Featured Posts

சதாம் ஹுசைன் ஒரு சர்வாதிகாரியா?

அரபுலகின் ஆண்மையுள்ள ஆட்சியாளர்களில் ஒருவரான சதாம் ஹுசைனை முஸ்லிம்களின் தியாகத் திருநாளாம் ஈதுல் அல்ஹா (பக்ரீத் பண்டிகை) அன்று அமெரிக்க எடுபிடிகள் தூக்கிலிட்டுக் கொன்றுள்ளனர்.

ஈராக் அதிபர் சதாம் என்னதான் கொடுரமானவராக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களும் நியாயவான்களும் சதாமுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனன அநீதியானது என்றே கருதுகின்றனர். குறிப்பாக அமெரிக்க மக்கள், இதற்குக் காரணமான கயாவளி ஜார்ஜ் புஷ்ஷின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பைக் காட்டும் விதமாக சென்ற மாதம் நடந்த இடைக்கால தேர்தலில் செருப்பால் அடிப்பதற்குப் பதில் ஓட்டால் அடித்து நிரூபித்தார்கள்.

முஸ்லிம்கள் சந்தோஷமாக இருக்கும் திருநாளில் தன் எடுபிடிகள் மூலம் கொடூர சர்வாதிகார வெறியைத் தீர்த்துக் கொண்டுள்ள ஜார்ஜ் புஷ், சதாம் பதுங்கு குழியில் இருந்தபோதும், அமெரிக்க எடுபிடிகளின் நீதிமன்றக் காவலில் இருந்த போதும், (அமெரிக்காவின்) அடக்குமுறைக்கும் ஆணவத்திற்கும் அடிபணியாது இறைவனை மட்டுமே நம்பும் தியாகிகளின் பேறு பெற்றுள்ளார். இறைவனை மறந்து ஆட்சி செய்யும் ஆட்சியாளார்கள், இறைவனை உணர செலுத்த வேண்டியவை எப்படியெல்லாம் இருக்கும் என்பதற்கு சதாமின் சகாப்தம் ஒரு நிகழ்கால உதாரணம்.

சதாம் ஹுசைனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, “அவர் ஆட்சியில் மறுக்கப்பட்டிருந்த நீதிகளின் ஒரு பகுதியே” என்று திருவாய் மலர்ந்த உலக மகாக் கோழை ஜார்ஜ் புஷ் இன்று சதாம் தூக்கிலிடப்பட்டதற்கு கருத்து தெரிவிக்கும் போது, “சதாமை நீதியின் முன் கொண்டு வருவதன் மூலம் ஈராக்கில் நடக்கும் வன்முறைகள் முடிவுக்கு வராது; எனினும் இது நிலையான மற்றும் சுயபாதுகாப்புள்ள ஈராக்கை ஜனநாயகம் ஆள்வதற்கான பாதையின் முக்கியமான மைல்கல்” என்றார்.
Image and video hosting by TinyPic

இன்னொரு பக்கம் உலகத் தலைவர்கள் கோழைத்தனமான இத்தண்டனையைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளனர். (அதற்கு மட்டும்தானே இவர்கள் இருக்கிறார்கள்).

சர்வாதிகாரி, கொடூர கொலைகாரன் என்று சொல்லப்பட்ட சதாமின் ஆட்சிக்காலத்தில் ஈராக்கியர்கள் பெற்று வந்த அமைதியான மகிழ்ச்சியான வாழ்வை, ஜனநாயக உலகின் காவலர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்க ஆட்சியார்களால் இழந்துள்ளனர். இந்தவகையில் சதாம் ஹுசைன் புஷ்ஷ விட பலமடங்கு உயர்ந்து நிற்கிறார்.

தன்னைக் கொல்ல திட்டமிட்ட 148 சூழ்ச்சியாளர்களைக் கொன்ற சதாமுக்கு ஈராக்கின் சட்டத்தின்படி மரன தண்டனை என்றால், 600,000 க்கும் அதிகமான அப்பாவிகளைக் கொல்லக் காரணமான புஷ்ஷூக்கு என்ன தண்டனை காத்திருக்கிறது?

“நீங்கள் (ஈராக் மக்கள்) நிம்மதியாக தூங்குங்கள். நான் உங்களுக்காக தூங்காமல் இருக்கிறேன்.” என்று 2003, ஜனவரி 20 அன்று சொன்ன சதாம் ஹுசைன் இன்று (டிசம்பர்-30,2006) கொடூரர்களின் சதியால் ஈராக் மக்கள் நிம்மதியாகத் தூங்காமல் தவிக்க விட்டுச் சென்றுள்ளார்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்…

25 comments

  1. நல்லடியார்

    நியாயத்தின் பார்வையில் முழுக் குற்றவாளியாய்
    இருந்தாலும், அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த
    விதமாய், இன்று நாளை என்று விளையாட்டுக் காட்டி
    ஊகத்தில் அனைவரையும் வைத்திருந்து சதாமை
    அமெரிக்கா தூக்கிலிட்டவிதம் தவறு தவறு தவறு!
    இது என் கருத்து, இதனால் சதாம் திரும்ப வர வேண்டுமென்று
    விரும்பவுமில்லை. நடுநிலைமையின் நீதிமன்றத்தில்
    அவருக்கு தண்டனை தரப்படப் போவதுமில்லை!
    சக மனித உயிரான சதாமுக்கு நீதியென்ற பெயரில்
    இழைக்கப்பட்ட கொடுமை அநீதியே!

    http://vaigaraivaanam.blogspot.com/2006/12/blog-post.html என் பதிவில் படித்தது.பதிவர்: நம்பி.பா.(Nambi.B)

  2. இறை நேசன்

    சகோதரர் நல்லடியார் அவர்களே,

    தியாகத் திருநாள் அன்று முஸ்லிம்களின் மனதை வேதனையடைய செய்துவிட்டான் கோமாளி புஷ். கோமாளியாகவே காட்சியளித்து கொடுங்கோலனாக இருப்பது எப்படி என்று இவனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

    ஒரு விதத்தில் மனம் மகிழ்கிறது. தவறு செய்தவரை தியாகத் திருநாளில் தியாகியாக்கி விட்டான் பிசாசு புஷ்.

    //ஆப்கானிஸ்தான் மேலும், ஈராக் மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்து லட்சக் கணக்கான பால்மணம் மாறாத பிஞ்சுகளுக்கு மருந்துப் பொருட்களை கூட தடை செய்து தவிக்கவிட்டுக் கொன்றானே புஸ்…. அவனைத் தூக்கில் போட்டால் எத்தனை முறை போடுவது? டொமஹாக்கின் முனையில் ஜனநாகத்தை நிலைநாட்டப் புறப்பட்ட கோமாளி புஸ், ஜனங்களைக் கொன்றுவிட்டு எவர் மேல் ஜனநாயகத்தை நிலைநாட்டப் போகிறானாம்? //

    http://vanajaraj.blogspot.com/2006/12/blog-post_29.html

    வேதனையுடன்
    இறை நேசன்.

  3. கரு.மூர்த்தி

    எவ்வளவு நல்ல விஷயம் , மகிழ்வதை விட்டு வருந்துகிறீர்களே ? நியாயமா ? சாக வேண்டியவர் செத்தது எப்படி வருத்ததிற்குறியது ? குஜராத்தில் கொன்றார்கள் என்று புலம்புகிறீகளே , அதை விட 1000 மடங்கு அதிக முஸ்லீம்களை கொன்றவன் போகட்டுமே ?

  4. சல்மான்

    நீதிமன்றம் பேரில் நிறைவேற்றப்பட்ட சதாமுடைய கொலை பற்றி இங்கு எழுதும் பலரும்
    முஸ்லிம், இடதுசாரி, ஜன்ரஞ்சக, ஏழை, ஈழ, உட்பட மிகிதமானோர்
    அவருடைய குற்றங்கள் பற்றி மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை.

    தனிநிலை பாதுகாக்கப்பட்ட, ஏகாதிபத்திய பின்புலன் இல்லாத, இறையான்மை கொள்கைகளை தாங்கிகளாக கொண்டியங்கும் மன்றத்தால் விசாரிக்கப்பட்டு
    தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதே மனிதர்கள் மீது சார்பில்லாத நல்லெண்ணம் கொண்டோர்களின் விருப்பம்.

    எழுப்படும் கேள்வி என்னவென்றால், இந்த ‘விருப்பத்தை’ ஒரு noble appeal ஐ
    தன்னுடைய தனிப்பெரும் சுயநலத்துக்காக – ஒரு ஏகாதிபத்திய சக்தி – சர்வதேச பிரச்சினைகளில் சுயநல அடிப்படையில் பலநிலைப்பாடுகள் கொண்ட சுயநலதேச சக்தி – பகடைக்காயாக பயன்படுத்தி,
    தன்னுடைய கோரமுகத்தை இதன் பின்னால் ஒளித்துக்கொண்டு வன்முறை அடக்குமுறை கொள்ளை ஆணவம் போன்ற கொள்கைகளை சத்தமில்லாமல் பரப்புகிறதே…
    இதனை அனுமதிக்கலாமா? என்பதே.

    இந்த நிகழ்வில் தமிழ்மணம் ஊடாக மேலும் எழும் கேள்விகள்:

    1. இதே ஏகாதிபத்திய சக்தி, கொடூர கொலை கற்பழிப்புகளை நடத்தியதன் காரணம் காட்டி, இனப்படுகொலைகாரன் நரேந்திரமோடிக்கு நுழைவு மறுத்த போது – இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் ‘ஒரு வர்க்கம்’, அன்றைக்கு, சார்பு ஊடகங்கள் மூலம், இந்தியா அவமானப்படுத்தப்பட்டதாக பிரச்சாரம் செய்தார்கள்.
    இதுதான் பேச நா இரண்டுடையார் போற்றி என்பதா?

    2. எத்தனையோ செய்திகள் மூலம், உலகின் பல்வேறு கொடூரங்களுக்கு மூலகுசும்பன் ‘பெரியரக்கன்’ (காட் ப்லெஸ் பெரியரக்கன்) என காண்பித்தும், – இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் ‘ஒரு வர்க்கம்’, அதை பற்றி பகல் நோன்பு வைத்திருக்கிறார்கள். ஒருவேளை ‘உயிர்களை கொல்வது பாவம் – அவை சிறியளவில் இருக்கும் வரை’ என்ற புதுக் கருத்தை தாங்கள் நம்பும் இறைக் கொள்கைகள் புதிதாக சுவீரகரித்து கொண்டதாலா?

    3. கார்டூன் மூலம் குசும்பு செய்து பின் எழுந்த ஆர்ப்பாட்ட நிலைக்கு ஆத்திரச் சாயம் பூசிய – நாகரீகமிக்க அடுத்தவர் நாகரீகம் மதிக்கும், அப்பாவியுமான ‘உலக சமாதான தூதுவன்’ (பொதுவாக, இவர் புகுந்த இடம் உருப்படாது) – ஈராக்கிய மக்கள் ‘தியாகத் திருநாளில்’ எழும்போது அதை ‘வன்முறைத் திருநாளாக’ வாழ்நாலெல்லாம் நினைக்கும்படி ஒரு ஏற்பாட்டை கார்டூன் கணக்காக செய்திருக்கிறது.
    இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் ‘ஒரு வர்க்கம்’, இதையும் கார்டுனிற்கு பல்லை காமிப்பதுதான் நாகரீகம் என்று அன்று பாடம் சொன்னது போல, இன்று இந்த சம்பவத்தை ‘வந்து எங்களை காத்தாய் வடிவேலா!!’ என இருகரம் சேவித்துக் கொண்டாடவேண்டுமென பாடம் சொல்வது ஏன்?

    ஒருவேளை, மனிதர்கள் மீது சார்பில்லாத நல்லெண்ணம் என்பது பேசும் விஷயத்தை பொருத்ததா?

    சல்மான்

    this will show up in other related posts too.

  5. நல்லடியார்

    சகோதரர் இறைநேசன்,

    சீனியர் புஷ்ஷை அவமதித்தற்காக ஜூனியர் புஷ் உலகின் மனசாட்சியைக் கலடியில் மிதித்துவிட்டு பழி தீர்த்துக் கொண்டுள்ளார். தண்டனையை நிறைவேற்ற தேர்ந்தெடுத்த நாளும் அவசரமும் புஷ்ஷின் நினைப்பில் மண் அள்ளிப் போட்ட இராக்கியர்களின் எதிர்ப்புணர்வால் நிதானமிழந்து தன் முகத்தில் கரிபூசிய அமெரிக்க மக்களின் மெளனப்புரட்சியால் எழுந்ததாகும். அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.

    கரு.மூர்த்தி,

    குஜராத்தில் மோடி செய்ததைப் போல் சதாமும் ஈராக்கில் செய்தார் என்று ஒப்பிட்டுள்ளீர். சதாமுக்கு தண்டனை கிடைத்து விட்டது; மோடிக்கு எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?

    சதாமுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்க்கவில்லை. அதனைச் செய்து முடிக்க கையாண்ட சூழ்ச்சியைத்தான் எதிர்க்கிறோம். இதெல்லாம் மனசாட்சி உள்ளவர்கள் செய்வது; உங்களுக்கு ஏன் தேவையில்லாத வேலை.

  6. தண்டனை கொடுத்தவன் கெட்டவனாக இருந்தபோதும் செத்தவன் கெட்டவன்தானே, அதை நினைத்து இந்த நாளில் சந்தோசப்படுங்க சாமி.

    தமிழ்நாட்டு முஸ்லீம்களின் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது, இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் கூட இது ஆபத்தானது, உண்மையில் முஸ்லீம்கலின் உணர்வு இந்த வகையானதே இது பொதுவாக அனைத்து முஸ்லீம்கலிடமும் கானப்படும் மனநிலை , உண்மையை உராய்ந்து பார்க்கவேண்டும் சதம் நல்லவனா? கெட்டவனா? அவன் கெட்டவன் கெட்வன் அழிக்கப்படவேண்டியவனே, மற்றப்படி அமெரிக்க நீதி வழங்கியதுதான் தவறு, அதற்காக கெட்டவனை மன்னிக்கமுடியாது.

  7. தண்டனை கொடுத்தவன் கெட்டவனாக இருந்தபோதும் செத்தவன் கெட்டவன்தானே, அதை நினைத்து இந்த நாளில் சந்தோசப்படுங்க சாமி.

    தமிழ்நாட்டு முஸ்லீம்களின் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது, இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் கூட இது ஆபத்தானது, உண்மையில் முஸ்லீம்கலின் உணர்வு இந்த வகையானதே இது பொதுவாக அனைத்து முஸ்லீம்கலிடமும் கானப்படும் மனநிலை , உண்மையை உராய்ந்து பார்க்கவேண்டும் சதம் நல்லவனா? கெட்டவனா? அவன் கெட்டவன் கெட்வன் அழிக்கப்படவேண்டியவனே, மற்றப்படி அமெரிக்க நீதி வழங்கியதுதான் தவறு, அதற்காக கெட்டவனை மன்னிக்கமுடியாது.

  8. தனது நாட்டுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யட்டும், அதற்காக தனது நாட்டு மக்களையே விசவாயு அடித்து கொன்ற ஒரு கொடூரனுக்காக குரல் கொடுப்பது மடமைத்தனம், அந்த குழந்தைகளும் சதாமுக்கு எதிராக சதி செய்தார்கள் என்பது மடமையிலும் மடமை. எந்த ஒரு இனத்தை அழிக்கும் சர்வாதிகாரிக்கும் இதுதான் முடிவு. முஸ்லீம்களுக்காக இந்தியா குரல்கொடுக்கப்போய் சொந்த செலவில் சூனியம் வங்கிக்கொள்ளாது என நம்புவோம். ஏனெனில் முஸ்லீம் சமூகம் ஒருபோதும் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கபோவதில்லை. அவர்களுக்கு இந்தியாவை விட பாகிஸ்தானும் ,ஆப்கானிஸ்தானும்,பங்களாதேசும் முக்கியமானவை

    விசவாயு அடித்துகொல்லப்பட்டது திரிபு என்பது, மனிதாபிமானமற்ற செயல், ஏனெனில் அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருவன் என்னுடன் சேர்ந்து வேலை செய்கிறான். சதாமின் சமுதாயத்தை சேர்த ஒருவனும் என்னுடன் வேலை செய்கிறான், அவனும் சதாம் செய்தது பிழை என்றுதான் கூறுகிறான், ஆனால் அமெரிக்கா நீதி கொடுத்தைத்தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனப்பற்று காரனமாக சதாமை ஆதரிக்கிறான், பொதுவான முஸ்லீம்களும் இதேபோக்கு உடையவர்கள்தான். அவர்கள் ஏனோ உன்மையை உராய்ந்து பார்க்கமறுக்கிறார்கள்.

  9. வாசகன்

    //
    சதாமைத் தூக்கிலிட்டுக் கொன்றதைக் கண்டிக்கும் யாரும் சதாமுக்காகவோ, இஸ்லாமியன் என்பதற்காகவோ கண்டிக்கவில்லை. ‘என்னை எதிர்ப்பவனுக்கு இது தான் கதி’ என்று சொல்லாமல் சொல்கிற பெரியண்ணனின் ரவுடித்தனத்துக்காகவே கண்டிக்கிறார்கள். இதைப் புரிந்துக்கொண்டாலுங்கூட, பூணுலர்களும் பீலாக்கள் வழக்கம் போல் தனது இஸ்லாமிய வெறுப்பை உமிழ முண்டியடித்து வந்துவிடுகிறார்கள் – இஸ்லாம் என்ற வார்த்தை தென்படும் இடமெங்கிலும்.

    அதுசரி, புஷ்சின் மோடித்தனத்தில் மகிழ்கிற எல்லோரும் பூணுலர்களாகவே இருப்பது ஏன்?

    சு.வி//

    நான் பார்த்த ஒரு பின்னூட்டம்.

  10. நல்லடியார்

    //அதுசரி, புஷ்சின் மோடித்தனத்தில் மகிழ்கிற எல்லோரும் பூணுலர்களாகவே இருப்பது ஏன்?//

    ?, சதாம் கொல்லப்பட்ட விதத்தில் மட்டுமல்ல! பாலஸ்தீனர்களைக் அன்றாடம் கொன்றொழிக்கும் யூதவெறியர்களுக்கும் அடிவருடுவதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்பவர்களும் நம்மில் உள்ளனர். ஆப்கான், ஈராக், ஈராக், சிரியா என நீளும் அமெரிக்காவின் இரத்தவெறிக்கும் மீரட், பாகல்பூர்,குஜராத், மங்களூர் என நீளும் மோடித்துவாவுக்கும் உள்ள ஒற்றுமையோ என்னவோ!

  11. மரைக்காயர்

    //தண்டனை கொடுத்தவன் கெட்டவனாக இருந்தபோதும் செத்தவன் கெட்டவன்தானே, அதை நினைத்து இந்த நாளில் சந்தோசப்படுங்க சாமி.//

    ஈராக் பொதுமக்களோட நிலைமையை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க சாமி. ஈராக்ல கிடைக்கிற அளவு எண்ணை நம்ம இந்தியாவுலேயும் கிடைச்சு, அகில உலக தாதா புஷ் அவர்களின் கடைக்கண் பார்வை இங்கே பட்டு, ‘இந்தியாவுலே ஜனநாயகத்தை நிலைநாட்ட’ அவர் இங்கே வந்து குதிச்சார்னா, நாம இப்படி வக்கனையா பேசிக்கிட்டிருப்போமா? அவரோட ராணுவம் இங்கே ‘ஜனநாயக சேவை’களை செஞ்சு யாரையாவது புடிச்சு ‘ஜனநாயக முறைப்படி’ தூக்குல போட்டாங்கன்னா, நாம ‘ஹையா.. நரகாசுரன் ஒழிஞ்சான்’ அப்படின்னு ஜாலியா தீபாவளி கொண்டாடிக் கொண்டிருப்போமா? கொஞ்சம் யோசிங்க சாமி!

    பிரச்னை,கெட்டவன் தண்டனை கொடுத்தது மட்டுமில்லை சாமி! அந்த கெட்டவன் எந்த காரணத்துக்காக எத்தனை பொய் சொல்லி ஈராக் உள்ளே நுழைஞ்சான்? அவனோட அந்த சுயநல பொய்யால எத்தனை லட்சக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்திருக்கிறார்கள்? அந்த கெட்டவன் உள்ளே நுழையுற முன்னாடி ஈராக் எப்படி இருந்துச்சு? இப்ப எப்படி இருக்குது? இப்படி ஒரு நாட்டையே சீர்குலைக்க அந்த கெட்டவனுக்கு என்ன உரிமை இருக்குது? இதையெல்லாம் கொஞ்சம் யோசிங்க சாமி!

  12. வாசகன்

    //
    நாயைத் தூக்கிலிடுவதாக இருந்தாலும் முறையாக விசாரணை நடத்தித் தூக்கிலிடுபவர்கள் என்று பெருமைப்படும் மரபுடையவர்கள் ஆங்கிலேயர்கள். ஆனால், சதாம் ஹுசேன் மீதான விசாரணையில் அவரை ஒரு நாயாகக் கருதிக்கூட அவர்கள் நடத்தவில்லை.

    ‘சதாம் ஹுசேன் ஒரு சர்வாதிகாரியல்ல. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான்’ என்று கருத்து தெரிவித்ததற்காக, விசாரணையின் முதல் நீதிபதி நீக்கப்பட்டார். சதாம் ஹுசேனுக்காக வாதாடிய வக்கீல்கள் மூவர் அடுத்தடுத்து மர்மமாகக் கொல்லப்பட்டார்கள். சதாமுக்காக ஆஜரான முன்னாள் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் கிளார்க் என்பவர், ‘இந்த விசாரணை கேலிக்கூத்தாக இருக்கிறது’ என்று சொன்னதற்காக நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, சதாம் ஹுசேன் உலக நீதிமன்றத்தின் முன்பு விசாரிக்கப்படவில்லை. யுத்தத்தில் இராக்கைக் கைப்பற்றிய பின் அமெரிக்கா ஏற்படுத்திய இராக் அரசாங்கத்தின் உள்ளூர் நீதிமன்றத்தின் முன்பு நடைபெற்ற விசாரணை இது. இராக்கில் யுத்தம் நடத்த சர்வதேசப் படை அமைத்தது அமெரிக்கா. யுத்தத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலையும் (ஏறத்தாழ மிரட்டித்தான்) வாங்கியது அமெரிக்கா. ஆனால், யுத்த குற்றத்துக்காக விசாரணையை மட்டும் உலக நீதிமன்றத்தின் முன்பு நடத்துவதற்கு ஐ.நா.சபை கோரியும், அமெரிக்கா மறுத்துவிட்டது.

    அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், தன்னைத் தூய கிறித்துவராகக் கருதுபவர். சதாமைத் தூக்கிலிடக் கூடாது என்றும் மரண தண்டனையே கூடாது என்றும் போப்பாண்டவர் சார்பில் வாடிகன் மத குருக்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்.

    புஷ் மாநில முதலமைச்சராக இருந்த போதுதான், டெக்சாஸ் மாநிலத்தில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

    வன்முறைகளிலேயே மிகக் கொடுமையான வன்முறை எது?

    நீதியின் பெயராலும் சட்டத்தின் பெயராலும் நடத்தப்படுவதாகும். சதாமின் வன்முறைகளும் சட்டத்தின் பெயரால் நடத்தப்பட்டவைதான். சதாம் மீதானதும் அப்படியேதான் நடத்தப்பட்டது.//

    -ஞாநி

  13. //தண்டனை கொடுத்தவன் கெட்டவனாக இருந்தபோதும் செத்தவன் கெட்டவன்தானே, அதை நினைத்து இந்த நாளில் சந்தோசப்படுங்க சாமி.//
    அப்படி இல்லை THAMIL. கெட்டவனே ஆனாலும் அவனை கொல்ல ஒரு வரை முறை இருக்க வேண்டும். இன்று அல்ப காரணங்களால் சதாமை கொல்ல முடியும் பொழுது, நாளை இன்னொருவரை இதே காரணம் சொல்லி கொல்ல முடியாதா என்ன? இன்று நாம் அமெரிக்காவிற்கு தலையாட்டிக் கொண்டிருக்கிறோம். நாளை நமக்கே ரிவீட்டு உண்டு.

    //தமிழ்நாட்டு முஸ்லீம்களின் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது, இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் கூட இது ஆபத்தானது//
    இது சரி தான். ஆனால் அவர்களை மாற்ற முடியாது. அவர்கள் சாப்பாடு இல்லாமல் கூட இறப்பார்கள். ஆனால், மதம் இன்றி இருக்க முடியாது அவர்களால்.

    //முஸ்லீம் சமூகம் ஒருபோதும் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கபோவதில்லை. அவர்களுக்கு இந்தியாவை விட பாகிஸ்தானும் ,ஆப்கானிஸ்தானும்,பங்களாதேசும் முக்கியமானவை//
    அதே…அதே.

    //அவனோட அந்த சுயநல பொய்யால எத்தனை லட்சக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்திருக்கிறார்கள்?//
    இறந்தவர்கள் இசுலாமியர்கள் என்றதும் கண்ணீர் வடிக்கிறீர்களே, இதே போல மற்ற இன மக்களுக்காகவும் கண்ணீர் சிந்துவீர்களா திரு.மரைக்காயர்?

  14. வாசகன்

    //முஸ்லீம் சமூகம் ஒருபோதும் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கபோவதில்லை. அவர்களுக்கு இந்தியாவை விட பாகிஸ்தானும் ,ஆப்கானிஸ்தானும்,பங்களாதேசும் முக்கியமானவை//
    அதே…அதே.

    சீனு,
    பிரிவினையின் போதும் இந்தியாவே எங்கள்நாடு என்று இருந்த, இந்தியசுதந்திரத்துக்காக விகித அளவில் பெரும்பங்களித்த சமூகத்தைப் பற்றிய உங்கள் கூற்று மனம் வலிக்கச்செய்கிறது.
    உண்மை என்னவென்றால், பெரும்பான்மையினரின் – மன்னிக்கவும், அவசியத்துக்கு பெரும்பான்மையினராக-ஒடுக்கப்பட்டோரையும் ‘சேர்த்து’க்காட்டிக்கொள்கிற ஆதிக்க வெறியர்களின் பிரச்சாரத்துக்கு பலியாகிவிட்டவர்களின் பட்டியலில் இணைகிறீர்கள்.

    ‘பெரும்பான்மையினரின் மதவெறி ‘தேசப்பற்று’ என்கிற முகமூடியை அணிந்துக்கொள்ளும்’ என்று சொன்ன நேருஜியை நினைவுபடுத்துகிறது உங்கள் கூற்று.

    இன்று வரை ராணுவரகசியங்களை விற்றதில் பிடிபட்டவர்கள் முஸ்லிம்களா? உயர்சாதியினரா?

    உங்கள் கவனத்திற்கு:
    http://muslimpage.blogspot.com/2007/01/blog-post.html – முஸ்லிம் பதிவை
    படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.

  15. வாசகன்

    //தமிழ்நாட்டு முஸ்லீம்களின் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது, இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் கூட இது ஆபத்தானது//
    இது சரி தான். ஆனால் அவர்களை மாற்ற முடியாது. அவர்கள் சாப்பாடு இல்லாமல் கூட இறப்பார்கள். ஆனால், மதம் இன்றி இருக்க முடியாது அவர்களால்.///

    மத உணர்வுடன் இருப்பது தவறில்லை.
    மத உணர்வு மற்றவனையும் மனிதனாகப் பார்க்கச்சொல்லும்
    மதவெறி தான் கூடாது. மதவெறி மற்றவனை விலங்கினம் போல நடத்தத் தூண்டும்.
    மதவெறியுடன் பெரும்பாலான அப்பர்கேஸ்ட் இருப்பதால் தான் ஆரெஸெஸ் பரிவாரங்கள் இன்னமும் இந்நாட்டில் கோலோச்சிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுடன் ஒப்பிடும்போது வெறி பிடித்த, எதிர்வினை ஆற்றுகிற முஸ்லிம் வெறியர்கள் குறைவு தான்.

  16. இருப்பதில் இசைவான திருடன் கருணாநிதி என கஞ்ஜிரா அடிக்க தெரிந்த புருடர்களுக்கு, சக்தி மிகுந்த நாடுகளில் கொஞம் நியாமாய் ஜனநாயகம் பேணும் அமெரிக்காவை கசப்பது ஏன். ஊழல், உபத்திரவம் மிக்க இந்திய மனிதர்களில், இன்னும் தெயவம், வேதம் என் நல்வாழ்க்கை வாழும் ஒரு குலத்துடன் பகைமை பாராட்டுவது ஏன்?

    திருந்தட்டும் எல்லோரும். பிறகு பார்க்கலாம் அடுத்தவர் முதுகை.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  17. வாசகன்

    சம்மனில்லாமலே ஆஜராகி வெறுப்பு உமிழும் பரமபிதா அவர்களே!
    சம்பந்தமேயில்லாமல் கருணாநிதிய ஏன் இசுத்துக்கினு வர்றீங்க!

    சதாம் விசயத்துல அமெரிக்கா சரியா-ன்னு மாத்ரம்
    சரக்கு இருந்தா சொல்லிட்டுப் போங்க

  18. வாசகன்

    சம்மனில்லாம ஆஜராகி வெறுப்புத்துப்பி பரமபிதா அவர்களே!
    சம்பந்தமேயில்லாம கருணாநிதிய இங்கன ஏன் இசுத்துக்கினு வர்றீங்க?

    சதாம் விஷயத்தில அமெரிக்க புஷ் சரியா?ன்னு சொல்ல முடிஞ்சால் சொல்லிட்டு போயிட்டிருங்க!

  19. மரைக்காயர்

    //இறந்தவர்கள் இசுலாமியர்கள் என்றதும் கண்ணீர் வடிக்கிறீர்களே, இதே போல மற்ற இன மக்களுக்காகவும் கண்ணீர் சிந்துவீர்களா திரு.மரைக்காயர்?//

    நிச்சயமா கண்ணீர் சிந்துவோம். அதயும் நீலிக்கண்ணீர் என்று ஏளனம் செய்ய இங்கே சிலர் இருக்கிறார்கள் என்றாலும் கூட.

    புஷ் என்னமோ ஈராக் மக்களுக்கு விடிவுகாலம் கொண்டு வந்த மாதிரி வக்காலத்து வாங்குறவங்க இந்த கேள்விக்கு பதில் சொல்வாங்களா?

    //ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய் சொல்லி அந்த நாட்டையே சுடுகாடாக்கி சதாமையும் தூக்கில் போட்டாயிற்று. அதே சமயத்தில் அணு ஆயுத பரிசோதனைகள் செய்து வருவதாக ஒப்புக் கொண்ட வடகொரியாவுடன் வெறும் பேச்சு வார்த்தை மட்டுமே!

    நாட்டு நலத்திட்டங்களுக்காக அணு ஆராய்ச்சியில் ஈடுபடும் ஈரான் இவர்களின் அடுத்த குறி. அதே சமயம், ஐநா சபையின் தடையுத்தரவுகளை குப்பையில் போட்டு அணு ஆயுதங்களை குவித்து வைத்து அண்டை அரபு தேசங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் அராஜக தேசம் இஸ்ரேல் இவர்களின் செல்லப் பிள்ளை.//

  20. நல்லடியார்

    சதாம் ஹுசைன் தூக்கில் போடப்பட்டதைப் பற்றிய பதிவுகளில் எவரும், சதாம் ஹுசைனை முஸ்லிம்களின் பிரதிநிதியாகச் சொல்ல வில்லை. தலைவலி போய் திருகுவலி வந்ததைப்போல் அமெரிக்க ஆக்கிரமிப்பையும் அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட இராக்கிய கைப்பாவைகளின் எடுபிடி தனத்தையுமே சாடுகிறார்கள்.

    சர்வாதிகாரி என்று அமெரிக்காவால் சொல்லப்பட்ட சதாம் ஆட்சியில் பெற்ற நிம்மதியை அமெரிக்காவினாலும் கைப்பாவை எடுபிடி அரசாலும் ஈராக்கியர்கள் இழந்துள்ளனர். இந்தச் சூழலில் தண்டனையை நிறைவேற்ற தேர்ந்தெடுத்த நாள், முஸ்லிம்களின் புனித தினங்களில் ஒன்றான ஈத் பெருநாள் தினம் என்பதாலும், வளைகுடாவை ஷியா-ஷன்னி-குர்து என வகைப்படுத்தி நிரந்தரமாக பெட்ரோலை உறிஞ்ச கூடாரமடிக்கும் அமெரிக்க சூழ்ச்சிக்கு வழிசெய்து விட்டதாலுமே மனம் வெதும்பி எழுதியுள்ளனர்.

    இஸ்லாமியத் தண்டனைகள் கொடூரமானவை என்று வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஒப்பாரியிடும் மேதாவிகள் சதாமுக்கு வழங்கப்பட்ட (For the interest of America) தண்டனையை வரவேற்றுள்ளார்கள். (ஈராக்கில் இஸ்லாமிய ஷரீஅத் படியான சட்டமும் ஆட்சியும் இல்லை என்பது வேறு!).

    நம்நாட்டு பாராளுமன்ற தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட அப்ஸல் குரு அவசரமாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பவர்கள், சதாம் ஆட்சியில் தனக்கு எதிராக தேசதுரோகக் குற்றம் செய்தவர்களைத் தண்டித்ததைச் சுட்டி சதாம் கொல்லப்பட்டது நியாயமே என்று வாதாடுவது இன்னொரு விநோதம்!!

    சர்வாதிகாரி (Tyrant, Dictator) என்றால் சட்டத்திற்குக் கட்டுப்படாமல், தன்னிச்சையாக மக்களை அடக்கியாள்பவன் என்று அர்த்தம். சதாமுக்கு இது பொருந்தும் என்றால் அதைவிட மோசமான எல்லாத் தகுதிகளும் பொருந்திய ஜார்ஜ் புஷ்ஷும் ஒரு சர்வாதிகாரியே! சதாமுக்கு ஒரு நீதி புஷ்ஷுக்கு ஒரு நீதி! நவீன மநுநீதியல்லவா இது!

    ஜனநாயகம் என்ற போர்வையில் மக்களை அடக்கியாளும் எல்லா ஆட்சியாளர்களின் செயல்பாடுகளும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு முறையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இதனைச் செய்ய அமெரிக்காவுக்கு மட்டுமே தகுதியுள்ளது என்று நம்பும் அடிவருடிகளை என்னவென்பது?

    அமெரிக்காவினால் வளைகுடா பெட்ரோலுக்காக பேரழிவு ஆயுதங்கள் என்ற பூச்சாண்டியுடன் இன்று ஈராக் சீரழிந்துள்ளது; வேறு ஏதாவது ஒரு காரணத்துக்காக நாளை நம்நாட்டிலும் அமெரிக்கா தலையிடும்போதும் இந்த திடீர் தேசபக்த செம்மல்கள் என்ன செய்யப்போகிறார்கள்? இந்திய தேசிய சுதந்திரப் போராளிகளைக் காட்டிக் கொடுத்து ஆட்சி சுகம் கண்டவர்களே என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?

    ஈராக்கில் அமெரிக்காவினால் விளைந்த நன்மைகளை ஒரு ‘தற்காலிக கனடா அடிமை’ பட்டியலிட்டு புலங்காகிதம் அடைந்துள்ளார். அத்துடன் அபுகாரிஃப் மற்றும் அமெரிக்க ஆயுதங்களால் மாண்ட ஈராக்கியர்களின் பட்டியலையும் பார்த்திருக்கக் கூடாதா? அடப்பாவிகளா! இப்படியும்கூட அமெரிக்க விசு(ஸா)வாசத்தைக் காட்டனுமா? கண்ணை விற்று சித்திரம் வாங்குபவர்கள்!

    உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!!

  21. Have you written anything about the muslims killed in Darfur,Sudan.
    Why is that this topic is a taboo for you.Is it because there mulsims are killing another section of muslims with support from the state which swears by islam.Perhaps for you a life killed by USA is more worthy than a life killed by muslim(s).

  22. ஆப்கானிஸ்தான் மேலும், ஈராக் மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்து லட்சக் கணக்கான பால்மணம் மாறாத பிஞ்சுகளுக்கு மருந்துப் பொருட்களை கூட தடை செய்து தவிக்கவிட்டுக் கொன்றானே புஸ்
    a big lie.Iraq was permitted to get essential medicines under Food for Oil program.But it was Saddam who squandered that for personal gain.Of course Natwar Singhs and others got a cut in the deals.

  23. வெறி பிடித்த, எதிர்வினை ஆற்றுகிற முஸ்லிம் வெறியர்கள் குறைவு தான்.

    Ask those who died in blasts in Mumbai,Coimbatore and elsewhere.
    They will tell about the kindness of these muslims.

  24. விசவாயு அடித்துகொல்லப்பட்டது திரிபு என்பது, மனிதாபிமானமற்ற செயல், ஏனெனில் அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருவன் என்னுடன் சேர்ந்து வேலை செய்கிறான். சதாமின் சமுதாயத்தை சேர்த ஒருவனும் என்னுடன் வேலை செய்கிறான், அவனும் சதாம் செய்தது பிழை என்றுதான் கூறுகிறான், ஆனால் அமெரிக்கா நீதி கொடுத்தைத்தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனப்பற்று காரனமாக சதாமை ஆதரிக்கிறான், பொதுவான முஸ்லீம்களும் இதேபோக்கு உடையவர்கள்தான். அவர்கள் ஏனோ உன்மையை உராய்ந்து பார்க்கமறுக்கிறார்கள்.
    100% true.What all a muslim country does is fine for them.
    What all USA does is objectionable
    to them.They hate USA but like Saudi Arabia where there is no democracy.Because it is a muslim
    country.

  25. ஏமாறாதவன்

    ஐயா,

    தங்களின் முகம்மதிய மதம் தொடர்பான பலமுனைப்பட்ட பொருளறிவு வியக்கவைக்கிறது. வாழ்த்துக்கள். இதன் தொடர்பாக, ஆனால், வேறொரு செய்தியை சார்ந்து, நான் இன்று “பதினைந்தாண்டு கனவு” என்று முதன்முதலில் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் என் இடுக்கையில்.

    முகவரி:

    http://ayemarathavan.blogspot.com

    தாங்கள் படித்து உங்கள் மேலான கருத்துக்களையுரையுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *