Featured Posts

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 10.

1991 ல் திரும்பவும் எனக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கட்சியான BJP யில் ஒரு பதவி கிடைத்தது. எர்ணாகுளம் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு நிறைய நிறைய பதவி கிடைத்தது. இதிலிருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கலாம் என்று நினைத்தேன். இதிலும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தலையிட்டு அதையும் கலைத்தார்கள். B.J.P.யும் ஆர்.எஸ்.எஸ்ஸும் எனக்கெதிராக மாறின.

நான் அங்கிருந்து சாந்தாவையும் அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக சொந்த உருக்குச் சென்று விடலாம் என்று எண்ணினேன். ஒரு இரவு நேரத்தில் நான் சாந்தாவை யாரும் பார்க்காமல் வீட்டில் இருந்து அழைத்து வந்தேன். இரவு முழுவதும் ஒரு முஸ்லிம் பெண்ணின் வீட்டில் தங்க வைத்தேன். நாங்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்று தெரிந்தும் அந்த முஸ்லிம் பெண் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தாள்.

இப்படி ஒரு விதமாக நான் ஊரை வந்தடைந்தேன். திருமணம் முடிந்த சில மணிகளுக்குள்ளாகவே காவல் துறையினர் எனது வீட்டிற்கு வந்தார்கள். ஸ்டேஷன் வருமாறு அவர்கள் என்னிடம் கூறினார்கள். இன்று என்னால் வர இயலாது நாளைக்கு வருகிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்.

மறுநாள் காலை ஸ்டேஷன் செல்லும்போது சாந்தாவின் அப்பாவும், அம்மாவும் அங்கே இருக்கிறார்கள். இருப்பத்தி ஐந்தாயிரம் ரூபாயையும், பத்து பவுன் நகையையும் இவன் திருடிக்கொண்டு போய் விட்டான் என்று சாந்தாவின் அப்பா சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தனிடம் புகார் கொடுக்கிறார்.

இவர் இப்படி பேசமாட்டார் என்று எனக்கு நன்றாக தெரியும். இதற்குப் பின்னாலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் செயல்படுகிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. அது நிஜமாகவும் இருந்தது.

இதிலிருந்து எனது வீட்டில் பல பிரச்னைகள் உருவாகத் தொடங்கின. நாங்கள் இருப்பது இரண்டாவது அம்மாவின் வீடானதால் அவர்களுக்கு இத்திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பமே இல்லை.

உடனே நான் தனியாக இவர்களை விட்டு பிரிந்து செல்வோம் என முடிவெடுத்து இரண்டு பேருமாக ஒரு சின்ன குடிசையில் எங்களது வாழ்கையைத் தொடங்கினோம். அப்போது நான் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தேன். அதனால் கொஞ்சம் வருமானம் இருந்தது.
வேலை செய்து கொஞ்சம் பணம் சேர்த்து எனது ஊரில் அம்பேத்கர் காலனியில் ஒரு மூன்று செண்டு இடம் வாங்கினேன். அங்கே ஒரு சின்ன செட் கட்டினோம். அங்கே வைத்து எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. மீரா என்று அதற்குப் பெயர் சூட்டினேன். இப்போது ஜாஸ்மின் என்பது அவளது பெயர்.

இறைவன் நாடினால் வளரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *