கடந்த 25-08-2013 அன்று இராஜபாளையம் நகரின் முஸ்லிம்கள் கணிசமாக வாழக்ககூடிய பகுதியில் இபாதுர் ரஹ்மான் பவுண்டேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான தாருல் இல்ம் இஸ்லாமிய நூலகம் ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமிய அடிப்படைகளை அறிந்துகொள்வோம் என்ற கல்வி தொடரில் “லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மத்துர் ரஸுலுல்லாஹ்” விளக்கவுரை (தர்பியா) வகுப்பு நடைபெற்றது. இந்த கல்வி வகுப்பிற்க்கு எராளமான ஆண்களும் பெண்களும் வருகை தந்திருந்தனர். முதல் மற்றும் இரண்டாவது அமர்வுகளில் லாயிலாஹ் இல்லல்லாஹ் – என்ற வகுப்பில் அஷ்ஷைக் S. கமாலுத்தீன் மதனீ (ஆசிரியர், அல்-ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ்) விளக்கவுரையாற்றி கீழ்கண்ட தலைப்பில் மிக விரிவான விளக்கங்களை தொகுத்து வழங்கினார். மக்கள் இதன் மூலம் பயன் பெறுவதற்காக முதல் பாகத்தை இஸ்லாம்கல்வி.காம் தளத்தில் வெளியிடுகின்றோம். இன்ஷா அல்லாஹ் அடுத்தத் பாகங்களையும் விரைவில் வெளியிடுவோம்.
- லாயிலாஹ இல்லல்லாஹ்-வின் வரைவிலக்கணம்.
- லாயிலாஹ இல்லல்லாஹ்-வை பற்றி அல்லாஹ் அல்-குர்ஆனில் கூறுவததென்ன?
- லாயிலாஹ இல்லல்லாஹ்-வை அல்லாஹ் ஒரு மரத்தோடு ஓப்பிட்டு கூறுகின்றான் அது என்ன?
- லாயிலாஹ இல்லல்லாஹ்-வின் சிறப்புகள் என்ன?
- கலிமா, கலிமத்துத் தய்யிபா, கலிமத்துத் தவ்ஹீத் என்றால் என்ன?
- அனைத்து நபிமார்கள் அனைவரும் செய்த பிரச்சாரம் என்ன?
- நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மக்கா முஷ்ரீக்குகள் என்ன கேட்டார்கள்? அதற்கு அவர்களின் பதிலென்ன?
- லாயிலாஹ இல்லல்லாஹ்-வை மக்கா முஷ்ரீக்குகள் எவ்வாறு புரிந்து வைத்திருந்தனர்? அதனுடைய தாக்கம் பற்றி அவரிகளின் நிலை என்ன?
- கலிமா-வை எப்படி சொன்னால் முஸ்லிமாக இருக்க முடியும்?
- ஆட்சி செய்யக்கூடியவர்களுக்கான தகுதி என்ன?
- முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த கலிமா-வின் மூலமாக என்ன எதிர்பார்க்கின்றார்கள் என சிலைவழிபாட்டு தலைவர்கள் புரிந்து வைத்திருந்தினர்!
- அல்லாஹ் எங்குள்ளான்? எல்லா இடங்களில் நிறைந்திருக்கின்றானா?
மேற்கண்ட கேள்விகளுக்கான விடையை அறிந்துகொள்ள இந்த வீடியோவை ஒருமுறை நிதானமாக பார்க்கவும்…..
Audio play
[audio:http://www.mediafire.com/download/nk4n4zwzc74u3kf/RJP-SK_Part-1.mp3]