கடந்த மூன்று வாரங்களாக பாலஸ்தீனர்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இஸ்ரேலின் அடக்குமுறைகள், அநியாயங்கள், அராஜகங்கள், கொடுமைகள், படுகொலைகள், இனச்சுத்திகரிப்பு மற்றும் என்னென்ன மனிதகுலவிரோதச் செயல்கள் உண்டோ அத்தனையையும் செய்துமுடித்துக் களைத்துத்துப்போய், தற்போது போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
இதை உலகநாடுகள் வரவேற்றுள்ளதோடு நிதியுதவிகளும் நிவாரணமும் வழங்க ஆயத்தமாகியுள்ளன. புதிய உலக ரட்சகனாகப் பேசப்படும் ஒபாமா, தன் பங்குக்கு நிவாரணம் அறிவிக்கக்கூடும். முதற்கட்டமாகப் போர் நிறுத்த அறிவிப்பை ஒபாமா வரவேற்றுள்ளார். இதோ கவுண்டவுன் தொடங்கி விட்டது. ஒபாமா பதவியேற்பு இன்னும் சில மணிநேரங்களில் தொடங்கிவிடும். வேறுதலைப்புச் செய்திகள் வந்துவிடும். பாலஸ்தீனப் படுகொலைகளுக்கு எதிரான உலக மக்களின் போராட்டங்கள் புறந்தள்ளப் பட்டுவிடும்.
இஸ்ரேலைத் தட்டிக் கேட்க முடியாத ஆண்மையற்ற ஐக்கிய நாடுகள் சபையும் சொரனையற்ற அரபுத் தலைவர்களும் ஒப்புக்கு நிவாரண உதவிகளில் கலந்து கொள்வார்கள். இஸ்ரேலின் போர் நிறுத்த அறிவிப்பை ஏற்க மறுத்த ஹமாஸைக் கண்டித்து அறிக்கைவிட்டு அடங்கிப் போவார்கள்.
பெரும்பாலோர் கவனிக்க மறந்த விசயங்களைப் பார்ப்போம். “போர் நிறுத்தம்” என்றால் போர் என்று ஒன்று நடந்திருக்க வேண்டும். போர்க்களம் என்ற ஒன்று இருந்திருக்க வேண்டும். பொதுமக்கள் குடியிருப்புகளில் பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு குழந்தைகள்,பெண்கள், முதியோர் என்ற பாகுபாடின்றி கொன்றொழித்துவிட்டு போர்நிறுத்தம் என்று சொல்வது உலகமகா அயோக்கியத்தனம்தானே!
எங்கேனும் குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டாலோ அல்லது அதைச் செய்தது முஸ்லிம் பெயரில் இருந்து விட்டால் ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ குறித்து தலையில் துண்டைபோட்டுக் கொண்டு பத்திபத்தியாக மூக்குச் சிந்தும் ஊடகக் கணவான்கள் இஸ்ரேலின் அப்பட்டமான “யூதத்தீவிரவாதம்” குறித்து வாய் திறக்கவில்லை. நியூயார்க்கிலும், மாட்ரிட்டிலும், லண்டனிலும் மும்பையிலும் அப்பாவிகள் கொல்லப்பட்டால்தானே நமக்கு வலிக்கும்! பாலஸ்தீனாவது மண்ணாங்கட்டியாவது!
அரபு தேசங்களிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ, பாகிஸ்தானிலோ பெண்ணுரிமையில்லை, பால்ய விவாகங்கள் என்றெல்லாம் மூக்குச் சிந்தும் பெண்ணுரிமைவாதிகளும் UNICEFவாதிகளும் இப்போது எங்கு சென்றார்களென்றே தெரியவில்லை. தாய் அமைப்பான UN சபையே சுண்டல் சாப்பிட்டுக் கொண்டு இஸ்ரேலைக் கண்டும் காணாமல் இருக்கும்போது பாவம் இவர்கள் என்ன செய்துவிடப் போகிறார்கள்? தாலிபான்கள் செய்தால் மட்டும்தான் இவர்களால் குரலெழுப்ப முடியும்! கூலிக்கேற்ப மாரடிப்பவர்கள்!!
பேரழிவு ஆயுதங்கள் வைத்திருப்பதாகச் சொல்லி ஈராக்மீது போர்தொடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் சதாம் ஹுசைனைத் தூக்கிலிட்டு ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டியதே செருப்படியையும் மிஞ்சிய தன் வாழ்நாள் சாதனையாகச் சொல்லிச் சென்ற ஜார்ஜ் புஷ், ஜனநாயகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் பிரதிநிதிகள் கொல்லப் படுவதைக் கண்டுகளித்து, பிரியாவிடை பெற்றுள்ளார்.
முதன் முதலாகப் போர் நிறுத்தத்தை மீறி, அராஜகம் செய்த தனது கள்ளக் குழந்தையைக் காப்பாறுவதற்காக, “இஸ்ரேலின் எல்லை மீறல்களுக்கு ஹமாஸ்தான் காரணம்” என்று கருத்துச் சொல்லிச் சென்றார் ஜார்ஜ் புஷ்! இஸ
்ரேல் மீது ராக்கெட் வீசித் தாக்கியதால் பதிலடியாக இஸ்ரேல் செய்த அனைத்தும் நியாயமாம். ஆப்கன், இராக் நாடுகள்மீது அமெரிக்கா வீசிய குண்டுகளுக்கு அவர்களும் எதிர்வினையாக அமெரிக்காவைத் தாக்கினால் நியாயம்தானே புஷ்?
உனக்கு ஒருஜோடி காலணிகள் போதாது!
அது எப்படி அய்யா !
கொஞ்சங்கூட மூளையை வைத்து நடுநிலைமையோட சிந்திச்சி பேசறது இல்லைனு முடிவு பண்ணி அதை எப்படி, இப்படி முழுசா கடைப் பிடிக்கிறீங்களோ தெரியலேப்பா!!!!!
இஸ்ரேலின் குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டாங்கனு சொல்றது 100% கரெக்ட்.
ஆனால் அதே சமயம் நையி நையினு ஹமாஸ் இஸ்ரேலை சீண்டிகிட்டு இருந்ததும் அதை பாலஸ்தீனம் அனுமதிச்சதும் தான் இந்த எதிர்வினைக்கு காரணம்னு சொல்ல முடியலையே உம்மால………
ஏன் அப்படி உண்மையை பேசுறது இஸ்லாத்துக்கு எதிரானதா??????
Brainwashed fellows!!!!!!!!!!
பாகிஸ்தானை ,அங்கிருந்து கொண்டு இந்திய விரோத செயல்களை
செய்யும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை கண்டித்து எழுதாத
நல்லடியார், இஸ்ரேலை மட்டும் குறை கூறுவது ஏன்?.
//ஆனால் அதே சமயம் நையி நையினு ஹமாஸ் இஸ்ரேலை சீண்டிகிட்டு இருந்ததும் அதை பாலஸ்தீனம் அனுமதிச்சதும் தான் இந்த எதிர்வினைக்கு காரணம்னு சொல்ல முடியலையே உம்மால………//
புதிய கோணாங்கி,
ஹமாசின் ராக்கெட் தாக்குதல் தான் இஸ்ரேலை போருக்குள் வலிந்து இழுத்ததா? நவம்பரில் சில பாலஸ்தீன போராளிகளை இஸ்ரேலிய படைகள் சுட்டுக் கொன்றமையே, முதலாவது போர் நிறுத்த மீறலாகும். அதேநேரம் போர்நிறுத்தம் அமுலில் இருந்த வேளை, ஹமாஸ் எந்தவொரு எறிகணை தாக்குதலையும் நடத்தவில்லை. இந்த உண்மைகளை இஸ்ரேலிய அதிகாரி Mark Regev தொலைகாட்சி ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். அதேநேரம் ஹமாஸ் (ஆயுதக் கடத்தலுக்கு) சுரங்கம் தோண்டிக் கொண்டிருந்ததால், "முன்கூட்டிய பாதுகாப்பு ஏற்பாடாகவே" இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை எடுத்தது என்ற புதிய கதையையும் கூறியுள்ளார்.
ஏற்கனவே சி.என்.என். ஒளிபரப்பிய செய்தித் துணுக்கு ஒன்றும், இஸ்ரேல் தான் போர்நிறுத்தத்தை முதலில் மீறியது என்று குறிப்பிடப்பட்டது. இவ்விரண்டு வீடியோக்களையும் இந்தப் பதிவில் பார்வையிடலாம். இஸ்ரேலின் காஸா மீதான அப்பட்டமான ஆக்கிரமிப்பு, ஒரு போர்க்கால குற்றம் என்பதை இவை உறுதிப் படுத்துகின்றன.
Who Broke The Cease Fire – Hamas or Israel 2008
Israel Confirms Hamas Fired NO Rockets
<
CNN Confirms Israel Broke Ceasefire First
Please refer to see the CNN news to click below link for more detail
http://www.tamilcircle.net/index.php?view=article&id=4798%3A-q-q-&option=com_content.
//பாகிஸ்தானை,அங்கிருந்து கொண்டு இந்திய விரோத செயல்களை
செய்யும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை கண்டித்து எழுதாத
நல்லடியார், இஸ்ரேலை மட்டும் குறை கூறுவது ஏன்?. //
“பாகிஸ்தானிலிருந்து கொண்டு இந்திய விரோதச் செயல்களைச் செய்யும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்”
மேலும்,
1) இந்தியாவிலிருந்து கொண்டு இந்திய விரோதச் செயல்களைச் செய்யும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளையும்,
2) இந்தியாவிலிருந்து கொண்டு முஸ்லிம் விரோதச் செயல்களைச் செய்யும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளையும்,
3) இந்தியாவிலிருந்து கொண்டு இந்திய விரோதச் செயல்களைச் செய்யும் இந்துத் தீவிரவாத அமைப்புகளையும்
மிகமிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
(அப்பாடா! நானும் தீவிரவாதத்திற்கு எதிரான ஜோதியில் கலந்துட்டேன்)
what about hamas?
only supprt muslims
shit.
கலைஞர்: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்!
ஜெயலலிதா: இலங்கைத் தமிழர்கள் வேறு; விடுதலைப்புலிகள் வேறு!!
ராமகோபாலன்: இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் ஏன் மலேசியத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை?
இல.கணேசன்: தமிழ் ஈழம் இலங்கைத்தமிழர்களின் பிறப்புரிமை!
**********
Mr.latchoumanan velavan,
மேலே குறிப்பிட்டுள்ளவை எல்லாம் இலங்கைத் தமிழர்கள் குறித்து நமது அரசியல்வாதிகள் சொன்னவை. இதில் யார் ஈழத்தமிழர் ஆதரவாளர்? யார் அவர்களுக்கு எதிரி?
அப்பாவிகள் கொல்லப்படும்போது நாடு, மதம், இனமென அடையாளப்படுத்தி கண்டிப்பது முஸ்லிமுக்கு அழகல்ல. ஈழத்தமிழர் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படும்போது ஏற்பட்ட ‘இன உணர்வு’, அதே இலங்கையில் முஸ்லிம் தமிழர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டபோது ஏன் வரவில்லை?
நியூயார்க்கில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டபோது எந்த முஸ்லிமும் அதை ஆதரிக்கவில்லை. ஆனால், அதனைத் தொடர்ந்து நரவேட்டையாடிய அமெரிக்க மற்றும் கூட்டணியினரை எத்தனைபேர் கண்டித்தார்கள்?
அதெப்படிசார் ரத்தத்தில் முஸ்லிம் ரத்தத்தை மட்டும் தனித்து அடையாளம் காண்கிறார்கள்?
Shit!
ஹமாசும், இஸ்ரேலும் இரண்டுமே குற்றவாளிகள்.ஒருவரை ஒருவர் அழிக்க நினைக்கிறார்கள்.இஸ்ரேலை
அழிக்க ஹமாஸ் நினைக்கிறது.அதை
முஸ்லீம் இயக்கங்களும்,ஈரானும்
ஆதரிக்கின்றன.ஹமாஸை ஒழிக்க
நினைக்கும் இஸ்ரேலை அமெரிக்கா
ஆதரிக்கிறது.ஆக இது எளிதில்
முடிவுக்கு வருகிற ஒன்றல்ல.
சூடானில் அரசு ஆதரவுடன் ஒரு பிரிவு முஸ்லீம்கள்
இன்னொரு பிரிவு முஸ்லீம்களை
ஆயிரக்கணக்கில் கொல்வதை, .
ஜிகாதிகள் செய்யும் அட்டூழியங்களை,
இன்றும் அப்பாவிகளை கொன்று,
பள்ளிக்கூடங்களை தரைமட்டமாக்கும்
தலிபான்களின் அராஜகங்களை
எதில் சேர்ப்பது.மலேசியாவில்
உரிமை கோரும் சிறுபான்மை
இந்துக்களை ஒடுக்குவதை கண்டிக்காதவர்கள் பாலஸ்தீனியர்களுக்கு ஒன்று
என்றால் மட்டும் பதறுவது ஏன்?.
உலக நாடுகள் பலவும்,ஐநாவும்
இஸ்ரேலை கண்டித்துள்ளன.
இந்தியாவும்தான்.ஆனால்
26/11 ஐ செய்த பயங்கரவாத
அமைப்புகளை கண்டித்து
எத்தனை முஸ்லீம் வலைப்பதிவர்கள்
எழுதினார்கள்.தெகல்கா உட்பட அனைத்து ஊடகங்களும் அதற்கான
சான்றுகளை வெளியிட்ட போதும்
அவர்களால் ஏன் ஒன்றும் எழுத
இயலவில்லை.எந்தப் பாசம்/வெறி
அவர்களை தடுத்தது.
//கூலிக்கேற்ப மாரடிப்பவர்கள்!!//
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் நல்லடியார்
//கொஞ்சங்கூட மூளையை வைத்து நடுநிலைமையோட சிந்திச்சி பேசறது இல்லைனு முடிவு பண்ணி அதை எப்படி, இப்படி முழுசா கடைப் பிடிக்கிறீங்களோ தெரியலேப்பா!!!!!//
எது நடுநிலைமை? மூளையைக் கழட்டி பள்ளிக்கூடத்திலேயெ விட்டுட்டீங்களாய்யா?
//இஸ்ரேலின் குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டாங்கனு சொல்றது 100% கரெக்ட்//
100 சதம் சரியானது என்று தெரிந்திருந்தும் ஒரு கண்டன வார்த்தை கூட வரவில்லையே. பாசம் தடுக்கிறதோ?
//ஆனால் அதே சமயம் நையி நையினு ஹமாஸ் இஸ்ரேலை சீண்டிகிட்டு இருந்ததும் அதை பாலஸ்தீனம் அனுமதிச்சதும் தான் இந்த எதிர்வினைக்கு காரணம்னு சொல்ல முடியலையே உம்மால………//
ஹமாஸ் ஏன் நையி நையின்னு சீண்டியது? அவனுக்கு உரிய பாதையை ஐநா சொல்லியும் கேட்காமல் அடாவடித்தனமாக மூடி வச்சி கழுத்தறுத்தா சாப்பாட்டுக்கு வழியில்லாதவன் என்னய்யா செய்வான்? பாதையை திறந்து விட்டுட்டா எறிகணைகள் ஏவ மாட்டோம்னு சொன்னானேய்யா?. எவ்வித பாதிப்புகளும் ஏற்படுத்த இயலாத அந்த எறிகணைகளும் உலக கவனத்தை கவரத்தானேய்யா? அவன் வீட்டுக்குள்ளே புகுந்து அவனையே அடிமை போல நடத்தினா வெளியே போன்னு சொல்ல மாட்டானா?
//Brainwashed fellows!!!!!!!!!!//
கையெழுத்து மட்டும் சரியா போட்டிருக்கீங்க.
அடிவாங்குபவனும் அடிகொடுப்பவனும் சமமா? நாடின்றி திரிந்தவர்களுக்கு அண்ட இடங்கொடுத்தவர்களையே விரட்டும் அரக்கத்தனம்தான் இஸ்ரேல் செய்து வருகிறது. அமெரிக்காவிடம் சோரம்போன யாசர் அரபாத், அப்பாஸ் போன்றவர்களின் துரோகத்திற்கு எதிராக, உண்மையாக சுதந்திரத்திற்காகப் போராடும் தேசபக்தர்கள்தான் ஹமாஸ்,ஐநாசபை மேற்பார்வையில் ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும்கூட!
எல்லைதாண்டி பாகிஸ்தானிலிருந்து வந்து நம்நாட்டில் செய்வது தீவிரவாதம் என்றால் எல்லைக்குள்ளேயே சொந்த நாட்டுமக்கள்மீது செய்வதை என்ன என்று சொல்வீர்கள்?
ஆப்கன்,ஈராக்,பாலஸ்தீனில் மக்கள் கொல்லப்படுகிறார்களென்றால் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இந்தியர்களும் கொல்லப்படுகிறார்கள் என்று வாயடைக்கச் செய்வது நியாயமா? கொடுமைகள் எங்கு நடந்தாலும் அதை கையால், நாவால் குறைந்தபட்சம் மனதால் ஒரு முஸ்லிம் தடுக்க/வெறுக்க வேண்டும். இலங்கையில் நடந்தால் போராட்டம்! பாலஸ்தீனில் நடந்தால் தீவிரவாதமா?
அப்புறம்,26/11 ஐக்குறித்து எந்த முஸ்லிம் வலைப்பதிவரும் கண்டிக்கவில்லை என்று சொல்லியுள்ளீர்கள். மாலேகான் முதல் ஏனைய குண்டுவெடிப்புகளின் பின்னணியிலிருந்தவர்களின் முகமூடிகள் ஒவ்வொன்றாகக் கிழிந்துவந்த நிலையிலும், அதை நேர்மையாக,துணிச்சலாக விசாரித்து வந்த அதிகாரிகளை கொல்வதற்காகவே நடத்தப்பட்ட செயலாகவே பெரும்பாலோர் கருதுகிறோம். இதன்மூலம் முந்தைய குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் தப்பிக்க நேரடியாக உதவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்!போதுமா?
சுல்தான் said…
//மூளையைக் கழட்டி பள்ளிக்கூடத்திலேயெ விட்டுட்டீங்களாய்யா?//
என்னா சுல்தான் பாய் நாங்க என்னா மதரஸாவிலா ’எல்லாம்’ கத்துக்கிட்டோம்.
////Brainwashed fellows!!!!!!!!!!//
கையெழுத்து மட்டும் சரியா போட்டிருக்கீங்க.
//
கையெழுத்து அப்படியிருந்தா பரவாயில்லே பாய்.
தலையெழுத்து, ஐ மீன் தலைக்குள்ள உள்ளது தான் அப்படி இருக்க கூடாது
தலைவரே பதிவும் பதிலும் ஒரு அறிவுப்பூர்வமாக இருக்கட்டும், ஞ்ஞக்க பிஞ்ஞக்க ங்க்ககெ மாதிரி குழ்ந்தைத்தனமாக இருக்க கூடாது. மேலும் என்றும் உண்மையை ஒத்துக்கொள்ளாத ஒரு அடிப்படைவாத மனிதனின் சுயசிந்தனைகளை மழுங்கடிக்கும் ஒரு அன்னிய தேசத்தின் கருத்துக்களை கடைபிடித்துவரும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வட்டத்தை விட்டு வெளியேவந்து உலகத்தை பாருங்கள். கிணற்றுத்தவளையாய் இருந்து விடாதீர்கள்.
அமெரிக்காவின் தூண்டுதலால்தான் இன்று உலகிலெல்லாம் பிரிவினைவாதம், இனவெறிதாக்குதல், பயங்கரவாதம் எல்லாம். உண்மை. ஆனால் எங்கே போய்விட்டது இவர்களின் அறிவு? சிந்திக்கும் திறன் இருந்தால் தானெ. இன்னும் சொல்லப்போனால் உங்களின் அடிப்படைவாதம் சிந்திக்கும் திறனை மழுங்கடித்து விட்டது. யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள் அரேபியர்கள் காட்டுமிராண்டிகள், முட்டாள்கள் என்றுதான் கூறுவார்கள். அப்படியானால் அங்கிருந்து பரவிய மார்க்கம் …………….?
ஹமாஸ் காரணமல்ல இன்று நடைபெறும் இத்தனை கொடூர செயல்களுக்கு பாலஸ்தீனத்தை சுற்றி இருக்கும் மற்ற முஸ்லீம் நாடுகள்தான் காரணம் என்பது தெரியுமா, சுயநலத்தின் முன்னால் மார்க்கமாவது மண்ணாங்கட்டியாவது என்று தன்பங்குக்கு சிலபகுதிகளை பிடித்து பலஸ்தீனர்களை நடுத்தெருவில் விட்டது உங்கள் மார்க்கத்தை அச்சுஅசலாக பின்பற்றும் நாடுகள்தான், பல நாட்க்கள் அலுவல் காரணமாக ஈராக்கின் பாஸ்ரா என்று அழைக்கப்படும் நகரத்தில் இருந்தேன். நான் அறிந்து கொண்டது படிப்பறிவற்ற அப்பாவி மக்களை மதம் மார்க்கம் என்ற குறுகிய வட்டத்திற்க்குள் அடைத்து எப்படி எல்லாம் சீரளிக்கிறார்கள் என்று. இன்று விபச்சாரம் கொடிகட்டி பறக்கும் நாடுகளில் ஈராக்கும் ஒன்று. வந்துவிட்டார்கள் எங்கள் மார்க்கம் எங்கள் மக்கள் என்று, அடி பட்டால் எல்லோருக்கும் வலிக்கும்.
பாலாஜி
அன்பு மாற்றுமத (முதல்மனிதன் ஆதம் வழிவந்த) சகோதரர்களே, உண்மையான இஸ்லாமிய நெறிகளை பின்பற்றாத முஸ்லிம் நாடுகளையோ, முஸ்லிம்களையோ ஆராயாமல், புனித அல்குரானையும், முஹம்மத் நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரங்களின் தொகுப்பான ஹதீஸையும் துணையாக கொண்டு இஸ்லாத்தை படியுங்கள். உண்மை வெளிப்படும். தெளிவு கிட்டும்.