“அஸ்ஸலாத் அல்-இப்ராஹீமிய்யா”வின் சில முறைமைகள்
அத்தஹிய்யாத் ஓதிய பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும். அதற்கு (الصلاة الإبراهيمية) “அஸ்ஸலாத் அல்-இப்ராஹீமிய்யா” என்று கூறப்படும். எனவே, அந்த ஸலவாத்தை எப்படி சொல்ல வேண்டும் என்பதையும் நபியவர்கள் கற்றுந்தந்துள்ளார்கள். ஆகவே, அப்படியாக நபியவர்கள் கற்றுத்தந்ததாக வரக்கூடிய ஸலவாத்துக்கள் பல அறிவிப்புக்கள் பலவிதமாக ஆதாரபூர்வமான வழிகளில் வந்துள்ளன. அந்த வகையில், அவைகளில் சிலதைப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்…
முதலாவது
அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் அறிவித்தார்கள் என்னை கஅப் இப்னு உஜ்ரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சந்தித்து, “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஓர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா? என்று கேட்டார்கள். நான், ஆம் அதை எனக்கு வழங்குங்கள் என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், நாங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தங்களின் மீதும், தங்கள் குடும்பத்தார் மீதும் ஸலவாத்து சொல்வது எப்படி? (என்று எங்களுக்கு கற்றுக் கொடுங்கள்) ஏனெனில், தங்களுக்கு நாங்கள் ஸலாம் சொல்வது எப்படி என்று அல்லாஹ் எங்களுக்கு (தஷஹ்ஹுதில்) கற்றுக் கொடுத்திருக்கிறான் என்று கேட்டோம். அதற்கு அவர்கள் (பின்வருமாறு கூறினார்கள்);
(اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ) رواه البخاري (3370) ومسلم
“அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம, வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத்”
பொருள் : இறைவா! இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மீது நீ கருணை புரிந்ததைப்போல் முஹம்மதின் மீதும், முஹம்மதின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியமிக்கவனுமாவாய். இறைவா! இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மீதும், இப்ராஹீமின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போல் முஹம்மதின் மீதும், முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனுமாவாய். என்று சொல்லுங்கள் என பதிலளித்தார்கள். (ஆதாரம் : புஹாரி-3370, முஸ்லிம்)
இரண்டாவது
(اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ و بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ) رواه البخاري ومسلم
“அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா அஸ்வாஜிஹி வ-துர்ரிய்யதிஹி கமா ஸல்லைத அலா இப்ராஹீம, வ-பாரிக் அலா முஹம்மதின் வஅலா அஸ்வாஜிஹி வதுர்ரிய்யதிஹி கமா பாரக்த, அலா இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத்”
பொருள் : இறைவா! இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் குடும்பத்தாரின் மீது நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும். அவர்களின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் சந்ததிகள் அனைவரின் மீதும் கருணை புரிவாயாக! இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் குடும்பத்தார் மீது நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மதின் மீதும் அவர்களின் மனைவிமார்களின் மீதும், அவர்களின் சந்ததிகளின் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிவாயாக! நிச்சயமாக நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் நிறைந்தவனுமாவாய். (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்-686)
மூன்றாவது
(اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عبدك ورسولك كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ و بَارِكْ عَلَى مُحَمَّدٍ عبدك ورسولك وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ) رواه البخاري
“அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்திக வரஸுலிக கமா ஸல்லைத அலா இப்ராஹீம, வ-பாரிக் அலா முஹம்மதின் அப்திக வரஸுலிக வ-அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம்”
பொருள் : யா அல்லாஹ்! நீ இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மீது கருணை புரிந்ததைப்போன்று, உனது அடியாரும் தூதருமாகிய முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது கருணை புரிவாயாக! மேலும், இப்ராஹீமின் மீதும், இப்ராஹீமின் குடும்பத்தார் மீதும் அருள் புரிந்ததைப்போன்று, உனது அடியாரும் – தூதருமாகிய முஹம்மத் மீதும், முஹம்மதின் குடும்பத்தார் மீதும் நீ அருள்புரிவாயாக! (ஆதாரம் : புஹாரி-4798)
நான்காவது
(اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ) رواه مسلم
“அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம, வபாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம பில் ஆலமீன இன்னக ஹமீதும் மஜீத்”
பொருள் : இறைவா! இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக! அகிலத்தாரில் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ அருள்பாளித்ததைப் போன்று முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ அருள்பாளிப்பாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய். (ஆதாரம் : முஸ்லிம்-682)
ஐந்தாவது
(اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النبي الأمي وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وبَارِكْ عَلَى مُحَمَّدٍ النبي الأمي وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ في العالمين إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ) رواه مسلم وأبو عوانه
“அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம பில் ஆலமீன இன்னக ஹமீதும் மஜீத்”
பொருள் : இறைவா! இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நீ கருணை புரிந்ததைப்போன்று உம்மி நபியான முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக! அகிலத்தாரில் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு நீ அருள்பாளித்ததைப் போன்று உம்மி நபியான முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ அருள்பாளிப்பாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய். (ஆதாரம் : முஸ்லிம், அபூஅவானா)
ஆறாவது
(اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ وبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ و بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَآل إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ) رواه النسائي
“அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், வபாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத, வபாரக்த அலா இப்ராஹீம வஆலி இப்ராஹீம, இன்னக ஹமீதும் மஜீத்” (ஆதாரம் : அந்நஸாஈ)
(குறிப்பு : இந்த ஹதீஸ் ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸாகும். ஏனெனில், இதில் வரக்கூடிய முஹம்மத் பின் அபீ fபுதைக் என்பவர் உண்மையாளர் என்பதால்.)
ஏழாவது
(اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَهْلِ بَيْتِهِ وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آل إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ بيته وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آل إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ) رواه أحمد والطحاوي
“அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா அஹ்லி பைதிஹி வஅலா அஸ்வாஜிஹி வதுர்ரிய்யதிஹி கமா ஸல்லைத அலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத், வபாரிக் அலா முஹம்மதின், வஅலா ஆலி பைதிஹி வஅலா அஸ்வாஜிஹி வதுர்ரிய்யதிஹி கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத்” (ஆதாரம் : அஹ்மத், அத்தஹாவீ)
(குறிப்பு : முஸ்னத் அஹ்மத் கிரந்த த்தில் வரக்கூடிய அறிவிப்பில் ஸஹாபி யார் என்று அறியப்படாதவராக இருக்கின்றார். மற்றும் முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் , இமாம் தஹாவி அவர்களின் அறிவிப்புக்கள் பலவீனமானவைகளாகும்.)
எனவே, முதல் ஆறு ஸலவாத்துக்களில் எந்த ஸலவாத்தையாவது அத்தஹிய்யாத் ஓதியதன் பிற்பாடு ஓதினால் நபியவர்கள் மீது ஸலவாத்து கூறியதாக அமையும்.
(வருகின்ற தொடரில் அத்தஹிய்யாத் மற்றும் அஸ்ஸலாத் அல்-இப்ராஹீமிய்யா ஓதியதன் பிற்பாடு ஸலாம் கொடுப்பதற்கு முன்னர் நபியவர்களால் ஓதப்பட்ட சில பிரார்த்தனைகளைப் பார்ப்போம். -இன்ஷா அல்லாஹ்-)
யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே!
தொகுப்பு : றஸீன் அக்பர் (மதனி)
அழைப்பாளன் : தபூக் அழைப்பு நிலையம் – சவுதி அரேபியா.
(முன்னைய தொடர் : “தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் சில முறைமைகள்”