மானுடப் பார்வையில் வானம் என்பது வரம்புக்கு உட்பட்டதாக இல்லை. மேல் நோக்கிப் பார்க்கும் கண்ணோட்டம் எதுவும் வானத்தைப் பார்ப்பதாகவே சொல்லப்பட்டு, மேலே பறக்கும் எதுவும் வானத்தில் பறப்பதாகவே பேச்சு வழக்கில் கூறப்படுகிறது.
சுமாரான உயரத்தில் பறக்கும் பறவைகளை வானத்தில் பறப்பதாகச் சொல்கிறோம், பல மடங்கு உயரத்தில் பறக்கும் விமானங்களையும் வானத்தில் பறப்பதாகவேச் சொல்கிறோம். அப்படியானால் வானம் என்பது உயரத்தில் இருக்கிறது என்றால் வானத்தின் துவக்கம் எது..?
மேகத்திலிருந்து மழை பொழிகிறது என்று நன்கு தெரிந்திருந்தாலும் வானத்திலிருந்து மழை பெய்கிறது என்றுதான் சொல்கிறோம். நட்சத்திரங்கள் அனைத்தும் வானத்தில் அறையப்பட்டிருக்கவில்லை ஆனால் வானத்தில்தான் நட்சத்திரங்கள் இருப்பதாகச் சொல்கிறோம் ஏன்..?
வானுக்கும் நிலவுக்கும் சம்பந்தமே இல்லை. வானத்தை விட்டால் நிலவுக்கு வேறு வழியில்லை என்று இலக்கியத்துடன் கவிஞர்களும் ஏராளமாக கவிதை இயற்றியுள்ளார்கள். இப்படி மானுடப்பார்வையில் வானம் அல்லது ஆகாயம் என்பது எது..? இதற்கு காவி பக்தர் ஆரோக்கியம் விளக்கமளித்தால் ‘ரீல் எது ‘ரியல்’ எது என்பது நிதர்சனமாக விளங்கிவிடும்.
ஏழு வானங்கள்
விண்ணடுக்குகள் என்ற கட்டுரையில், இவைகள்தாம் ஏழு வானங்கள் என்று கட்டுரையாளர் எங்குமே கூறவில்லை. ஆனாலும் காவி பக்தர் ஆரோக்கியம் வரிந்து கட்டிக்கொண்டு ஏழடுக்கு மாளிகையில் விளக்கேற்றுகிறார் பொடு போக்காக!
கட்டுரையில் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
//*நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனம் மானிடக் கணகளுக்குப் புலப்படாத இரண்டு விஷயங்களைத் தெரிவிக்கின்றது. முதலாவது விஷயம் ஆகாயங்களின் எண்ணிக்கை மொத்தம் ஏழு. இதை மானிடக் கண்களும் பார்த்ததில்லை. அறிவியல் கண்களும் இதுவரை இதைப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே இது குர்ஆனுக்கு சாட்சி கூறுவதற்காகக் காத்திருக்கும் எதிர்கால விஞ்ஞானத்தைச் சார்ந்தது.*//
வேறொரு இடத்தில்..
//*நவீன அறிவியல் கண்டு பிடிப்புக்கள் இந்தக் கோணத்தில் முன்னேறிச் சென்றால் இதற்கு மேலும் உயர் பிரிவுகளைக் கண்டறிந்து முடிவாக இந்தப் பேரண்டத்திற்குள்ளாகவே எண்ணிறைந்த நட்சத்திர மண்டலங்கள் பரிசுத்த குர்ஆன் கூறியவாறு ஏழு முதன்மைத் தொகுதிகளாக – ஆம்! ஏழு ஆகாயங்களாக – அமைந்திருப்பதைக் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை என எண்ணத் தோன்றுகிறது.*//
இவ்வாறு, மிகத் தெளிவாக எழுதியிருந்தும் எழுத்துப்பிழையைக் கண்டுபிடித்த காவி பக்தர், கருத்துக்களில் கவனம் செலுத்தாமல் அவசரப்பட்டிருக்கிறார் அதாவது – ஹாரூன் யாஹ்யாவையும், அலி சின்னாவையும் சேர்த்துக்கொண்டு – அவலை நினைத்து உரலை..
//*ஆமாம் நட்சத்திரங்கள் எங்கே இருக்கின்றன?
ஜயானா அஸ்ஸமாஆ அத்துன்யா பிஜீனத்(ன்) அல் கவாகிபி 37:6,
என்ன பொருள்?
அஸ் ஸமாத் அத் துன்யா என்பதை மிகவும் அருகாமையில் இருக்கும் லேயர் என்றால், அது டிரோபோஸ்பியர். கவாகிப் என்றால் நட்சத்திரம் என்று பொருள் சொல்லலாம். சற்று ரீல் சுற்றினால் கிரகங்களைக் கூட அதில் சேர்க்கலாம். டிரோபோஸ்பியரில் எப்படி அய்யா நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கும்?
ரீல் சுற்றினாலும் குறைந்தது குரானுக்கு பொருந்தும்படி சுற்றக்கூடாதா?*//
ஆரோக்கியம்! உங்களின் அரபு வாசிக்கும் முயற்சியை வரவேற்கிறேன். ஆனால் அஸ்ஸமாத் என்று இல்லை.(அஸ்ஸமாத் என்றால் வேறு பொருள்) ‘அஸ்ஸமாவு’ என்றால் ”வானம்” ஒருமை. ‘அஸ்ஸமாவாத்’ என்றால் ”வானங்கள்” பன்மை. 37:6வது வசனத்திற்கு ஆரோக்கியம் தாமாகவே, இப்படித்தான் இருக்குமென்று விளங்கிக்கொண்டு //*டிரோபோஸ்பியரில் எப்படி அய்யா நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கும்?*// என்று உளறியிருக்கிறார்.
37:6. நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.
15:16. வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.
67:5. அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்.
இந்த மூன்று வசனங்களிலும் ”வானம்” என்றே இறைவன் குறிப்பிட்டுச் சொல்கிறான். அலங்கரிக்கப்பட்ட வானம் – மானுடப்பார்வைக்கு அழகாக்கப்பட்ட வானம் – பூமிக்குச் சமீபமாக உள்ள வானம் – அதுதான் முதல் வானம். இங்கு வானம் என்றுதான் சுட்டப்படுகிறது வானத்தின் உட்பிரிவு அடுக்குகளைச் சொல்லவில்லை.
//*கவாகிப் என்றால் நட்சத்திரம் என்று பொருள் சொல்லலாம். சற்று ரீல் சுற்றினால் கிரகங்களைக் கூட அதில் சேர்க்கலாம்.*//
‘அந்நஜ்ம்’ ‘கவாகிப்’ ‘புரூஜ்’ மூன்று சொற்களுக்கும் தமிழில் என்ன விளக்கம் என்பதை காவி பக்தர் சொன்னால் திருக்குர்ஆனை திரிக்க முயல்வது யார் என்பது விளங்கிவிடும்.
//*ஏ கே அப்துர் ரஹ்மான் என்பவரது புத்தகத்தை வேலை மெனகெட்டு தட்டச்சி போட்டுக்கொண்டிருக்கிறார்.*//
அறிவியல் கட்டுரையை தட்டச்சிப் பதிப்பது வேலைமெனக்கெட்டது என்றால், எல்ஸ்ட் டையெல்லாம் தட்டச்சிப் போடுவதை எந்த லிஸ்டில் சேர்ப்பது..?
அபூமுஹை,
அறிவியல் உண்மைகளை மத விளக்கங்களுடன் ஒப்பிட்டு எழுத முஸ்லிம்களால் மட்டுமே முடிகிறது. மதம் சாராமல் அறிவியல் பற்றி எழுதுபவர்கள் கூட, சாமர்த்தியமாக தங்கள் மதங்களில் சொல்லப்பட்டவற்றை மறைத்து எழுதுகிறார்கள். (அவர்களைக் குறை சொல்லவில்லை)
ஆரோக்கியம் எழுதுவதெல்லாம் இஸ்லாத்தை ஆராய்ச்சி செய்தல்ல.பார்ஸிக்கும் அரபிக்கும் கூட உள்ள வித்தியாசம் அவருக்குத் தெரியாது. இணைத்தில் கிடைக்கும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் திரித்தல்களை அவரால் முடிந்தவரை காவி சிந்தனையுடன் கலந்து எழுதுகிறார். அதுதான் அவரால் முடிந்தது.
தொடரட்டும் உங்கள் மதஅறிவியல் பணி.
நல்லடியார்
ஆரோக்கியத்திற்கு அரபு தெரியாது என்பதை நான் நம்பவில்லை! தெரியாதது போல் காட்டிக் கொள்வது, ஆழம் பார்க்கவே!