நான் விடவேயில்லை.
முஸ்லிம்கள் என்னிடம் காட்டின அந்த பணிவையும், பாசத்தையும், அவர்களது உபசரிப்பையும் பற்றி விவரமாக அவளிடம் சொன்னேன். கடைசியில் அவளது மனம் எனது ஆசைகளை ஏற்றுக் கொள்வதற்குத் தயாரானது. நான் மனைவியையும் அழைத்துக் கொண்டு நாசர் மஹ்தனியின் வீட்டிற்குச் சென்றேன்.
அவர் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளையெல்லாம் எனக்கு சொல்லித் தந்து விட்டு புனிதமான எங்களது பூர்விகன் பிலால்(ரலி) உச்சரித்த அந்த கலிமாவை மொழிந்து தந்தார்கள். நாங்கள் சந்தோஷமாக மனதில் அந்த புனித கலிமாவை மொழிந்தோம்; ஏற்றோம் இஸ்லாத்தை.
அஷ்ஹது அன்லா இலாஹ இல்லலாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. மேலும் முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார் என்று நான் சாட்சியம் கூறுகிறேன்)
என்று சொல்லி விட்டு மஹ்தனி அந்த தியாகி பிலாலின் பெயரைத்தான் எனக்கும் சூட்டினார்கள்.
தாழ்ந்த இனத்தவனாக இருந்த நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக எனது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
“பிலால், நீ கலிமா சொன்ன இந்த நிமிடத்தில் இருந்து இன்று பிறந்த பாலகனைப் போலாவாய்” என்று மஹ்தனி சொல்லிக் கற்பித்தார். இதைக் கேட்ட பொது மனம் திரும்பவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது.
எனது முந்தைய பாவங்களையெல்லாம் மன்னிக்கக்கூடிய இறைவனையா நான் ஏற்றுக்கொண்டேன் என்று எனது மனம் திருப்தியடைந்தது.
அன்று இரவு முழுவதும் நான் தூங்கவேயில்லை.
36 வருடம் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து ஒரு புது வாழ்க்கையை துவங்குகின்ற அந்த ஆனந்தத்தில் எனது மனம் மூழ்கியது.
இப்படியாக நாங்கள் இருவரும் இஸ்லாத்தைத் தழுவினோம். மனைவிக்கு பாங்கோடு ரபீக் மெளலவி கலிமா சொல்லிக்கொடுத்து ஃபாத்திமா என்று பெயர்ச் சூட்டவும் செய்தார்.
இப்போது இருக்கின்ற இடத்தை விட்டு மாறி வேறு இடத்தில் வாடகை வீட்டில் தங்கினோம். முஸ்லிமான பிறகு எனக்கொரு இப்னு பிலால் என்ற மகனும் பிறந்தான்.
தாழ்த்தப்பட்ட தலித் இனத்தைச் சார்ந்த பழைய வேலாயுதனாக நான் மரணம் அடைந்தால் எனது மனைவியும் மக்களும் பிச்சை எடுக்கக் கூடியவர்களாக மாறியிருப்பார்கள். ஆனால் பிலாலான எனக்கு இப்போது அல்லாஹ்வின் கருணையால் தனது உயிரைக்கூட கொடுக்கக்கூடிய முஸ்லிம் சமுகம் இருக்கின்றது. அந்த இஸ்லாமிய சகோதர சமூகம் இருக்கும் காலம் வரை நான் அஞ்சத் தேவையில்லை.
இப்போது அல்லாஹ்வின் கருணையினால் நானும் எனது மனைவி மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக குர்ஆனுடைய நிழலின் கீழ் பாதுகாப்பாக சந்தோஷமாக வாழ்க்கையை நடத்துகின்றோம்.
கேரளத்தின் மாதவிக்குட்டி சுரையா இஸ்லாத்தை தழுவியபோதும் நாங்கள் குடும்பத்தோடு சென்று அவர்களைச் சந்தித்தோம். ஈமானின் பிரகாசம் அவர்களது முகத்தில் தெளிந்து நின்றது.
கேரளத்தில் குறுப்பு இனத்தைச் சார்ந்த உயர் குல மாதவிக்குட்டியை பறயனான இந்த வேலாயுதன் ஒரு போதும் சந்திக்க வாய்ப்பே இருந்திருக்காது.
ஆனால் இஸ்லாம் கோட்பாட்டின் கீழ் (பிலாலும், சுரையாவும்) நாங்கள் இருவரும் இணைந்ததால் எங்களுக்குள்ளே அக விவரங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது.
ஆதலால் எனது சமூகமான தாழ்த்தப்பட்ட தலித் இனத்திற்கு ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன்.
நீங்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.
நீங்கள் அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள இஸ்லாமே நன்மருந்து.
தைரியமாக அல்லாஹ்வின் இந்த அழகிய மார்க்கத்தில் பிரவேசியுங்கள். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் குர்ஆன் உங்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கும
் வாருங்கள்…..
அல்லாஹ்வின் மார்க்கத்தில் எனக்கும் என் மனைவி பிள்ளைகளுக்கும் நேர் வழியைத் தந்த வல்ல இறைவன் அல்லாஹ்விற்கே புகழனைத்தும் உரித்தாகுக.
எனது பாங்கின் ஒலி என்றும் தொடரும். அல்லாஹ் அக்பர்; அல்லாஹ் அக்பர்; அல்லாஹ் அக்பர்.
இறைவன் நாடினால் வளரும்.