகளைக் கொண்டு புகழ்ந்தார்கள். பிறகு, (முஸ்லிம்களே!) உங்களுடைய இந்தச் சகோதரர்கள் தவ்பா செய்தவர் களாக (மனம் திருந்தியவர்களாக) நம்மிடம் வந்துள்ளனர். அவர்களிடம் அவர்களுடைய போர்க் கைதிகளை திரும்பக் கொடுத்து விடுவதை நான் உசிதமானதாகக் கருதுகிறேன். உங்களில் எவர் இதற்கு மனப்பூர்வமாகச் சம்மதிககின்றாரோ அவர் அவ்வாறே செய் யட்டும். (போர்க் கைதிகளை விடுதலை செய்யட்டும்) எவர் நமக்கு அல்லாஹ் (இனி கிடைக்கவிருக்கும் வெற்றிகளில்) முதன் முதலாகக் கொடுக்கவிருக்கும் செல்வத்திலிருந்து அவருக்கு நாம் கொடுக்கின்றவரை தனது பங்கைத் தானே வைத்துக் கொள்ள விரும்புகின்றhரோ, அவர் அவ்வாறே செய்யட்டும். (அதுவரை தன்னிடமே வைத்துக் கொள்ளட்டும்) என்று கூறினார்கள். மக்கள், அல்லாஹ் வின் தூதரே! நாங்கள் மனப்பூர்வமாக அவர்களிடம் (அவர்களுடைய உறவினர் களான போர்க் கைதிகளை திருப்பித்) தந்து விடுகிறோம் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர்களிடம் உங்களில் எவர் சம்மதிக்கிறார். எவர் சம்மதிக்கவில்லை என்று எமக்குத் தெரியாதாகையால் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் தலைவர்கள் வந்து (உங்கள் முடிவை) எங்களிடம் தெரிவிக்கட்டும் என்று கூறினார்கள். பிறகு அவர்கள் (தலைவர்கள்) திரும்பி வந்து, நபி (ஸல்) அவர்களிடம் தங்கள் போர்க் கைதிகளைத் திருப்பித் தர மனப்பூர்வமாகச் சம்மதிப்பதாகத் தெரிவித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2609
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதையுடைய ஒட்டகத்தை ஒருவரிடமிருந்து கடனாகப் பெற்றhர்கள். அதைக் கடன் கொடுத்தவர் நபி (ஸல்) அவர்களிடம் தனது கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டு வந்தார். (அப்போது அவர் நபியவர்களிடம் வற்று கடுமையாகப் பேசினார். ஆகவே, தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள்.) நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களைத் தடுத்து), உரிமையுடையவர் கடுமையாகப் பேச அனுமதியுண்டு என்று கூறினார்கள். பிறகு, அவரது சிறு வயது ஒட்டத்தை விடச் சிறந்ததைக் கொடுத்து அவரது கடனை அடைத்தார்கள். மேலும், உங்களில் எவர் அழகிய முறையில் கடனை அடைக்கிறhரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2610
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தேன். உமர் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான முரட்டு ஒட்டகம் ஒன்றின் மீது நான் சவாரி செய்து கொண்டிருந்தேன். அது நபி (ஸல்) அவர்களை முந்திக் கொண்டு சென்றது. அப்போது என் தந்தை உமர் (ரலி) அவர்கள், அப்துல்லாஹ்வே* நபி (ஸல்) அவர்களை யாரும் முந்தக் கூடாது என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், அதை எனக்கு விற்று விடுங்கள் என்று கேட்டார்கள். என் தந்தை, அதை உங்களுக்கு நான் விற்றுவிட்டேன் என்று கூறினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் வாங்கினார்கள். பிறகு என்னைப் பார்த்து, அப்துல்லாஹ்வே* இது உனக்குரியது. நீ விரும்பியபடி இதைப் பயன்படுத்திக் கொள் என்று சொன்னார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2611
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு பிராயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நான் (என் தந்தைக்குச் சொந்தமான) ஒரு முரட்டு ஒட்டகத்தின் மீது சவாரி செய்து கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (என் தந்தை) உமர் (ரலி) அவர்களிடம், இதை எனக்கு விற்று விடுங்கள் என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை விலைக்கு வாங்கி (கையகப்படுத்தாமலேயே), அப்துல்லாஹ்வே! இது உனக்குரியது என்று என்னிடம் கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2612
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் நுழைவாயிலருகே பட்டு அங்கி விற்கப்படுவதைக் கண்டு அல்லாஹ்வின் தூதரே* இதை நீங்கள் வாங்கி, ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுக்கள் உங்களைச் சந்திக்க வரும் போதும் அணிந்து கொண்டால் நன்றhயிருக்குமே என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், எவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லையோ அவர்தான் இதை அணிவார் என்று கூறினார்கள். பிறகு, சில பட்டு அங்கிகள் நபி (ஸல்) அவர்களுக்கு வந்தன. அவற்றிலிருந்து ஓர் அங்கியை நபி (ல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், எனக்கு இதை அணிந்து கொள்ளக் கொடக்கிறீர்களா? உதாரிதுடைய- அங்கியின் விஷயத்தில் நீங்கள் முன்பு ஒரு விதமாகச் சொன்னீர்களே என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், இதை நீங்கள் அணிந்து கொள்ள நான் உங்களுக்குத் தரவில்லை என்று பதிலளித்தார்கள். ஆகவே, உமர் (ரலி) அவர்கள் அதை மக்காவிலிருந்து இணைவைப்பவரான தன் சகோதரர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2613
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்களிடம் செல்லவில்லை. (திரும்பிப் போய்விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் சொல்ல, நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால்தான் திரும்பி வந்துவிட்டேன்) என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், தாம் பிரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்து கொள்கிறேன்) என்று கூறினார்கள். நபி (ல்) அவர்கள், அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு அவர்களுக்குத் தேவையுள்ளது என்று கூறினார்கள்.