Click here to download திருத்தம் செய்து வெளியிடப்பட்ட மூன்று தொடர்களின் மின் புத்தகம்
அல்லாஹ் என்பவன் யார்? அவனது உள்ளமைக்கு ஆரம்பம் என்பது சிந்திக்க முடியுமானதா?
இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் கிரந்தத்தில் அல்லாஹ்வின் உள்ளமை பற்றி பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: ” كَتَبَ اللهُ مَقَادِيرَ الْخَلَائِقِ قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِخَمْسِينَ أَلْفَ سَنَةٍ، قَالَ: وَعَرْشُهُ عَلَى الْمَاءِ – صحيح مسلم
வானங்களையும், பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்னால் படைப்புகளின் விதிகளை அல்லாஹ் எழுதி முடித்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
اللهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ ( أخرجه مسلم في صحيحه برقم/ ٢٧١٣ )
அல்லாஹ்வே! நீதான் ஆரம்பமானவன், உனக்கு முன்னர் யாரும் எவருமில்லை. நீதான் இறுதியானவன், உனக்குப் பின்னால் யாரும் எவரும் இல்லை. ( முஸ்லிம்/ 2713)
இந்த நபி மொழி அல்லாஹ்வின் ஆரம்பத்திற்கு முன்னால் ஒரு ஆரம்பம் இல்லை என்று விளக்குவது போன்று அவனது இறுதி நிலையானது. அவனே நிலையானவன், இறுதியானவன் என விளக்குகின்றது.
அல்லாஹ் தனது அர்ஷின் மீதிருந்தவாறு இன்றும் என்றும் மறுமை நாளிலும் ஆட்சி செய்வான் என்பதை அறியும் முஸ்லிம் பரிசுத்தமான நிலையில் தனது இரட்கனை மறுமை நாளில் சந்திக்க வேண்டும் என்றும் அந்த அல்லாஹ்வைக் காண ஆசைப்படுவான்.
அல்லாஹ் அங்கு நேரடியாக சமூகம் தரும் பொழுது இந்த உலகில் யார் அல்லாஹ் ஒருவனுக்காக தூய்மையான முறையில் சுஜுத் செய்தார்களோ அவர்கள் நிச்சயமாக அவனுக்கு சுஜுத் செய்யும் பாக்கியத்தைப் பெறுவார்கள் என நபி மொழிகள் கூறுகின்றன.
الإيمان بالمغيبات
புலன்களுக்கு எட்டாத மறைவானவைகளைக் கொண்டு நம்பிக்கை கொள்ள வேண்டிய அம்சங்கள்:
இஸ்லாத்தின் நம்பிக்கை கோட்பாட்டுப் பகுதிளில் புலன்களுக்கு புலப்படாத மறைவானவைகளைக் கொண்டு நம்பிக்கை கொள்வது முதல் தரத்தில் பார்க்கப்படுகின்றன.
இவற்றில் أركان الإيمان என்ற பகுதியோடு இன்னும் பல அம்சங்களை இணைத்து ஒரு முஸ்லிம் நம்பிக்கை கொள்ள வேண்டும் .
உதாரணங்கள்:
١) الحياة البرزخية
٢) الحشر والبعث والنشر
٣) الصراط
٤) الميزان
٥) عرض صحائف الأعمال
٦) الحساب والجزاء
٧) عبور الصراط
٨) الجنة والنار
٩) حمل ثمانية من ملائكة الله عرش الرحمن سبحانه وتعالى
١٠) رؤية الله سبحانه وتعالى في صورته الحقيقة جل علاه.
போன்ற பல அம்சங்கள் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை சார்ந்த கோட்பாடு விஷயங்களாகப் பார்க்கப்படுகின்றன.
மறுமை நாளில் அல்லாஹ்வைக் காணுதல் : رؤية الله في الآخرة
மறுமை நாளில் அல்லாஹ்வை முழு நிலவைப் போன்று காண்பீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறிய பிரகாரம் அந்நாளில் அல்லாஹ்
தனக்குரிய அழகிய தோற்றத்தோடு தனது அடியார்களிடம் காட்சி தருவான். அப்போது அடியார்கள் அவனைத் தமது கண்களால் நேரடியாகக் காண்பர் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை சார்ந்த அம்சங்களில் ஒன்றாகும்.
عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ عِيَانًا» ( أخرجه البخاري برقم/ ٧٤٣٥ )
நிச்சயமாக உங்கள் இரட்சகனை நீங்கள் கண்களால் காண்பீர்கள் ( புகாரி/ 7435)
«إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ لاَ تُضَامُونَ فِي رُؤْيَتِهِ ( البخاري)
பூரமான இந்த நிலாவைப் பார்ப்பதில் நீங்கள் சிரமப்படாதது போன்று நிச்சயமாக உங்கள் இரட்சகனைக் கண்களால் நீங்கள் காண்பீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ لِأَهْلِ الجَنَّةِ: يَا أَهْلَ الجَنَّةِ؟ فَيَقُولُونَ: لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ، فَيَقُولُ: هَلْ رَضِيتُمْ؟ فَيَقُولُونَ: وَمَا لَنَا لاَ نَرْضَى وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ، فَيَقُولُ: أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ، قَالُوا: يَا رَبِّ، وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ؟ فَيَقُولُ: أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي، فَلاَ أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا ”
(أخرجه البخاري في صحيحه برقم/٦٥٤٩ )
அல்லாஹ் சுவனவாதிகளை நோக்கி , சுவனவாதிகளே! என அழைப்பான். அவர்கள் உனது அழைப்புக்கு கட்டுப்பட்டோம், அது நற்பாக்கியம் உள்ளதாக அமையட்டும் எனக் கூறுவார்கள் . அப்போது அவன் (எனது வெகுமதிகளை) நீங்கள் மனதாறப் பொருந்திக் கொண்டீர்களா? எனக் கேட்பான். அவர்கள் எங்கள் இரட்சகனே! நாம் பொருந்திக் கொள்ளாமல் இருப்பதற்கு எமக்கென்ன நேர்ந்துவிட்டது? நிச்சயமாக நீ உனது படைப்புக்களில் ஒருவருக்கும் கொடுக்காத (பல வெகுமதிகளை) எமக்கு வழங்கி இருக்கின்றாயே எனக் கூறுவார்கள். நான் அதைவிடவும் மகிழ்ச்சி கரமான ஒன்றை உங்களுக்கு வழங்கப்போகின்றேன் எனக்கூறுவான். அவர்கள் எமது இரட்சகனே! இதைவிடவும் சிறந்ததா என ஆச்சரியமாக கேட்பார்கள். உடனே அல்லாஹ் எனது மனப் பொருத்தத்தை உங்கள் மீது இறக்கி வைக்கின்றைன். ஆகவே நான் இதன் பிறகு உங்கள் மீது கோபம் கொள்ள மாட்டேன் என அல்லாஹ் கூறுவான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (புகாரி/ 6549)
முஸ்லிம் கிரந்தத்தில் இடம் பெறும் நபி மொழியின் பின்வரும் செய்தியும் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது. அதாவது
” إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، قَالَ: يَقُولُ اللهُ تَبَارَكَ وَتَعَالَى: تُرِيدُونَ شَيْئًا أَزِيدُكُمْ؟ فَيَقُولُونَ: أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا؟ أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ، وَتُنَجِّنَا مِنَ النَّارِ؟ قَالَ: فَيَكْشِفُ الْحِجَابَ، فَمَا أُعْطُوا شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنَ النَّظَرِ إِلَى رَبِّهِمْ عَزَّ وَجَلَّ ” أخرجه مسلم في صحيحه برقم/ ٢٩٧)
சுவனவாதிகள் சுவனத்தில் நுழைந்ததும் உங்களுக்கு ஏதாவது அதிகமாகத் தரவேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்களா? என அல்லாஹ் கேட்பான் . அதற்கு அவர்கள் நீ எமது முகங்களை வெண்மையாக்கி, நரகில் இருந்து எம்மைப் பாதுகாத்து, நீ எம்மை இந்த சுவனத்தில் நுழைவிக்கவில்லையா! (அதுவே போதுமானது) எனக் கூறுவார்கள். உடனே அல்லாஹ் , தனது திரையை நீக்குவான். அவர்கள் தமது இரட்சகனைப் பார்க்கும் பாக்கியத்தை விட மேலானதொரு பாக்கியம் கொடுக்கப்பட்டிருக்கமாட்டார்கள் ; என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்/ 297)
இந்நிகழ்வு மறுமை நாளில் நிகழும் போது அல்லாஹ் தனக்கென புதிதாக உருவாக்கிக் கொண்ட தோற்றத்தை முஸ்லிம்கள் பார்ப்பது கிடையாது.
மாறாக, அவன் தற்போது எந்த தோற்றத்தில் அர்ஷில் இருந்து ஆட்சி செய்கின்றானோ அதே தோற்றத்தில் சற்றும் மாற்றமின்றி சமூகளிப்பதாகும்.
எனவே அல்லாஹ்வுக்கென அல்லாஹ் அவனது கலாமாகிய அருள் மறை குர்ஆனிலும், அவனது இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அவர்களின் ஹதீஸ்கள் வாயிலாகவும் அறிவித்த அல்லாஹ்வின் தோற்றப் பண்பை உப்புச் சப்பில்லாத வழிகெட்ட பிரிவுகளின் ஆதாரங்கள் மூலம் மறுத்து மக்களை வழிகெடுக்கும் ஹஸரத்மார்கள் இது பற்றி சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ் உண்மையானவன்:
?நாம் நம்புகின்ற அல்லாஹ் அர்ஷின் இரட்சகன்.
?அவன் யாரோடும் கலந்தும் இல்லை. கலப்பதுமில்லை.
?அவன் கலவைப் பொருளும் கிடையாது, அவன் மனிதனும் அல்ல,
?அவன் ஆணுமில்லை, பெண்ணுமில்லை.
?அவன் காற்றும் இல்லை, வாய்வும் இல்லை.
அவன் உண்மையான அல்லாஹ். அவனது உள்ளமைக்கு முன்னால் எந்த ஒரு உள்ளமை கொண்டுஇருக்க வில்லை.
மனிதர்களில் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத நபி (ஸல் அவர்கள்தான் அல்லாஹ்வைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்.
அவர்களின் இரவு நேர நீண்ட பிரார்த்தனை ஒன்றில் அப்படித்தான் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَهَجَّدَ مِنَ اللَّيْلِ قَالَ: «اللَّهُمَّ رَبَّنَا لَكَ الحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَلَكَ الحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، أَنْتَ الحَقُّ، وَقَوْلُكَ الحَقُّ، وَوَعْدُكَ الحَقُّ، وَلِقَاؤُكَ الحَقُّ، وَالجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ … (أخرجه البخاري برقم/ ٧٤٤٢)
?எங்கள் இரட்சகனே! உனக்கே புகழ் யாவும் உரித்தானது. நீதான் வானங்கள் மற்றும் பூமியின் நிர்வாகி,
? எங்கள் இரட்சகனே! உனக்கே புகழ் யாவும் உரித்தானது. வானங்கள், பூமி, மற்றும் அவற்றில் இருப்பவர்கள் (வாழ்பவர்களின்) அதிபதியும் நீயே!
? உனக்கே புகழ் யாவும் உரித்தானது. வானங்கள், பூமி, மற்றும் அவற்றில் உள்ளவைகளின் பிரகாசமும் நீயே!
?நீ சத்தியமானவன், உண்மையானவன்.(மற்றவைகளை பொய்யானவை)
أَنْتَ الحَقُّ، وَقَوْلُكَ الحَقُّ، وَوَعْدُكَ الحَقُّ، وَلِقَاؤُكَ الحَقُّ، وَالجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ
?உனது கூற்றும் உண்மையாது.
? உனது வாக்குறியும் உண்மையானது.
?(மறுமையில்) உனது சந்திப்பும் உண்மையானதே !
?சுவர்க்கமும் உண்மையானது,
? நரகமும் உண்மையானது.
?மறுமை நாள் என்பதும் உண்மையானதே என்ற நெடிய பிரார்த்தனையின் மூலம் அல்லாஹ் உண்மையான். மற்றவைகள் பொய்யானவைகள் என நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.( புகாரி/ 7442)
அல்லாஹ் அர்ஷின் மீதில்லையானால் அவனது அர்ஷை சுமக்கும் வானவர்கள் ஏன் தேவைப்பட்டனர்?
தொடராக அல்லாஹ் அர்ஷின் மீதிருந்து வருவதை உணர்த்தும் மிஃராஜ் நிகழ்வு. மிஃராஜ் நிகழ்வு முஸ்லிம் சமூகத்தில் உள்ள மக்களின் இறைகட்டுப்பாடு எவ்வாறு அமைய வேண்டும் எனக் கற்பிக்கின்ற முக்கிய நிகழ்வாகும்.
சில மணி நேரங்களில் பல கோடி தூரத்தில் உள்ள ஓர் இடம் சென்று அல்லாஹ்வின் தூதர் அர்ஷின் இரட்சகனோடு ஏழு வானங்களுக்கும் அப்பால் திரைமறைவில் உரையாடி பல கட்டளைகளைப் பெற்று சில நொடிகளில் மீண்டும் பூமிக்கு அதுவும் குறித்த சில மணி நேரங்களில் மீண்டும் வந்தார்கள் என்பது ஒரு இரவில் சாத்தியமா? அதை பகுத்தறிவு அங்கீகரிக்குமா? போன்ற வழிகேடான கேள்விகளுக்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உயிரோடு இருந்த போது பதில் அளித்தார்கள். எனவே அவர்கள் அங்கு சென்று திரும்பியதுதான் அதற்கான ஆதாரமாகும்.
அந்த நிகழ்வு,
?அல்லாஹ் எவ்வாறான வலிமை, ஆற்றல் மிக்கவன்,
?அல்லாஹ்வை இந்த உலகில் நேருக்கு நேர் காணவே முடியாது,
?அல்லாஹ் பேசுவது, உரையாடுவது, அது வானவர்கள் செவிமடுப்பது
?அல்லாஹ்வின் உயர்ந்த அந்த அர்ஷ்,
?ஆதம் நபி (அலை), அவர்கள் முதல்,
?முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வரை வந்த இறைத் தூதர்கள் அனைவரும் அல்லாஹ்வை அவனது உயர்ந்த அர்ஷின் மீதிருப்பதையே நம்பி போதனையும் செய்துள்ளனர்,
?சுவனங்கள் வானத்தில் உள்ளன,
?அல்லாஹ் தனது அடியார்கள் தொடர்பாக தாய் ஏட்டை வைத்துள்ளான்.
? காத்த நகர் வழிகேடன் அப்துல் ரவூஃப் அல்லாஹ்வைப் பற்றி நானும் அவனே என போதித்தாலும் அவன் அவனாகப் போவதில்லை,
?பர்ளான தொழுகையின் முக்கியத்துவம்,
?அல்லாஹ் தனது அடியார்கள் மீது வைத்துள்ள கருணை, அன்பு, பாசம் போன்ற பல முக்கிய செய்திகளை பாடமாகக் கொண்ட சிறப்பான நிகழ்வாகும்.
இப்போது மிஃராஜ் இரவு கடமையாக்கப்பட்ட தொழுகை தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.
«فَفَرَضَ اللهُ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلَاةً»، قَالَ: فَرَجَعْتُ بِذَلِكَ حَتَّى أَمُرَّ بِمُوسَى، فَقَالَ مُوسَى عَلَيْهِ السَّلَامُ: مَاذَا فَرَضَ رَبُّكَ عَلَى أُمَّتِكَ؟ قَالَ: قُلْتُ: فَرَضَ عَلَيْهِمْ خَمْسِينَ صَلَاةً، قَالَ لِي مُوسَى عَلَيْهِ السَّلَامُ: فَرَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ، قَالَ: فَرَاجَعْتُ رَبِّي، فَوَضَعَ شَطْرَهَا، قَالَ: فَرَجَعْتُ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَامُ، فَأَخْبَرْتُهُ قَالَ: رَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ، قَالَ: فَرَاجَعْتُ رَبِّي، فَقَالَ: هِيَ خَمْسٌ وَهِيَ خَمْسُونَ لَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَيَّ، قَالَ: فَرَجَعْتُ إِلَى مُوسَى، فَقَالَ: رَاجِعْ رَبَّكَ، فَقُلْتُ: قَدْ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي، قَالَ: ثُمَّ انْطَلَقَ بِي جِبْرِيلُ حَتَّى نَأْتِيَ سِدْرَةَ الْمُنْتَهَى فَغَشِيَهَا أَلْوَانٌ لَا أَدْرِي مَا هِيَ؟ قَالَ: ثُمَّ أُدْخِلْتُ الْجَنَّةَ، فَإِذَا فِيهَا جَنَابِذُ اللُّؤْلُؤَ، وَإِذَا تُرَابُهَا الْمِسْكُ
எனது சமுதாயத்தினர் மீது அல்லாஹ் ஐம்பது நேரத் தொழுகைகளைக் கடமையாக்கினான். அவற்றைக் கொண்டு நான் திரும்பி வரும் போது வழியில் மூஸா (அலை) அவர்கள் கண்டு உனது சமுதாயத்தினர் மீது உமது இரட்சகன் எதைக் கடமையாக்கி உள்ளான் எனக் கேட்டு உமது சமூகம் அதைச் செய்ய சக்தி அற்றவர்கள். (பலவீனமான வர்கள்) எனவே உமது இரட்சகனிடம் நீர் மீண்டும் சென்று அதில் குறைப்பு சலுகைகளைப் பெற்றுக் கொள் என மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பினார்கள். நபி ஸல் அவர்களும் ஐந்து ஐந்தாகக் குறைத்து கொண்டு வந்தார்கள். இறுதியில் ஐந்து நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் கூறியதும் அதையும் குறைத்துக் கொள்ள மூஸா நபி ( அலை) அவர்கள் ஆலோசனை கூறிய போது நபி ஸல் அவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா?
قَدْ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي
(இனியும் செல்ல) எனது இரட்சகனிடம் இருந்து நான் வெட்கப்படுகின்றேன் என்றார்கள். (புகாரி).
அப்படியானால், அல்லாஹ்வுக்கென இருக்கும் அவன் அறிந்த, நாம் அறியாத ஒரு அழகிய தோற்றம் அவனுக்கு உண்டு என்பதை நாம் மறுக்க முடியுமா?
அஷ்அரிய்யாக்கள் புலம்புவது போன்று அல்லாஹ் ஒரு ஜடம் (أعوذ بالله) போன்ற நிலையில் இருந்தால் அல்லாஹ் பேசுபவன், கட்டளையிடுபவன் என்றெல்லாம் ஏன் இடம் பெற வேண்டும்? இந்த ஹதுஸின் மூலம் அல்லாஹ் என்பவன் அவனது படைப்பாக முடியாது என்பதை மறுக்க முடியுமா?
அல்லாஹ் அர்ஷில் என்றும் இருக்கின்றான் என்பதை பல நூறு ஹதீஸ்கள் தெளிவுபடுத்தி உள்ளன. அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
இரவு வேளைகளில் வானில் இருந்து எறியப்படும் நட்சத்திரங்கள் தொடர்பான செய்தியில் நிச்சயமாக அவை உலகில் முக்கியமான ஒரு மனிதனின் பிறப்பிற்காகவோ இறப்பிற்காகவோ வீசி எறியப்படுவதில்லை. மாறாக அதற்கான காரணம் இதுதான்.
عن عَلِيُّ بْنُ حُسَيْنٍ: …. «فَإِنَّهَا لَا يُرْمَى بِهَا لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنْ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى اسْمُهُ، إِذَا قَضَى أَمْرًا سَبَّحَ حَمَلَةُ الْعَرْشِ، ثُمَّ سَبَّحَ أَهْلُ السَّمَاءِ الَّذِينَ يَلُونَهُمْ، حَتَّى يَبْلُغَ التَّسْبِيحُ أَهْلَ هَذِهِ السَّمَاءِ الدُّنْيَا» ثُمَّ قَالَ: ” الَّذِينَ يَلُونَ حَمَلَةَ الْعَرْشِ لِحَمَلَةِ الْعَرْشِ: مَاذَا قَالَ رَبُّكُمْ؟ فَيُخْبِرُونَهُمْ مَاذَا قَالَ: قَالَ فَيَسْتَخْبِرُ بَعْضُ أَهْلِ السَّمَاوَاتِ بَعْضًا، حَتَّى يَبْلُغَ الْخَبَرُ هَذِهِ السَّمَاءَ الدُّنْيَا، فَتَخْطَفُ الْجِنُّ السَّمْعَ فَيَقْذِفُونَ إِلَى أَوْلِيَائِهِمْ، وَيُرْمَوْنَ بِهِ، فَمَا جَاءُوا بِهِ عَلَى وَجْهِهِ فَهُوَ حَقٌّ، وَلَكِنَّهُمْ يَقْرِفُونَ فِيهِ وَيَزِيدُونَ ” (مسلم/ ٢٢٢٩)
எவனது பெயர் நாமம் உயந்து அவன் மகத்துவமிக்கவனாக உயர்ந்துவிட்டானோ அந்த அல்லாஹ் வானத்தில் ஒரு விஷயத்தை தீர்ப்பளித்து விட்டால் அர்ஷை சுமக்கும் வானவர்கள் அவனைத் துதிப்பார்கள். பின்னர் (செய்தி ஜிப்ரீல் அலை மூலம் சொல்லப்பட்டதும்) அதற்கும் கீழ் வானில், அதற்கும் கீழ்வானில் உள்ள வானவர்கள் என அடிவாரத்தில் இருக்கும் வானவர்கள் வரை அல்லாஹ்வைத் துதிப்பார்கள். பின்னர், அர்ஷை சுமக்கும் அது வானவர்களுக்கும் சென்றடையும், பின் அடுத்து வானத்தில் உள்ள வானவர்கள் அர்ஷை சுமக்கும் வானவர்களிடம் உங்கள் இரட்சகன் என்ன கூறியுள்ளான் எனக் கேட்பார்கள். அவர்கள் தமது இரட்சகன் போதித்தது பற்றி ஏனையவர்களோடு பரிமாறிக் கொள்வார்கள். இவ்வாறு வானத்தில் உள்ள வானவர்கள் ஒருவரை ஒருவர் விசாரித்து கீழ்வானம் வரை அந்த செய்தியைப் பரிமாறிக் கொள்வார்கள். (மக்களை வழிகெடுப்பதற்காக உள்ள) ஜின்களில் ஒருசாரார் கீழ் வானில் வானவர்கள் பேசிக்கொள்ளும் சிலதை (அரைகுறையாகத்) திருடி தமது மனித தோழர்களுக்கு அறிவிப்பதற்காக அதில் இருந்து திருட்டுத்தனமாக செவிமடுக்கும் போது அந்த நட்சித்தரங்களைக் கொண்டு வானவர்களால் அவர்கள் தாக்கி அழிக்கப்படுவார்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) .
மற்றொரு ஹதீஸில் அதில் அவர்கள் ஒரு உண்மையையும் 99 பொய்களையும் கலந்து தமது மனிதத் தோழர்களின் காதுகளில் (டொக்) எனப் போட்டுவிடுவார்கள். எனவே நீங்கள் ஜோதிடம் சொல்வோரிடம் வராதீர்கள் எனக் கூறினார்கள் என வந்துள்ளது.
மறுமையிலும் அல்லாஹ் தனது அர்ஷின் மீதிருதனந்தவாறே தீர்ப்பளித்து ஆட்சி செய்வான்.
அல்குர்ஆன் இது பற்றி பின்வருமாறு விபரிக்கின்றது.
فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ (15) وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ (16) وَالْمَلَكُ عَلَىٰ أَرْجَائِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ (الحاقة/ ١٥ ١٧)
அப்போது நிகழக்கூடிய நிகழ்வு நடந்து விடும். வானமும் பிளந்து, அது பலவீனமானதாகி விடும். வானவர்கள் பலபாகங்களிலும் (பரவிக்) காணப்படுவார்கள். அந்நாளில் உமது இரட்சகனின் அர்ஷை எட்டு வானவர்கள் சுமப்பார்கள். (அல்ஹாக்கா: 15-17) .
அல்லாஹ் அவனது அர்ஷின் மீதில்லாதிருந்தால் வானவர்கள் அதனை ஏன் சுமந்து வரவேண்டும்?
எனவே அல்லாஹ் அர்ஷின் மீதில்லை என்பதும், நானும் அவனாகலாம் என்பதும் அல்லாஹ்வை தெளிவாக நிராகரிக்கச் சொல்லும் போதனைகளே அன்றி வேறில்லை.
அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களின் தன்மைகள்:
அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களை சாதாரண மனிதர்கள் போன்று கற்பனை செய்வதாலும், அல்லாஹ் தேவையற்றவன், எனவே அர்ஷ் என்ற படைப்பு அல்லாஹ்வுக்கு தேவையற்றது என சாதாரண மனிதர்கள் போன்று முடிவு செய்வதாலும், அர்ஷின் மகத்துவம் பற்றிய எவ்வித தெளிவும் இல்லாததன் காரணமாகவும் அல்லாஹ் அர்ஷின் மீதிருப்பதை நிராகரிக்க சிலருக்கு ஏதுவானதாகிவிடுகின்றது.
எனவே அந்த வானவர்களின் பெறுமானம் , தன்மைகள், ஆற்றல்கள் என்பன பற்றியும் முஸ்லிம் ஒருவர் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும்.
அப்போதுதான் அல்லாஹ் அர்ஷின் மீதுள்ளான் என்பதை முடிவு செய்ய முடியும்.
((أُذن لي أن أحدث عن ملك من ملائكة الله من حملة العرش، إن ما بين شحمة أذنه إلى عاتقه مسيرة سبعمائة عام ((أبو داود ))
அர்ஷை சுமக்கும் அல்லாஹ்வின் வானவர்களில் ஒரு வானவரைப் பற்றி அறிவிப்பதற்கு எனக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள் : அவர்கள் ஒருவரின் காதின் சோணைக்கும் ( மடல்) அவரது தோழ் புயத்திற்கும் இடைப்பட்ட தூர அளவு (700) எழுநூறு ஆண்டுகள் நடை தூரமாகும் எனக் கூறினார்கள்.(அபூதாவூத்).
அல்லாஹ் அர்ஷின் மீதில்லையானால் அவனது அர்ஷை மகத்துவம் மிக்க அவனது வானவர்கள் ஏன் சுமக்க வேண்டும்?
வானத்தில் இருந்து அல்லாஹ்வின் கட்டளைகள் ஏன் வரவேண்டும்?
வானவர்கள் ஏன் அங்கிருந்து உலகுக்கு இறங்கி வர வேண்டும்? மீண்டும் அங்கு சென்று அல்லாஹ்வுடன் ஏன் உரையாட வேண்டும் ?
என்றெல்லாம் சிந்திக்கின்ற ஒரு முஸ்லிம் அல்லாஹ் வானில் உள்ள அவனது அர்ஷின் மேலிருந்து சூழ்ந்து அறியும் அவனது அபரிமிதபான அறிவாற்றலால் உலகை ஆட்சி செய்வதை அறிந்து கொள்வான்.
அல்லாஹ் தினமும் அடிவானத்திற்கு இறங்குவது உணர்த்துவது என்ன?
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي، فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ “
தினமும் இரவில் மூன்றில் ஒரு பகுதி மீதிருக்கும் போது நமது இரட்சகன் அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்குகின்றான். என்னிடம் யார் பிரார்த்தனை செய்வாரோ அவருக்கு நான் பதில் அளிப்பேன்,
என்னிடம் யார் கேட்கின்றாரோ நான் அவருக்கு கொடுப்பேன், என்னிடம் யார் பாவமன்னிப்பு வேண்டுவாரோ நான் அவருக்கு பாவமன்னிப்பு வழங்குவேன் எனக் கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .(புகாரி/முஸ்லிம்)
குறிப்பு: நானே அவன் எனக் கூறும் அதிகாரம் காத்த நகர் மனிதக் கடவுள் ரவூஃபுக்குண்டா என்று அவரது சீடர்கள் யோசிக்க வேண்டும்.
?மேற்படி ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதி மற்றும் பல ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெறும்,
? முதவாதிர் தரத்திர் متواتر தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.
?எனவே அதனை நாம் எக்காரணம் கொண்டும் மறுக்க முடியாது.
மாற்றமாக மார்க்க விளக்கத்திலும் மொழி அறிவிலும் சிறந்து விளங்கிய நபித்தோழர்கள் இறங்கி வருதல் என்பதற்கு முறைமை கற்பிக்காது, உருவம் கூறாது, கற்பனையும் செய்யாது , அருள் இறங்குகின்றது என்றும் நம்பாது எவ்வாறு அதன் வெளிப்படையான பொருளில் நம்பிக்கை னனகொண்டார்களோ அவ்வாறே நாமும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதுவே நபி (ஸல்) அவர்கள் நம்பிய, போதித்த நம்பிக்கையாகும்
அல்லாஹ் தினம் தினம் அர்ஷில் இருந்து, இறங்கி வருவதால் அவனது அர்ஷ் காலியாகும் என்பது சிலருக்கு கவலை போலும்!
இவ்வாறான அற்ப கற்பனைகளால் இந்த ஹதீஸுக்கு அல்லாஹ்வின் அருள் இறங்குவதாக நபித்தோழர்களின் நம்பிக்கைக்கு மாற்றமாக பிற்காலத்தில் வந்தவர்களின் உளரல்களையும் கற்பனைகளைகளையும் முன்வைத்து அதனை இவ்வாறு பிழையாக விளக்க முற்படுவதும், அல்லது ஹதீஸில் தெளிவாக வந்திருப்பதை விட தமது கற்பனைகளை முற்படுத்துவதும் ஜஹ்மிய்யா , முஃதஸிலா அஷ்அரிய்யா போன்ற வழிகெட்ட பிரிவுகளின் போக்காகும்.
எனவே அந்தப் பிரிவுகளின் விளக்கத்தை மீண்டும் உயிர்பிக்கும் நவீன வழிகேட்டு வழிகாட்டிகளின் விளக்கம் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
அல்லாஹ்வின் அருள் இறங்கி வருவதாகக் கூறப்படும் விளக்கம் சரியா?
அல்லாஹ் தனது அருளைக் குறிக்க பயன்படுத்தும்,
- கருணை – الرحمة
- சிரேஷ்ட அருள் – النعمة
- மேலதி அருள் – الفضل
போன்ற தெளிவான எந்த வாசகங்களும் இங்கு இடம் பெறாமல் இதில் அல்லாஹ் இறங்குவதாக வந்துள்ளது.
எனவே, அவன் فعال لما يريد – ولا يسأل عما يفعل
தான் நாடுவதைச் செய்யக் கூடியவன், அவன் செய்வது பற்றி யாராலும் அவனை விசாரிக்க முடியாது என்று அல்குர்ஆன் வசனங்களின் வரும் பிரகாரம் இந்த ஹதீஸை நம்புவதும் அதனை இறங்கி வருதல் என்ற வெளிப்படையான பொருளிலேயே நபித்தோழர்களும் நம்பி,
விசுவாசித்தது போன்று நாமும் விசுவாசம் கொள்வது நமது கடமையாகும்.
அதற்கு மாற்றமாக அல்லாஹ் அர்ஷிலும் இல்லை. உலகம் முழுவதிலும் இல்லை, எங்கும் எதிலும் இல்லை. அனைத்தும் அல்லாஹ்தான் என மக்களை மடையர்களாக்கும் அரைகுறை விளக்கங்களை நம்புவது வழிகேடாகும்.
பொய்யான தெய்வங்கள் பற்றி இஸ்லாம் பின்வரும் அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது .
அல்லாஹ் என்பவன் யார்? என வினவுவோருக்கு மிகத் தெளிவாக விளக்கிய இஸ்லாமிய மார்க்கத்தில் பொய்யான தெய்வங்கள், கற்பனைக் கடவுளர்கள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதனால் அந்த நல்லடியார்களை மனிதர்கள் தமது தேவைகளை நிறைவேற்ற, வணங்கி வழபடத் தகுதியானவையாக நம்பி அவர்களை இடைத் தரகர்களாக எடுத்து அவர்களிடம் தமது தேவைகளை நிறைவேற்ற வேண்டுவதை
இணைவைப்பு என்ற இறை மன்னிப்பில்லாத மிகப் பெரும் பாவங்களில் ஒன்றாக நோக்குகின்றது
ஒருவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்த நிலையில் மரணித்தால் அல்லாஹ் அவர் மீது சுவனத்தை ஹராமாக்கி விடுவான் என்று குர்ஆன் தெளிவுபடுத்தி இருக்கின்றது.
அதன் காரணமாகவே மனிதர்கள் தம்மீதுள்ள தமது இரட்சகனின் கடமையான நம்பிக்கையை பரிசுத்தமானதாக்கி வாழ வேண்டும் எனப் பணிக்கின்றது.
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ ۖ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ (لقمان /١٣)
“எனதருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே! நிச்சயமாக இணை வைத்தல் (அல்லாஹ்வுக்குச் செய்யும்) மிகப் பெரும் அநீதியாகும் என லுக்மான் அவர்கள் தனது மகனுக்கு உபதேசித்துக் கூறியதை நினைவு கூர்வீராக! (லுக்மான்.13)
அல்லாஹ்வின் தூதர்களில் ஒருவரான நபி ஈஸா மஸீஹ் ( அலை) அவர்களை கடவுளாக எடுத்துக் கொண்ட மக்களின் நிலை பற்றி பின்வருமாறு விளக்கப்படுகின்றது
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ۖ وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ ۖ إِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ ۖ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ (المائدة/٧٢)
மஸீஹ் பின் மர்யம் அல்லாஹ் தான் எனக் கூறியோர் காஃபிரானார்கள். அந்த மஸீஹ் (ஈஸா) அவர்களோ இஸ்ரேலின் சந்ததியினரே! எனது இரட்சகனும் , உங்கள் இரட்சகனுமாகிய அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள் எனப்போதித்தார். நிச்சயமாக அல்லாஹ்வைக் கொண்டு யார் இணை கற்பிக்கின்றானோ அவன் மீது நிச்சயமாக அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கி விடுவான். அவனது ஒதுங்கு தளம் நரகமாகும். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்கள் எவரும் இல்லை. ( அல்மாயிதா : 72).
இங்கு ஈஸா நபி (அலை) அவர்களை அல்லாஹ் என்றும் அவனது வெளிப்பாடு என்றும் சொன்னவர்கள் காஃபிர்கள், இணவைப்பாளர்கள் , இணைவைப்போரின் கூலி நரகமாகும் என அறிவிப்பதை புறம் தள்ளி விட்டு அனைத்தும் அல்லாஹ், அனைத்தும் அல்லாஹ்வின் வெளிப்பாடு எனக் கூப்பாடு போடும் அத்வைதிகள் , சூஃபிக்கள் என்போர் அல்லாஹ் இவன்களின் தேவைகளை நிறைவேற்றுவது போன்று அவ்லியாக்கள், நாதாக்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புகின்றனர்.
இப்படியானவர்கள் என்ன பட்டியலில் சேர்க்கப்படல் வேண்டும்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
பொய்யான தெய்வங்களை எவ்வாறு பிரித்து அறியலாம்?
அல்லாஹ் அல்லாது வணங்கப்படும் அனைத்தும் பொய்யான தெய்வங்கள் என்பதாக நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அது பற்றி இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
- அல்லாஹ்வுடன் இணைத்து பிரார்த்திக்கப்படும் شركاء என்ற இணையான தரகர்கள்/ தெய்வங்கள் இவைகள் அல்குர்ஆனில் شركاء கூட்டாளிகள், இணை தெய்வங்கள் போன்ற பொருள்களில் இடம் பெறுகின்றன.
أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُمْ مِنْ الدِّينِ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهُ (الشورى / ٢١)
அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிடாததை மார்க்கமாக்கும் இணை தெய்வங்கள் உண்டா? எனக் குர்ஆன் கேள்வி எழுப்பி இருப்பதன் மூலம் இதனைப் புரிந்து கொள்ளலாம். இணையான கடவுள் கோட்பாட்டை குர்ஆன் நிராகரிப்பதோடு மற்றோர் இடத்தில் இவ்வாறு கேள்வியும் எழுப்புகின்றது.
قلْ هَلْ مِنْ شُرَكَائِكُمْ مَنْ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ ﴿٣٤ يونس)
உங்கள் இணை தெய்வங்களில் யாராவது படைப்பைத் தொடக்கத்தில் படைத்து, (மரணத்தின்) பின்னால் மீண்டும் (உயிர் கொடுத்து) எழுப்புவோர் உண்டா? ( யூனுஸ். 34)
இந்தக் கேள்விக்கு மறுமையிலும் கூட பதில் கூற முடியாது. நமது சிறு பராயத்தில் பொருள் அறியாது கற்றுத் தரப்படும் திக்ர் வரிகளில் لا شريك له அந்த அல்லாஹ்வுக்கு இணைதுணை யாருமில்லை எனக் கூறியும் நமது முஸ்லிம் மக்கள் பிற்காலங்களில் இணைவைப்பாளர்களாக மாறக்காரணம்தான் என்ன?
2. أندادا ஈடான/ நிகரான தெய்வங்கள்:
இந்தப் பிரயோகம் அல்குர்ஆனில் அல்லாஹ் அல்லாது அவனுக்கு நிகராக நிறுத்தப்படும் சிலைகள், அவ்லியாக்கள் ஜின்கள், ஷைதான்கள் போன்ற எந்த ஒன்றை ஒருவர் தனது கடவுளாக சிபாரிசு செய்தாலும் அதுவும் பொய்யான தெய்வமே!
إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ ﴿١٩٤ الأعراف﴾
நீங்கள் அல்லாஹ்வை அன்றி யாரை அழைத்து பிரார்த்தனை செய்கின்றீர்களோ நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்ற (சாதாரண) அடியார்களே! ( அல்அஃராஃப் :194)
வேதம் கொடுக்கப்பட, மக்கள் தமது மதகுருக்கள், மற்றும் அறிஞர்கள் போதிப்பதை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றியதால் பின்வரும் இறை வசனம் இறங்கியது.
اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَٰهًا وَاحِدًا ۖ لَّا إِلَٰهَ إِلَّا هُوَ ۚ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ (التوبة – ٣١ ) ﴿٣١ التوبة﴾
அவர்கள் தமது அல்லாஹ்வை விடுத்து தமது மத குருமார்கள் மற்றும் துறவிகளை மற்றும் ஈஸா மஸீஹ் அவர்களையும் கடவுளர்களாக எடுத்துக் கொண்டனர். தனித்த வணங்கி வழிபடத்தகுதியான ஒரே அல்லாஹ்வை மட்டுமே அன்றி, வேறு யாரையும் வணங்க அவர்கள் கட்டளையிடப்படவுமில்லை. அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். ( அத்தவ்பா: 31)
மேற்படி வசனத்தை நபி அதீ பின் ஹாதிம் (ரழி) அவர்கள் முன்னிலையில் (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டிய போது,
قال عدي بن حاتم قلت يا رسول الله إنهم لم يكونوا يعبدونهم قال أجل ولكن يحلون لهم ما حرم الله فيستحلونه ويحرمون عليهم ما أحل الله فيحرمونه فتلك عبادتهم لهم . (سنن الترمذي/ سنن البيهقي الكبرى.
அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் அந்த மதகுருமார்களை வணங்கவில்லையே எனக் கூறியதும் , ஆமாம். இருந்தாலும் அவர்கள் (தமது மனோ இச்சைப்படி) எதை ஹலாலாக்கினார்களோ அதனை அம்மக்கள் ஹலால் என்றும், அவர்கள் எதனைத் தடை செய்தார்களோ அதனை அம்மக்களும் தடுத்தும் வாழ்ந்தார்கள் தானே! எனக் கேட்க. அதீ (ரழி) அவர்கள் உண்மைதான் எனப் பதில் அளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவர்களை வணங்குவது என விளக்கினார்கள்.( நூல்: சுனன் திர்மிதி, அல்பைஹகி)
மேற்படி வசனம் அவ்லியா வழிபாடு, கப்ரு வணக்கம் செய்வோரைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அவ்லியாக்களிடம் துஆக் கேட்க, கஷ்டங்களை அகற்றும்படி பிரார்த்திக்க நமது ஆலிம் உலமாக்கள் தானே சொல்கின்றனர். அவர்கள் மார்க்கம் படித்த மேதைகள்தானே என்ற அசமந்தப் போக்கில் நடப்பவர்கள் நிச்சயமாக நரகம் செல்லவும் நேரலாம்.
இறைவிசுவாசிகளின் பண்புகளில் ஒன்றாக,
وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ ( الفرقان: ٦٩)
இன்னும் அவர்கள் எத்தகையவர்கள் என்றால் அல்லாஹ் வோடு பிற தெய்வத்தை/ கடவுளை அழைத்து பிரார்த்தனை செய்யாதவர்கள் (அல்ஃபுர்கான் : 69) என அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
3. பரிபாலிக்கும் இரட்சகன் _ இரட்சகர்கள் என்ற பொருள் தரும் ரப்/ அர்பாப் رب / أرباب என்ற பிரோகத்தால் உணர்த்துதல்.
“ரப்” رب பக்குவமாக, ஒழுங்காக, பரிபாலிப்பவன், பராமரிப்பவன், இரட்சகன், உரிமையாளன் போன்ற விரிவான பொருள் கொள்ளப்படும் மேற்படி வாசகம் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வை அன்றி வேறு இரட்சகனை ஒரு மனிதன் தேர்வு செய்யக் கூடாது என்பதை உணர்த்திப் பேசுகின்றது.
யூசுஃப் நபி (அலை) அவர்கள் எகிப்தில் பொய்க் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்ட போது அவர்களோடு வேறு இருவர் சிறைவாசம் அனுபவித்தனர்.
அவ்விருவரும் யூசுஃப் நபி (அலை) அவர்களிடம் அவர்கள் கண்ட கனவுக்கான விளக்கமளித்த யூசுஃப் நபி (அலை) அவர்கள் பின்வருமாறு உரையாடினார்கள்.
يَا صَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُّتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ (39) مَا تَعْبُدُونَ مِن دُونِهِ إِلَّا أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنتُمْ وَآبَاؤُكُم مَّا أَنزَلَ اللَّهُ بِهَا مِن سُلْطَانٍ ۚ (يوسف : ٣٩-٤٠)
எனது இரு சிறைத் தோழர்களே! பிரிந்து பல்கிக் காணப்படும் பல தெய்வங்கள் சிறந்ததா? அல்லது தனித்தவனும் அடக்கி ஆள்பவனுமாகிய அல்லாஹ்வா?(சிறந்தவன்) நீங்கள் அவனை அன்றி எவற்றை வணங்குகின்றீர்களோ அவை அனைத்தும் நீங்களும் உங்கள் மூதாதையர்களும் பெயர் சூட்டிக் கோண்டதே அன்றி அதற்கு எவ்வித ஆதாரச் சான்றையும் அல்லாஹ் இறக்கி வைக்கவில்லை. (யூசூஃப் : 39-40)
மறுமை நாளில் பொய்க் கடவுள்களின் நிலை:
மறுமை நாளில் அல்லாஹ்வை விடுத்து மக்கள் வணங்கும் நபிமார்கள், அவ்லியாக்கள், கப்ராளிகள் அனைவரும் தாம் இம்மக்களை வணங்கி வழிபடச் சொலாலவே இல்லை எனக் காரணம் கூறி இம்மக்களை விட்டும் நிரபராதிமாகி விடுவார்கள் எனக் குர்ஆன் குறிப்பிடுகின்றது .
” إِذْ تَبَرَّأَ الَّذِينَ اتُّبِعُوا مِنْ الَّذِينَ اتَّبَعُوا وَرَأَوْا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمْ الْأَسْبَابُ (البقرة : ١٦٦)
தம்மைப் பின்பற்றியோரை விட்டும் பின்பற்றப்பட்டவர்கள் (நபிமார்கள்/ அவ்லியாக்கள், மூதாதையர் மறுமையில்) நீங்கிக் கொள்வர். அவர்கள் தண்டனையை கண் எதிரே காண்பார்கள். அவர்களுக்கான உதவிகளும் துண்டித்து விடும். (அல்பகரா – 166)
وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ أَيْنَ شُرَكَائِيَ الَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ (62) قَالَ الَّذِينَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ رَبَّنَا هَٰؤُلَاءِ الَّذِينَ أَغْوَيْنَا أَغْوَيْنَاهُمْ كَمَا غَوَيْنَا ۖ تَبَرَّأْنَا إِلَيْكَ ۖ مَا كَانُوا إِيَّانَا يَعْبُدُونَ (63) وَقِيلَ ادْعُوا شُرَكَاءَكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيبُوا لَهُمْ وَرَأَوُا الْعَذَابَ ۚ لَوْ أَنَّهُمْ كَانُوا يَهْتَدُونَ (القصص. ٦٢- ٦٤)
அல்லாஹ் (இணைவைத்த) அவர்களை அழைத்துப் பேசி நீங்கள் எனக்கு இணையாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள் எங்கே என்று கேட்கும் நாளில் எவர்கள் மீது அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியாகிவிட்டதோ அவர்கள் எங்கள் இரட்சகனே! நாம் வழிகெடுத்தவர்கள் இவர்கள்தாம்,
அவர்களை நாம் வழிகெடுத்தது போன்று அவர்களும் வழிகெட்டனர். (அவர்களை விட்டும்) நீங்கி உன் பக்கம் சரனாகதி அடைந்து விட்டோம். அவர்கள் எம்மை வணங்குவோராக இருந்ததில்லை என்றும் (காரணம்) கூறுவர். அவர்களை நோக்கி நீங்கள் உங்கள் இணைதெய்வங்களை அழையுங்கள் . அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும் என்று கூறப்படும். அவர்கள் வேதனையை நேரடியாகப் பார்ப்பர். அப்போது அவர்கள் தாம் நேர்வழி பெற்றிருக்க வேண்டுமே என ஆதங்கப்படுவர்.( அல்கஸஸ்- 62-65)
இது மறுமை நாளில் அவ்லியாகள், நாதாக்கள் நல்லடியார்கள் போன்றவர்களை தமது இணை தெய்வங்களாக எடுத்துக் கொண்ட கப்ரு வணக்க
ஆதரவாளர்களை விட்டும் மறுமை நாளில் அவர்களின் இடைத்தரகர்கள் நிரபராதியாகும் நிலையைக் காட்டுகின்றது
குறிப்பு: 2018 ம் ஆண்டு 09/17 ம் திகதி அன்ஸாருஸ் ஸுன்னா அமைப்பினால் A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கருத்தரங்கம் நிகழ்வில் சமர்ப்பிப்பதற்காக தயாரிக்கப்பட்டது.
الحمد لله بنعمته تتم الصالحات.
— எம் ஜே .எம். ரிஸ்வான் மதனி.