Featured Posts

நேசகுமாரும், ஹமீத் ஜாஃபரும்.

ஒருவரின் கருத்தை மறுக்கவில்லை என்பதால், அக்கருத்தில் முழு உடன்பாடு உண்டு என்பது அர்த்தமல்ல. சகோதரர் ஹமீத் ஜாஃபர், சகோதரர் நேசகுமாருக்கு எழுதியது, அதற்கான எதிர் கருத்தை நேசகுமார், ஹமீத் ஜாஃபருக்கு எழுதியது. இருவரும் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்பதாலும், மேலும் இஸ்லாத்தைப் பற்றி ஹமீத் ஜாஃபர் தமது சார்பாக முன் வைத்தக் கருத்தை சகோதரர் நேசகுமார் விமர்சித்தபோது, அதற்கான தக்க பதிலை அளிப்பது மீண்டும் ஹமீத் ஜாஃபருக்கே கடமையாகிறது. எனவே ஹமீத் ஜாஃபரின் மற்றக் கருத்துக்களுக்கு அவரே விளக்கமளிக்கட்டும்.

திருக்குர்ஆன் 2:62 வசனத்தின் பொருள் என்ன? என்பதை மட்டும் நாம் விளக்குவோம்.

2:62. ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

இந்த வசனத்தின் பொருளை மேலோட்டமாகப் பார்த்தாலே ஒரு விளக்கத்தை புரிந்து கொள்ள முடியும். அதாவது ”யூதர்கள், கிறித்தவர்கள், ஸாபியீன்கள்” என்று மட்டும் சொல்லவில்லை ஏற்கெனவே ”நம்பிக்கை” கொண்டவர்களையும் சேர்த்தேச் சொல்கிறது.

ஈமான் கொண்டவர்கள், யூதர்கள், கிறித்தவர்கள், ஸாபியீன்கள் இப்படி நீங்கள் எந்த மதத்தை – எந்தப்பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நிச்சயமாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும் ஈமான் கொண்டிருக்க வேண்டும் என்று மீண்டும் நம்பிக்கை கொள்ளச் சொல்கிறது.

இந்நம்பிக்கையின் அடிப்படையில் நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி, அவர்களின் இறைவனிடம் உண்டு, அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள் என்றும் இயம்புகிறது.

அல்லாஹ்வை நம்புவது என்றால் அல்லாஹ் எவ்வாறு ஈமான் கொள்ளச் சொல்கிறானோ, அவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும். அது பற்றிய சில வசனங்கள்.

அல்லாஹ்வை நம்புதல்.
ஒரே இறைவன், 2:163, 2:133, 5:73, 6:19, 9:31, 12:39, 13:16, 14:52, 16:22, 16:51, 17:42, 18:110, 21:22, 21:108, 22:34, 29:42, 37:4, 38:5, 38:65, 41:6, 43:45, 112:1

பல கடவுள் இருந்தால். 21:22, 23:91, 17:42
அல்லாஹ்வுக்கு மரணமில்லை.2:255, 20:111, 25:58,
அல்லாஹ்வுக்கு தூக்கமில்லை, 2:255.
அல்லாஹ்வுக்கு சோர்வில்லை, 2:255.
அல்லாஹ் மறக்கமாட்டான், 20:52, 19:64,
அல்லாஹ் உண்ண மாட்டான்,6:14, 22:37, 51:57,
அல்லாஹ்வுக்கு நிகரில்லை, 6:163, 17:111, 25:2 112:4
அல்லாஹ்வுக்கு உதவியாளன் இல்லை, 17:111.

அல்லாஹ் வீணாக விளையாடுபவன் இல்லை,3:191, 21:16,17, 44:38, 23:115, 38:27.
அல்லாஹ் தேவையற்றவன், 22:64, 27:40, 31:12,26, 35:15, 39:7, 47:38, 57:24, 64:6, 112:2,
அவனைப்போல எதுவுமில்லை, 42:11, 36:78, 112:4.

மகன் இல்லை, 2:116. 4:171, 10:68, 17:111, 18:4, 19:35,88-93 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81,

பிள்ளைகள் இல்லை, 6:100, 17:111, 37:52.
மனைவி மக்கள் இல்லை, 6:101, 72:3.
பெற்றோர் பிள்ளை இல்லை, 112:3.

எங்கும் இருக்கின்றானா?, 7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4.
அவ்வாஹ்வின் பெயர்களைச் சிதைக்கக் கூடாது, 7:180.
அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுதல் பெரும் குற்றம், 4:50.

அல்லாஹ்வின் பெயரில் பொய்யை இட்டுக் கட்டுவது மிகப் பெரிய அநியாயம், 6:93.

இறைச் செய்தி வருவதாகக் கூறுவது கடும் குற்றம், 6:93.
அல்லாஹ்வின் பெயரால் பொய் மிகப் பெரிய பாவம், 6:21,
அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டுவது பெரும் குற்றம், 7:37.

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள், 7:180, 17:110.

இவ்வசனங்களும் இன்னும் இதுபோன்றத் திருக்குர்ஆனின் மற்ற வசனங்களும் அல்லாஹ்வை நம்பும் இலக்கணத்தைத் தெளிவுபடுத்துவது மட்டுமில்லாமல் இவையல்லாத அவரவர் மனோ இச்சையின்படி அல்லாஹ்வை நம்புவது உண்மையான இறைநம்பிக்கையாகாது என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

இறுதி நாள்.
வானம், பூமி சூரியன், விண் கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒருநாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான்.

யுக முடிவு நாள், இறுதி நாள், ஸூர் ஊதப்படும் நாள் என பல்வேறு சொற்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது. பின்னர் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். விசாரணைக்குப்பின் தீர்ப்பு வழங்கப்படவர். நல்லவர்களுக்குப் பேரின்பம் கிடைக்கும், கெட்டவர்களுக்குத் துன்புறுத்தும் பலவிதமான தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாழ்விற்கு அழிவே இருக்காது.

தீர்ப்பு நாள், மறுமை, மறு உலகம், ஒன்று திரட்டப்படும் நாள், யாராலும் உதவ முடியாத நாள், திரும்பச் செல்லும் நாள், கூலி வழங்கும் நாள், விசாரிக்கப்படும் நாள், பயன்தரும் நாள், உயிர்ப்பிக்கப்படும் நாள், இறைவனைச் சந்திக்கும் நாள், அவ்வுலகம் கைசேதப்படும் நாள், இறைவன் முன் நிற்கும் நாள், தப்பிக்க இயலாத நாள், எழுப்பப்படும் நாள் இன்னும் பல பெயர்களால் இந்த ”மறுமை நாள்” குறிப்பிடப்படுகிறது.

சந்தேகம் இல்லாத நாள், மகத்தான நாள், அந்நாள், அந்நேரம், வாக்களிக்கப்பட்ட நாள், எந்த சந்தேகமும் இல்லாத நாள் போன்ற சொற்கள் அழிக்கப்படும் நாளுக்கும், உயிர்ப்பிக்கப்படும் நாளுக்கும் பொதுவானதாகும்.
அழிக்கப்படும் நாள், மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாள் ஆகிய இரு நாட்களும் எப்போது ஏற்படும் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உள்ளிட்ட எந்த மனிதரும் ஏன் வானவர்களும் கூட அறியமாட்டார்கள். அந்த நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகும்.

இவ்வுலகில் மனிதன் நல்லவனாக வாழ இத்தகைய ஒரு நாளை நம்புவது பெரிதும் உதவும்.

எவரும் எவருக்கும் பயனளிக்க முடியாத நாள், 2:48,123. 2:254, 14:31, 26:88, 43:67, 60:3, 70:10, 80:34,35,36.

சில முகங்கள் வெண்மையாகும் நாள். வேறு சில முகங்கள் கருப்பாகும் நாள், 3:106.

உண்மை பயனளிக்கும் நாள், 5:119.
மறைக்க முடியாத நாள், 4:42, 86:9,

இறைவனின் அனுமதியின்றி பேச முடியாத நாள், 11:105, 78:38.

பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் நாள், 14:42.
பாலுட்டும் தாயை மறக்கடிக்கும் நாள், 22:2.
கர்ப்பிணிப் பெண்ணை பிரசவிக்கச் செய்யும் நாள், 22:2.
போதையுடையோராக மாற்றிவிடும் நாள், 22:2.

இருதயங்கள் தொண்டைகளை அடைத்துக் கொள்ளும் நாள், 40:18.

மலக்குகள் அணிவகுத்து நிற்கும் நாள், 78:38.

இன்னும் இவ்வசனங்களைப் போல ஏராளமான இறைவசனங்கள் மறுமையை எவ்வாறு நம்பச் சொல்கிறதோ அவ்வாறே மறுமையைப் பற்றி ஈமான் கொள்ள வேண்டும். இதற்கு மாற்றமான எவரின் மறுமை நம்பிக்கையும் உண்மையான மறுமை பற்றிய விசுவாசமாக இருக்காது.

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் அல்லாஹ் எவ்வாறு நம்பிக்கைக் கொள்ளச் சொல்கிறானோ அதை அப்படியே முழுமையாக விசுவாசம் கொண்டவர்களுக்கு மட்டுமே அவர்களின் நல்லறங்கள் பயனிக்கும்.
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் அல்லாஹ் கூறிய வகையில் நம்பிக்கைக் கொள்ளாதவர்களுக்கு அவர்களின் நல்லறங்கள் புறக்கணிக்கப்பட்டு, பாழாகிவிடும். இதுவே முஸ்லிம்களின் நம்பிக்கை.

கீழ் காணும் கருத்தைப் பற்றி அடுத்த பதிவில்.
இறைவன் ஒருவனே என்ற இந்த அழுத்தமான தத்துவமானது, இறைவனின் படைப்பான மனிதர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்ற சிந்தனைக்கு மனிதனை அழைத்துச் செல்வதாக உள்ளது. எனவே இறைவனின் ஒருமையையும், முஹம்மது அவனது இறைதூதர் என்பதையும் பறைசாற்றும் கலிமா, ஒரு முஸ்லிம் முஸ்லிமாக இருப்பதற்கு அடிப்படையானது. இந்த கலிமாவை மனதால் முற்ற முழுக்க ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்ளாதவர் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்?” [பக்கம் 32, இஸ்லாம் ஒர் எளிய அறிமுகம்.]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *