இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம் அல்லாத அரசர்களாலும் பிரஜைகளாலும் பெண்கள் எவ்வாறு அடிமைகளாக நடத்தப்பட்டனர்?அவர்கள் எப்படியான அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர்?
அதற்கான தீர்வாக குர்ஆன் முன்வைத்த முன்மாதிரிமிக்க தீர்வுகள், வழிகாட்டல்கள் எவை என்பது பற்றி எல்லாம் ஆய்வு செய்கின்ற ஒரு ஆய்வாளன் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெண் விடுதலைப் பகுதி என்பது
?பெண் பிள்ளைகளை உயிருடன் புதைத்தல்,
?பெண்களை இழிவாகக் கருதுவது,
?ஆண், பெண் கலப்பால் ஏற்படும் குடும்ப மற்றும் சமூகச் சீர்கேடுகள்,
?பெண்களின் ஒழுக்கம், பண்பாடு, தூய தாய்மை வாழ்வு,
? பெண்ணுக்கு ஆண் செய்ய வேண்டிய கடமைகள்,
?திருமணக் கொடை,
? உணவு உறைவிடத்திற்கான வசிதிகளை ஆண்கள் ஏற்படுத்தி கொடுத்தல்,
?குழந்தை வளர்ப்பு,
?பிள்ளைகளுக்கு பாலூட்டும் செலவைப் பொறுப்பேற்றல்
போன்ற பல்வேறுபட்ட விஷயங்களை உள்ளடக்கியதாக இருப்பதை அறிந்து கொள்வான்.
ஜாஹிலிய்யாவில் பெண்கள்
முஹம்மது நபியின் வருகைக்கு முன்னால் உள்ள ஜாஹிலிய்யாக் கால வாழ்க்கை என்பது சமூகச் சீர்கேடுகள் நிறைந்த இருள் சூழ்ந்த வாழ்கையாகும்.
?அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்,
?அற்ப விஷயத்திற்காக ஆண்டாண்டு காலம் சண்டை செய்தல்,
?பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தல்,
?பெண்களை அழகு நங்கையராகவும் போகப் பொருளாவும் பாவித்தல்,
?கணவன் மரணித்த பின் மனைவியை ஓராண்டு காலம் வரை பாழடைந்த குடிசைக்குள் அடைத்து வைத்தல்,
?தந்தை திருமணம் செய்து மரணித்த நிலையில் அந்தப் பெண்களை மறுமணம் செய்தல்,
?போரில் பாடகிகளாக அழைத்துச் செல்லுதல்,
?வாரிசு சொத்துரிமையில் அநீதி இழைத்தல்
?விபச்சாரத்திற்கு பச்சைக் கொடி,
?ஒரு பெண்ணோடு பல ஆண்கள்
?கூட்டு விபச்சாரம் செய்தல்,
?குரைஷியரே குலத்தால் சிறந்த வர் என்ற நீண்டாமை நடைமுறை,
?பெண்கள், அநாதைகளின் சொத்துக்களை அபகரித்தல் போன்ற பல சமூக மற்றும் தனி நபர் சீர்கேடுகள் காணப்பட்டன.
முஹம்மது நபி காலப் பெண்கள்?
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்துப் பெண்கள் முஹாஜிர் , அன்ஸாரி ( மக்கா மற்றும் மதீனாப் பெண்கள்) என்ற இரு பிரதேசத்தையும் மற்றும் பல வேறு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்களாக இருந்தனர்.
அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தமது வாழ்வியல் நெறியாக தாமாகவே முன்வந்து ஏற்றுக் கொண்டவர்கள்.
தமது சமூகத்தில் காணப்பட்ட கலாச்சார சீரழிவுகளை வெறுத்து, முஹம்மது நபி (ஸ்) அவர்கள் அறிமுகம் செய்த தூய கலாச்சார முறையை வற்புறுத்தல் இன்றி மனதால் ஏற்று இணைந்தவர்கள்.
அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற போது அவர்களிடம் தமது பெண் மக்களை உயிருடன் புதைப்பது பெரும்பாவங்களில் ஒன்று என நபியவர்கள் எச்சரிக்கை செய்வார்கள்.
நபி (ஸல்) மக்காவில் இருந்த போது பெண்களின் ஆடை அலங்கார விதிகள் பற்றி பேசியதை விட, காஃபிர்களின் தொல்லைகளைப் பொறுத்து கொள்ளுதல், இறை திருப்திக்காக வாழ்தல், இறை விதியைப் பொருந்திக் கொள்ளுதல் போன்ற ஈமானிய அம்சங்கள் பற்றி அதிகம் பேசினார்கள்.
மக்காவிலும் மதீனாவிலும் இஸ்லாத்தில் இணைந்த மக்களிடம்
?அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல்,
?பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்தல்,
?திருடுதல்,
?விபச்சாரம் செய்தல்,
?அவதூறு கூறுவது போன்ற பெரிய பாவங்களை விட்டும் தவிர்த்து வாழ்வதை வலியுறுத்திப் பேசினார்கள்.
மதீனாவில்?
மக்கா காஃபிர்களின் தொல்லையில் இருந்து அங்கிருந்து வெளியேறி மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்த பின் முஸ்லிம்கள் சற்று நிம்மதியாக வாழ்ந்தனர்.
பெண்களின் ஆடை, ஆண் பெண் கலப்பு தொடர்பான வழிகாட்டல்கள் அல்குர்ஆன் மூலம் அருளப்பட்டன.
இன்று நமது பெண்கள் இத்தாவில் மாத்திரம் கடைப்படிக்கின்ற மஹ்ரம், அஜ்னபி என்ற இருவகையான உறவு முறைகள் வலுக்கட்டாயமாகக் கடைப்படிக்கப்மட்டன.
அல்பகரா, அந்நிஸா, அல்அஹ்ஸாப், அத்தலாக் போன்ற அத்தியாயங்களில் இது தொடர்பான கூடுதல் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
அதில் இடம் பெறும் இறை வழிகாட்டல்களோடு மதீனாப் பெண்களின் ஆடை மற்றும் கலாச்சார வழிமுறைகள் பற்றி ஒரு அழைப்பாளன் சரியாகப் படித்தால் இலங்கை போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள் அணிகின்றன ஆடை முறை அரேபியாவின் இறக்குமதி என உழரமாட்டான்.
அல்லாஹ் அல்குர்ஆனில்
وقَرْنَ فِي بُيُوتِكُنَّ ولا تَبَرَّجْنَ تَبَرُّجَ الجاهِلِيَّةِ الأُولى (الأحزاب/٣٣)
(பெண்களே!) உங்கள் வீடுகளிலேயே தங்கி இருங்கள். ஆரம்ப கால ஜாஹிலிய்யாப் பெண்கள் போல வெளியில் சுற்றித் திரியாதீர்கள். ( அல்அஹ்ஸாப்-33) குறிப்பபிடுகின்றான்.அதாவது தேவை இல்லாமல் வெளியில் செல்லாதீர்கள் என்பதாகும்.
மதீனாப் பெண்களுக்கு வழங்கப்பட சுதந்திரம் பற்றி இப்படியும் கூறப்படுகின்றது.
«كن نساء المُؤْمِنات يشهدن مَعَ رَسُول الله – ﷺ – صَلاة الفجْر متلفعات بمروطهن، ثمَّ يَنْقَلِبْنَ إلى بُيُوتهنَّ (حِين يقضين) الصَّلاة لا يعرفهن أحد من الغَلَس ( أخرجه البخاري )
இறைத் தூதரோடு சுபஹ் தொழுகையில் கலந்து கொள்வதற்காக சமூகம் தரும் முஃமினான பெண்கள் உடல்களை முழுமையாக மறைக்கின்ற தமது போர்கவைகளால் போர்த்தியபடி வருவார்கள். தொழுகை முடிந்ததும் திரும்பி விடுவார்கள். இரவின் மீதமான இருள் காரணமாக அவர்களை ஒருவரும் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள் என நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர். ( புகாரி)
இதன் மூலம் பெண்கள் பள்ளிக்கு வருவதை இறைத்தூதர் அவர்கள் அனுமதித்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
பெண்களின் ஆடை விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்திய தப்லீக் ஜமாத் மௌலவிகள் ஒரு காலத்தில் படிப்பதையும், தராவீஹ் தொழுகைக்கு சமூகமளிப்பதையும் ஹராமாக்கிப் பேசியது ஒரு வகைத் தீவிரவாதமாகும்.
இவ்வாறான தலைகீழான நடைமுறைகள்தான் மாற்று மதத்தவருக்கு தீனி போடுகின்றன என்பதை மறுக்க முடியாது.
மதீனா மக்கள் விவசாயிகளாக இருந்தனர். அதிகமான போர்கள் நடை பெற்றன.
இக்கால பகுதியில் பெண்கள் விவசாய நிலங்களில் தொழில் செய்தனர்,( முஸ்லிம்)
அவர்கள் போரில் கலந்து காயப்பட்ட ஆண்களுக்கு சிகிச்சை அளித்தனர்.(புகாரி, முஸ்லிம்)
நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்களின் காலத்தில் கடல் கடந்து முஸ்லிம்கள் போர் செய்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது உம்மு சுலைம் (ரழி) போன்ற ஸஹாபிப் பெண்கள் கலந்து கொள்ள துஆ செய்யுமாறு வேண்டி பின் போரில் கலந்து கொள்ளச் சென்ற போது இடையில் ஒட்டகத்தில் இருந்து விழுந்து மரணித்தார்கள் (புகாரி) போன்ற வரலாறுகள் பெண்களை இஸ்லாம் வீட்டில் பூட்டி வைக்கின்றது என்ற அர்த்தமற்ற குற்றச்சாட்டை முழுமையாக தவிடு பொடியாக்குவதோடு பெண்கள் தமது தேவைகளுக்காக வெளியில் செல்வதை ஹராமாக நோக்குவதையும் அறியாமையாகப் பார்க்கின்றது என்பதை உணரலாம்
நிகாப் பெண்களை அடிமைப்படுத்துகின்றதா?
எகிப்தில் பிறந்த காஸிம் அமீன் என்பவர் 20 ம் நூற்றாண்டில் பெண் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர்.
இவர் நவீன சிந்தனை முகாமை தோற்வித்த முஹம்மத் அப்துஹு அவர்களின் மாணவர்களில் ஒருவரும் கூட.
இருவரும் பெண் விடுதலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் ஆணுக்கு சரி சமம், ஐரோப்பியப் பெண்ணுக்கு முஸ்லிம் பெண் ஆண்களோடு ஒன்றரக் கலந்து வாழ்வதால்தான் முன்னேறுவார் போன்ற ஐரோப்பியரைத் திருப்திப்படுத்தும் சர்ச்சைக்குரிய காஸிம் அமீன்னின்
புதிய கருத்தால் முஸ்லிம் உலகம் கொந்தளித்தது.
அவரது கருத்தின் அடிப்படையில் எகிப்திய மனிதர் ஒருவர் காஸிம் அமீனின் மனைவியோடு தான் தனிமையில் அமர்ந்து பேச வேண்டும் என அனுமதி கேட்டார் என்பது மற்றொரு சுவாரஸ்மான நகிகழ்வாகும்.
இவர்களின் போக்கை நவீன காலத்தில் சரி கண்டவர்களில் முஹம்மத் கஸ்ஸாலி (ரஹி) மற்றும் ஷேக் கர்ளாவி போன்ற அறிஞர்கள் முக்கியமானவர்கள்.
அப்படியானால் அவர்களின் கருத்தை ஓதப்படும் வேத வாக்கியமாக எடுத்துக் கொள்கின்ற நளீமியா மற்றும் இஸ்லாஹிய்யா பட்டதாரி நண்பர்கள், ஜமாத்தே இஸ்லாமி சகோதரர்கள் மூலம் தஃவாக் களம் எப்படி இருக்கும் என நாம் சிந்திக்க வேண்டும்.
பெண்கள் ஹிஜாப் அணிவதால் பிரச்சனை இல்லை, ஆனால் நிகாப்தான் பிரச்சனை என தொடங்கும் வாதாட்டம் இறுதியில் பெண்கள் தமது அழகை ஆடவருக்கு முன்னால் காட்டுவது ஒரு பண்பாடு என்ற எல்லைக் கோட்டில் நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
நிகாபை விமர்சனம் செய்வோரின் இலக்கு உலகில் பெண்களை கருச் சுதந்திரம் வரை கொண்டு செல்வதற்காக பட்டுப் பாதை அமைப்பதாகும்
ஒரு பெண் வெட்கம் என்ற ஆடை இன்றி, மனித மிருகமாக வாழ்வதால் சீரழிந்து போன ஐரோப்பியர்களோடு தமது மனைவிரையும் பெண் மக்களையும் சேர்த்து விடுவதே நவீனகால
பெண் விடுதலைக்கான இறுதி அறுவடையாகும்.
?இறுதியாக;
இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
قال رسول الله ﷺ : <ليأتين على الناس زمان قلوبهم قلوب الأعاجم (السلسلة الصحيحة ٣٣٥٧).
மனிதர் (முஸ்லிம்)களுக்கு ஒரு காலம் வரும். அவர்களின் இதயங்கள் அஜமிகள்- அந்திய மதத்தவரின் இதயங்கள் போன்றிருக்கும். (அல்பானி- அஸ்ஸஹீஹா)
மார்க்க விளக்கத்தில் ஏற்படும் குறைபாட்டால் அந்நியவர்களை அவர்களின் கலாச்சார, பண்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றுதல் போன்ற நிலை ஏற்படும் என்பது இதன் விளக்கமாகும்.(அத்துவைஜிரி , குர்பதுல் இஸ்லாம்)
نسأل الله الإخلاص والتوفيق في أعمالنا والثبات في ديننا
எம் .ஜே .எம்.
ரிஸ்வான் மதனி
06/03/2021