விதைக்கும் கருவைப் பேணி வளர்த்துக் குழந்தையாகப் பெற்றெடுக்கும் விளை நிலமே மனைவி – மனைவி உங்கள் விளை நிலம் என்று இங்கே உவமாணமாகச் சொல்லப்படுகிறது. அதுவும் அன்றைய யூதர்களின் தவறான நம்பிக்கையை மறுத்தே சொல்லப்பட்டது.
ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் காலத்து யூதர்கள் சொல்லிவந்தார்கள். இந்தத் தவறான நம்பிக்கைக்கு எதிராகவே இவ்வசனம் அருளப்பட்டது. (புகாரி, முஸ்லிம்)
2:223. உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள் ஆவார்கள், எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்.
மனைவியின் சம்மதம் இல்லா விட்டாலும் பலவந்தமாக உடலுறவு கொள்ளலாம் என்பதை இவ்வசனத்திலிருந்து துளியும் விளங்க முடியாது. தம்பதியர்களிடையே தாம்பத்ய உறவுக்கு பலாத்காரம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.