சர்க்கரை நோயினால் (சீனி நோய்) கடுமையாகப் பாதிக்கப்பட்டவர், நோன்போடு இருக்கும் போது இன்ஸுலீன் மருந்தை ஊசி மூலம் ஏற்றிக் கொள்வதால் நோன்பு முறியுமா?
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர் இன்ஸுலீன் போன்ற மருந்துகளை ஊசி மூலம் நிவாரணத்திற்காக ஏற்றிக் கொள்வது தடை கிடையாது. அப்படி இன்ஸுலீன் ஏற்றியதனால் நோன்பு முறியாது. அதற்காக ஏனைய நாட்களில் நோன்பிருக்கத் தேவையில்லை. என்றாலும் இந்த மருந்தை இரவில் எடுத்துக் கொள்ள முடியுமானால் மிகவும் ஏற்றமானது.
மார்க்கத் தீர்ப்பு மற்றும் அறிவியல் ஆய்விற்கான நிரந்தர மையம். 10/252
அரபு மூலம்: https://islamqa.info/ar/answers/37892
தமிழில்: எம். றிஸ்கான் முஸ்தீன்.