Featured Posts

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 16.

முஸ்லிம் பெண்களை பாதுகாப்பான முறையிலும் தங்களது பார்வையை தாழ்த்திக்கொண்டும் பணிவோடு நடக்கவும் வலியுறுத்தி பர்தா முறையை இஸ்லாம் பெண்களுக்கு கற்றுக்கொடுக்கின்றது.

பண்டைய ஆர்.எஸ்.எஸ்ஸின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்ட அவர்களோடு சேர்ந்து நின்று முஸ்லிம் பெண்மணிகளைப் பற்றியும் அவர்களது பர்தாவைப் பற்றியும் கிண்டல் செய்த காலம் தான் எனக்கு நினைவிற்கு வருகிறது.

ஆனால் இந்த சங்பரிவார்களோ தங்களது இந்து பெண்கள் ஆடை அணிவதையும் அதிலும் குறிப்பாக அவர்கள் மார்பை மறைப்பதையும் கண்டிக்கும் நிலை உடையவர்கள்.

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த பெண்களை கண்டால் அவர்களை தேவைக்கேற்ப பயன்படுத்திவிட்டு விட்டுவிடுவதுதான் இந்த இந்து சமுதாயத்தவரின் பழக்கமாக இருந்து வந்தது.

ஆனால் இஸ்லாத்திலோ அது போன்று காணவே முடியாது. பெண்களை மிகவும் கண்ணியமாக நடத்துகிறார்கள்.

இப்படிப்பட்ட மோசமான கலாச்சாரத்தை உடைய இந்து ஆர்.எஸ்.எஸ். [தம்புராக்கள்] தேவர்கள்தான் கண்ணியத்திற்குரிய முஹம்மது நபியை குறை கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

கடைசியாக நாசர் மஹ்தனியின் ஒரு பேருரை ஒன்றை கேட்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பேருரையில் மஹ்தனி எடுத்துக்கொண்ட தலைப்புதான் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் ஆட்பட்டு நின்ற கறுப்பு நிற முஸ்லிம் பிலால்(ரலி) பற்றியது. இந்தப் பேருரை நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

இவ்வாறாக மஹ்தனி தியாக பிலாலின் வாழ்வை ஒவ்வொன்றாக எடுத்துச் சொன்னார். அரங்கம் நிசப்தமாக காதை கொடுத்து கேட்டுக்கொண்டிருந்தது.

புனிதமான அந்த இஸ்லாத்தை தழுவிய ஒரே காரணத்திற்காக பிலால்(ரலி) அவர்களை சுடு மணலில் கிடத்தி பாரமான பளுவை அவரின் நெஞ்சின் மீது வைத்து கொடுமைப்படுத்தினர் அந்த முஷ்ரிக்குகள்(இஸ்லாத்தை எதிர்த்தவர்கள்). மேலும் பிலால்(ரலி) அவர்களின் உணர்வுகளைப் பற்றி மஹ்தனியின் உருக்கமான உரை என் உள்ளத்தை உருக்கிற்று. மஹ்தனியின் அந்த பிலாலைப் பற்றிய உரை எனது கண்ணில் இருந்து கண்ணீர் துளியை வரவழைத்தது. மேடையில் இருந்து கொண்டே நான் தேம்பித் தேம்பி அழத்தொடங்கினேன்.

ரசூல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அந்த நீக்ரோ இன அடிமையை கட்டி அணைத்தது மட்டுமல்லாமல், அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) இவர்கள் எல்லாம் இருந்த பொழுதும் பிலால்(ரலி) எங்கே? என்று அவர்கள் கேட்டு, “கஃபா ஆலயத்தை திறப்பதற்கு இங்கே நிற்பவரில் நீ தான் அதற்கு தகுதியானவன்” என்று சொல்லி அந்த கறுப்பு இன மாமனிதனை மகிழ்வித்தார்கள்.

கோடிக்கணக்கான முஸ்லிம்கள் நின்று தொழுகின்ற அந்த கஃபா ஆலயத்தை திறந்து, அல்லாஹு அக்பர் என்ற பாங்கைச் சொல்வதற்கு முதலில் பாக்கியமடைந்தவர் அந்த அடிமை பிலால்.

எப்படிப்பட்ட பாக்கியம்!. அது மட்டுமல்லாமல் கஃபாவின் மேல் ஏறுவதற்கு முடியாமல் தவிக்கின்ற அந்த அடிமை பிலால்(ரலி) அவர்களிடம் நாயகம் திருமேனி முஹம்மது(ஸல்) அவர்கள் தன் கரம் மிதித்து ஏறுவதற்கு சொன்னதும், அந்த வெண்ணிற மேனியின் கையில் கறுப்பு நிற பாதங்கள் மிதித்து ஏறுவதும், அடிமைத் தனத்தை முற்றிலுமாக அது அடித்து நொறுக்கிற்று.

இப்படி அந்த மஹ்தனியின் பிரசங்கத்தை கேட்டதும் எனது பூர்விகன் பிலாலை நான் ஒரு நிமிடம் மனதில் பதித்தேன்.

இவ்வாறாக நான் சிந்திக்க ஆரம்பித்தேன்.

இறைவன் நாடினால் வளரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *