வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா)
நாள்: 13.09.2013
இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா
ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
Audio Play
[audio:http://www.mediafire.com/download/zrgrdnzolwdia3b/weeping_eyes_for_Allah-KLM.mp3]
அருமையான பதிவு. ஜஸாக்கலாஹு கைர் ஷைக்.!
இதில் தாங்கள் குறிப்பிட்ட இந்த ஹதீஸ் எங்கே எந்த கிதாபில் ஹதீஸ் எங்களையும் குறிப்பிடவும்.
//காசிமு இப்னு முகமது இப்னு அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் காலையில் எழுந்திருந்தவுடன் ஆயிஷா (ரலி) அவர்கள் வீட்டிற்குத்தான் செல்வேன். அங்கே போனால் ஆயிஷா அவர்கள் தொழுதுகொண்டிருப்பார்கள். அன்று தொழுகையில் அவர்கள் பொபன்னல்லாஹூ அலைனா பொவகானா அதாவஸ்ஸமூர்” அல்லாஹ் எங்களுக்கு இந்த இஸ்லாம் என்ற நிஹ்மத்தைத் தந்தான் இந்த கொடூரமான நரக நெருப்பிலிருநது எங்களைப் பாதுகாத்து விட்டான்” என்ற ஆயத்தை திரும்ப திரும்ப ஓதி அழுதுகொண்டே இருந்தார்கள், அவர்களின் முந்தானை அழுகையால் நனைந்திருந்தது, அந் நெருப்பு சுட்டெரிக்கக் கூடியது அந்த நச்சுத்தன்மைக்கொண்ட நெருப்பிலிருந்து அல்லாஹ் எங்களை பாதுகாத்தானே என்ற கருத்தை உணர்ந்து அழுதார்கள். நான் நின்று நின்று பார்த்தேன், என் கால் கடுத்தது, பிறகு மற்றொரு வேலையை முடித்துவிட்டு வர சென்றுவிட்டேன் திரும்பி வந்து பார்க்கும் போதும் அதே ஆயத்தை ஓதியே தொழுது கொண்டு இருந்தார்கள்.
மற்றோரு முறை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் “வகர்ன ஃபி புயூத்திக்குன் அந்த முஃமீனான பெண்கள் அவர்களுடைய வீடுகளில் இருக்கட்டும்” இதா தபர்ருஜ்ன ஜாலியத்தில் ஊலா” முன்னால் வாழ்ந்த அந்த ஜாகிலிய்யா காலப் பெண்கள் போன்று தங்களுடைய உடம்புகளை வெளிக்காட்டிக் கொண்டு அலங்கரித்துக்கொண்டு செல்லாமல் வீடுகளிலேயே இருக்க வேண்டும்” என்கிற ஆயத்தை ஓதும் போது ஜமல் யுத்தத்தில் நான் கலந்து கொண்டதை நினைத்து நான் இப்படி இந்த அல்லாஹ்வின் ஆயத்திற்கு முரண்பட்டு விட்டேனே என்று நினைத்து நினைத்து ஓதி ஓதி அவர்கள் அழுது கொண்டு தொழுதார்கள்.//