இந்த விஷயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு இருந்தாலும் ஐங்கால தொழுகை நடத்தப்படும் எந்தப் பள்ளியிலும் இஃதிகாப் இருக்கலாம் என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக இருக்கின்றது.
“இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்..” (2:187)
அல்லாஹ் திருமறையில் பொதுவாக மஸ்ஜித் என்று சொல்லுவதனால் ஐங்கால தொழுகை நடாத்தப்படாத பள்ளியிலும் இஃதிகாப் இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கூறிய போதிலும், இக்கருத்து வலுவான கருத்தாக கருதப்படவில்லை. காரணம் ஆயிஷா (ரழி) அவர்கள் கூறும் போது: ஜமாத்தாகத் தொழும் பள்ளியில் அல்லாமல் இஃதிகாப் இல்லை. என்கின்றார்கள். ஆதாரம்: பைஹகி. இமாம் அல்பானி அவர்களும் இந்த செய்தியை சரிகாண்கிறார்கள். இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்கள்.
ஜும்ஆவிற்கு மாத்திரம் வாரத்தில் ஒரு முறை இஃதிகாப் இருக்கும் பள்ளியிலிருந்து வெளியே சென்று வருவது குற்றமில்லை.
பெண்களைப் பொருத்தவரை ஐங்கால தொழுகை இடம் பெறாத பள்ளியிலும் இஃதிகாப் இருந்து கொள்ளலாம். காரணம் அவர்களுக்கு ஜமாத்தோடு தொழுவேண்டும் என்பது அவசியம் கிடையாது என இமாம் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் தனது அஷ்ஷரஹுல் மும்திஃ எனும் நூலில் (6/313) குறிப்பிடுகின்றார்கள்.
எனவே ஜும்ஆப் பள்ளியில் கட்டாயம் இஃதிகாப் இருந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது.
அரபு மூலம்: https://islamqa.info/ar/answers/48985
தமிழில்: எம். றிஸ்கான் முஸ்தீன்
27-05-2019