805. அரஃபாவிலிருந்து திரும்பும்போது நான் வாகனத்தில் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவுக்கு அருகிலுள்ள இடது புறப் பள்ளத்தாக்கை அடைந்ததும் ஒட்டகத்தை அமரச் செய்துவிட்டுச் சிறுநீர் கழித்துவிட்டுப் பிறகு வந்தார்கள். நான் அவர்களுக்கு உளூச் செய்யத் தண்ணீர் ஊற்றினேன். சுருக்கமாக உளூச் செய்தார்கள். அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! தொழப் போகிறீர்களா? எனக் கேட்டேன். அதற்கவர்கள் ‘தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்) தான்’ எனக் கூறிவிட்டு, வாகனத்தில் ஏறி முஸ்தலிஃபா வந்ததும் தொழுதார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்படும் நாளில் ஃபழ்ல் இப்னு அப்பாஸைத் தம் வாகனத்தில் தமக்குப் பின்னால் ஏற்றினார்கள். குரைப் மற்றொரு அறிவிப்பாளர் கூறினர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜமராவைச் சென்றடையும் வரையில் தல்பியா கூறிக் கொண்டிருந்தார்கள் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
ஜமராவில் கல்லெறியும் வரை தல்பியாக் கூறுதல்.
புஹாரி :1669 உஸாமா பின் ஜைது (ரலி).