Featured Posts

எரிகிற வீட்டில் பீடிக்கு நெருப்பு தேடுபவர்கள் – 1

மதரஸாக்கள் தீவிரவாதப் பட்டரைகளா? என்ற என் பதிவை மேற்கோளிட்டு நேசகுமார், என்னை தாலிபான்களின் கொ.ப.செ ஆக்கியுள்ளார். நல்லவேளை அல்காயிதாவின் தமிழ் வலைப்பூ பொறுப்பாளர் ரேஞ்சுக்கு கொண்டு செல்லாமல் இருந்தவரை நன்றி சொல்ல வேண்டும்.

நேசகுமாரின் பதிவுகளுக்கும் அதிலுள்ள உண்மைக்குமுள்ள தூரம் சங்பரிவாரங்களுக்கும் சமூக நல்லினக்கத்திற்குள்ள தூரத்தை விட அதிகம் என்பது முஹம்மது நபி பற்றிய நேசகுமாரின் வக்கிர பதிவுகளுக்கான பிற முஸ்லிம் வலைஞர்களின் பதி(வு)ல்களில் கண்டோம். இவற்றை நன்கு அறிந்த திரு.ரோசா வசந்த் அவர்கள் கூட நேசகுமாரின் பதிவிலிட்ட பின்னூட்டத்தில் “மற்றபடி நல்லடியாரின் பதிவு, இன்று பல இஸ்லாமியர்களின் சந்தர்ப்ப வேடம் எல்லாம் கண்டிக்க வேண்டியது, வெளிப்படுத்த வேண்டியது என்பதை தவிர சொல்ல எனக்கு அதிகமில்ல” என்று ஜல்லியடித்திருந்தார்! (ஜல்லி-நேசகுமாருக்கு ரோசாவிடம் பிடித்த வார்த்தை என்பதால் :-)

மதரஸா மாணவர்கள் (அரபியில் தாலிபான்கள்) பற்றி நான் எழுதியதில் மேற்கோளிட்டவற்றிலிருந்து நேசகுமார் என்ன சொல்ல வருகிறார்? பொறியாளர். சூரிய நாராணயனை படுகொலையை நியாயப்படுத்தியுள்ளேன் என்கிறாரா? அல்லது தாலிபான் ஆதர்வாளராகச் சொல்லிவிட்டால் நான் முன்பு அவரை சங்பரிவாரின் ஊதுகுழல் என்று சொன்னதற்கு பரிகாரமகி விடும் என்ரு நினைக்கிறாரா? எதுவாக இருந்தால் ஒன்று மட்டும் தெளிவாகிறது. அதாவது, இஸ்லாம் பற்றிய அவரின் அவதூறுகளை என் பதிவுகளிலும் தமிழோவியம் தொடர்களிலும் சுட்டிக் காட்டி அபத்தங்களையும் வக்கிரங்களையும் தோலுரித்துக் காடியதால் எழுந்த கோபமாக இருக்கலாம் என்றே யூகிக்கிறேன்.

சரி விசயத்திற்கு வருவோம். தாலிபான்கள் பற்றியும் அவர்கள் செய்ததாகச் சொன்ன படுகொலைகள் பற்றியும் எங்கு நான் ஆதரவாக எழுதியுள்ளேன்? பொதுவாக இஸ்லாமிய மதரஸா மாணவர்கள் பற்றி சொன்னதில் கொட்டை எழுத்தில் மேற்கோளிட்டுள்ளார். அதாவது,

குர்ஆனைக் கற்றவர்கள், மற்ற கல்வியைக் கற்றவர்களைப் போலல்லாமல், அதன் நற்போதனைகளை வாழ்க்கையிலும் செயல்படுத்த வேண்டும். அராஜகத்திற்கும் அநியாயத்திற்கும் எதிராக எந்த சமரசமும் செய்யக் கூடாது. படைத்தவனைத் தவிர எவனுக்கும் தலை வணங்கக் கூடாது என்பதே இவர்களின் தாரக மந்திரம்.

இது ஒன்று போதாதா இவர்களை தீவிரவாதிகளாகக் காட்டி அநியாயத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரானவர்களை தனிமைப் படுத்த நினைப்பவர்களுக்கு? இவைதான் மதரஸாக்கள் பற்றிய ஐயத்தையும் அச்சத்தையும் மக்கள் மனதில் விதைத்து, மதவெறி நெருப்பு மூட்டி குளிகாய நினைப்பவர்களின் ஊடகத் தந்திரம்.”

இவற்றில் எங்கு ஐயா தீவிரவாத ஆதரவு நிலை கண்டீர்? நீங்கள் குஜராத் இன சுத்திகரிப்பை காஷ்மீருடன் ஒப்பிட்டு நியாயப்படுத்தி இருந்த அளவுக்குக் கூட நான் எழுதியதில்லையே! மதரஸாக்கள் பற்றிய என் பதிவில் இடம் பெற்றுள்ள பல வெளிச்சுட்டிகளிலிருந்தே (http://www.answers.com/) தகவல் திரட்டியுள்ள போது அவற்றைச் சொல்லாமல், என்னை தாலிபான்களின் கொ.ப.செ ஆக்கியது என்மீதான வெருப்பின்றி வேறென்ன?

// நல்லடியார் எழுதியதை வழக்கமாய் படிப்பதில்லை. தாலிபான் பற்றி வெளிப்படையாய்(உள்ளே எப்படி நினைத்துக் கொண்டாலும்) எழுதுவார் என்று நினைக்கவில்லைதான்//

ரோசா வசந்த்,

நீங்கள் என் பதிவுகளை படிப்பதில்லை என்பதையறிந்து மகிழ்சியடைந்தேன். பொதுப்படையாக எழுதி வந்த “நண்பன்” ஷாஜகான் பீர்முஹம்மதுடனான உங்கள் விவாத நேர்மை பற்றி முன்பே படித்திருக்கிறேன்.

நேசகுமாரும் நீங்களும் பரஸ்பரம் முதுகு சொறிந்து கொள்வதில் எனக்கு ஆட்சேபனைய
ுமில்லை. என் பதிவில் நீங்கள் கண்ட சந்தர்ப்பவாதம் மற்றும் கண்டனத்திற்குறியவற்றை சுட்டுங்கள். பிறகு அது பற்றி தேவைப்பட்டால் விவாதிப்போம்.

பி.கு: சூரிய நாராயணாவின் படுகொலையை வைத்து “எரியும் வீட்டில் பீடிக்கு நெருப்பு தேடுபவர்கள்” பற்றி பிறகு எழுதுகிறேன்.

2 comments

  1. அட்றா சக்கை

    கோயபல்ஸின் மறு பெயர் நேச குமார். கேள்விகளுக்குப் பதில் தெரியாது போனால், உள் வாங்குதல் நாலாந்தர அரசியல் வாதியைப் போல ‘கொலை மிரட்டல் வருகிறது’ என நாடகம் போடுதல் இது தானே இவரின் வாடிக்கை.

    உருப்படியாய் என்ன வாதம் செய்திருக்கிறார் இவர்?

    அபூமுஹை என்பவர் இவரின் பிறப்பைக் குறித்து வசை பாடியதாக தடாலடி குற்றச்சாட்டு சுமார் ஒரு வருடத்திற்கு முன் வைத்தார். உடன் அவர் பதறிப்போய் எங்கே என்று சொல்லுங்கள் எனக் கேட்டார். இன்று வரை பதில். ? ம் ஹூம். இதெல்லாம் இந்த ஆளோட டெக்னிக்.. புரிபவர்கள் புரிந்து கொள்வார்கள்..

  2. Recenlty I have posted a comment to nesakumar blog about the prophet Muhammed (Sal) how was the greatest leader amoung Plural communites. How was his justice dealing with all communities. But he blocked that comments.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *