மத மாற்றத் தடைச் சட்டத்தை தமிழக அரசு அமுல் படுத்தியது என்றால், அங்கே மதமாற்றம் நடக்கிறது என்று தானே அர்த்தம்.
முஹம்மது நபி(ஸல்) அவர்களே ‘இறுதி நபி’ என்ற பிரச்சாரம், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ‘இறுதி நபி’ இல்லை என்ற பிரச்சாரத்திற்கெதிராக முடுக்கி விடப்பட்டப் பிரச்சாரம் என்று தானே அர்த்தம்! இதில் ‘திணிப்பு’ என்பது எங்கே?
ஒருவர் 2+3=6 என்று விடை எழுதினால், அது தவறான விடை என்று உறுதியாகத் தெரிந்த மற்றொருவர் 2+3=5 என்று சரியான விடையைக் கூறித் திருத்தினால் இது திணிப்பா? திருத்தலுக்கும், திணித்தலுக்கும் வேற்றுமை தெரியாமல் உளறக்கூடாது.
காதியான் எனும் ஊரிலே பிறந்து, தன்னை நபி என்று பிதற்றிய மிர்ஸா குலாம் அஹமது எனும் நயவஞ்சகரைப் பின்பற்றுபவர்களே ‘காதியானிகள்’ மிர்ஸா குலாம் நபி அல்ல, முஹம்மது நபி (ஸல்) அவர்களே இறுதி நபி என்றும் இஸ்லாத்தின் ஒளியில் எம்மால் நிரூபிக்க முடியும். இதில் மாற்றுக் கருத்துடைய எவர் வேண்டுமானாலும் தங்கள் தரப்பின் கருத்துக்களை வைக்கலாம். உரைகல் இஸ்லாமாக இருக்க வேண்டும் என்ற ஒரே நிபந்தனையுடன் அவ்விவாதக்களத்தை சந்திக்க நாம் தாயராக இருப்போம் என்று உறுதியளிக்கிறோம்.
//முகமது நபிகள் தாம் இறுதித் தூதர் என்ற நம்பிக்கையை ஏனைய முஸ்லீம்கள் அவர்கள் மீது திணித்ததன் காரணமாக அச்சமூகம் சொல்லொண்ணா துயரத்தை பாகிஸ்தானில் அனுபவித்து வருகிறது.//
என்று பிதற்றாமல் மிர்ஸா குலாம் நபி என்பதற்கான இஸ்லாத்தின் ஆவணங்களை வைத்து ஆக வேண்டியதை செய்யட்டும். ஒரு கேள்வி: மிர்ஸா குலாமை நபி என்று நம்பிக்கை கொண்ட ‘அச்சமூகம்,’ அந்நம்பிக்கையை ஏனைய முஸ்லிம்கள் மீது திணிக்கவில்லையா? பின் ‘அச்சமூகம்’ செய்யும் பிரச்சாரத்திற்கு என்ன அர்த்தமாம்?
சகோதரர் நேசகுமார் விளக்கட்டும்!
இனி…
இஸலாத்தின் வரலாறும், மாற்றாரின் உளறலும். தொடர்ச்சி அடுத்த பதிப்பில்.
thank you very much brother
i am going to search many information about his.
yl