இஸ்லாத்தில் இபாதத்துகள்:
நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கும் பொழுது முஸ்லிம்கள் தங்களுக்குள் கூறிக்கொள்ளும் சலாத்தைப் பற்றி ஒரு தப்பான வாதத்தை எனக்கு போதித்தார்கள்.
அதாவது இவர்கள் எங்கு சென்றாலும் தங்களுக்கு மத்தியில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறிக்கொள்வார்கள். தன் இனத்தைச் சார்ந்த யாரை சந்தித்தாலும் சரியே. இது எதற்கென்றால் பிற மதங்களை தனிமைப்படுத்துவதற்கும் முஸ்லிம்களை ஒன்றுபட வைப்பதற்கும் ஆகும் என்ற இந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் கூற்றினால் தப்பான எண்ணத்தில் இருந்துவந்தேன்.
இங்கு வந்த பிறகுதான் தெரிகிறது இந்த ஸலாத்தின் பொருள் எவ்வளவு மிகையானது என்று.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)(இறைவனின் சாந்தியும் சமாதானவும் என்றென்றும் உங்கள் மீது உரித்தாகுக;). ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வது. அதைக் கேட்ட முஸ்லிமும் தனக்காக துஆ செய்த அந்த முஸ்லிமுக்கு “உன்மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உரித்தாகட்டும்”(வ அலைக்குமுஸ்ஸலாம்) என திருப்பிக்கூறும் மிக அருமையான முறையை எந்த மதம் இவ்வாறு நமக்குத் சொல்லித்தருகிறது?.
இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் வணக்கம்(நமஸ்தே) என்று கூறுவார்கள்.
என்ன பொருள் இதற்கு?. “உன்னை நான் வணங்குகின்றேன்” என்றல்லவா இதன் பொருள்?. என்ன கீழ்த்தரமான வார்த்தை இது? இறைவனால் படைக்கப்பட்ட மனிதனுக்காக வணக்கம் செலுத்துவது.
வணக்கத்திற்கு தகுதியானவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்று இஸ்லாம் மிக அருமையாக நமக்கு போதிக்கிறது.
இதையும் நான் இஸ்லாத்தில் வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். தனக்கு மத்தியில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்துகின்ற இந்த அருமையான வாசகத்தை குறித்து இந்த ஃபாசிஸ்டுகள் எனக்கு தப்பாக போதித்தார்கள்.
முஸ்லிம்கள் சம்பந்தமான எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதன் பொருளை முழுமையாக விளங்காமல் தப்பான நச்சுக் கருத்துக்களால் போதிப்பது இந்த ஃபாசிஸ்டுகளின் தந்திரமாக இருந்து வருகிறது.
இந்த ஃபாசிஸ்டுவாதிகளின் சமூகத்திலிருந்து என்னை மட்டும் தேர்ந்தெடுத்து புனித இஸ்லாத்தின் உண்மைகளை எனக்கு போதித்த வல்லான் அல்லாஹ்வுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது.
இதைப்போல் சாப்பிடக்கூடிய விஷயமாக இருந்தாலும் சரியே; இஸ்லாம் மிக அருமையாக போதிக்கிறது.
சாப்பிடும்போதும் உட்காரும் நிலை, விரல்களைக் கொண்டு சாப்பிடுவது, சாப்பிட்ட பிறகு விரலை நன்றாக உறிஞ்சுவது, சாப்பாட்டிற்கு நாம் கொடுக்கும் மரியாதை இது.
ஆர்.எஸ்.எஸ்ஸில் இந்த மரியாதை நிலையெல்லாம் எனக்கு சொல்லிக்கொடுக்கவில்லை. அவர்களின் கோட்பாட்டில் இந்த தன்மையே இல்லை.
இதைப் போலத் தான் இறந்தாலும்; பறையன் இறந்தால் அவனை அடக்கம் பண்ணுவதும் ஒரு முறை. புலயன் இறந்தால் அவனை அடக்கம் செய்வது இன்னொரு முறை. இரண்டு வழி முறையும் அதனுடைய சடங்குகளும் மிக வித்தியாசமாகத்தான் இருக்கும்.
ஆனால் ஒரு முஸ்லிம் இறந்து விட்டாலோ அவனுக்காக அந்த ஊர் ஜமாஅத்தார்கள், ஊர்மக்கள், பக்கத்துவீட்டார்கள் இவர்களெல்லாம் நின்று அந்த மய்யித்தை(இறந்த உடலை) குளிப்பாட்டி விட்டு கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்வார்கள். இறப்பு விஷயத்திலும் இஸ்லாம் ஒன்றை போதிக்கிறது.
நான் இஸ்லாத்தை அடைவதற்கு முன்னால் ஒரு கம்யுனிஸ்ட்வாதியின் மகளின் இறப்பு சடங்கில் பங்கு கொண்டேன். அந்த வீட்டில் ஒரே அலறல் சத்தம் கேட்கிறது. தனது மகளின் பிரேதத்திற்கு முன் அமர்ந்து அலறி சத்தமிட்டு அழுகிறார் கம்யூனிஸ்ட்வாதியான அந்த முஸ்லிம் நபர்.
இதேபோல் அதன் பிறகு வேறொரு முஸ்லிம் மரணவீட்டிற்க