தமிழோவியம் வலைத்தளத்தில் வெளிவந்த “அமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்” என்ற கட்டுரைத் தொடர் சம்பந்தமாக மிகச் சாதாரண முன்னுரையைக் கண்ட, வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்) என்ற கட்டுரையாளர் கடுகடுக்கிறார், எரிச்சலடைகிறார், வெகுண்டெழுகிறார். நாகரீகமற்ற நாலாந்தர எழுத்து நடை விமர்சனங்களையும் – தனது வாதத்துக்கு வலு சேர்த்து – பின்னூட்டமிடும் அளவுக்கு தரம் தாழவும் அவர் தயங்கவில்லை.
”மிக சொற்ப விளக்கமே” என நல்லடியார் தனது முன்னுரையை பலவீனமாகவே வைத்திருக்கிறார். இன்னும் விஷயத்தை அவர் தொட்டிருக்கவில்லை. நேசகுமாரால் தனது கட்டுரைக்கான எதிர்வினை விளக்கம் வரும்வரை காத்திருக்க முடியவில்லை. பின்னூட்டங்களும், தனிப் பதிவுகளுமாக அமளி துமளிப்படுகிறது ஏனிந்த ஆர்ப்பட்டம்? அமானுடம் கலைந்து தகிடு தத்தம் வெளியாகிவிடும் என்ற ஆத்திரமா? எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற மன நிலையைத்தான் இது வெளிப்படுத்துகிறது.
பெயரைக் குறிப்பிட்டு எழுத வேண்டாம் என்று நல்லடியாருக்கு அறிவுரை! ஆனால் ரூமியின் பெயரைக் குறிப்பிட்டே சாடுவது. என்ன ஊருக்கு உபதேசமா?
தனது மறுப்பில் நல்லடியார் என்ன சொல்ல வருகிறார் என்பதை பொறுத்திருந்து புரிந்து கொள்ளாமல் ”வா, வா இந்த வழியாகத்தானே வருவாய்” என்பது போன்ற அன்பான!? மிரட்டலும், எள்ளலும், ஐனோமினோ என்ற பெயரின் பின்னூட்டத்தில் தெரிகிறது. எதிர்ப்பதற்கு ஆளில்லை என இறுமாப்புடன் இருந்த எண்ணத்தில், நல்லடியாரின் மறுப்புரை மண்ணள்ளிப் போட்டு விட்டதோ? எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.
நேசகுமார் தனக்கு மிரட்டல் வருவதாகச் சொல்லியிருப்பது வாடிக்கையான ஒன்றுதான். தனது திசை திருப்பும் முயற்சிக்கு வலு சேர்க்க இதுபோல் முன்பும் சொல்லி வந்திருக்கிறார்.
அசத்தியத்திற்கு துணை போகும் அல்லது போராடும் மனிதர்கள் இப்படித்தான் செயல்படுவார்கள். நாலந்தர வார்த்தைகளை உபயோகித்து எழுதுவதிலிருந்தே தெரிகிறது நேசகுமாரின் சுயரூபம்.
இஸ்லாத்தை வாயால் ஊதி அனைத்துவிடலாம் என்று நினைக்கும் கூட்டத்தை சேர்ந்தவர்களில் இவரும் ஒருவரே!
// 4) இஸ்லாத்தின் மீதான இது போன்ற ஆராய்ச்சிகளும், சிந்தனைத்தாக்குதல்களின் பின்னணியும் என்ன என்பதை இறுதியாக பார்ப்போம். /-Nalladiyar
உங்கள் வலைப்பதிவில் சொன்னதையா ? இல்லை புதியதா?/ – inomeno
/தனது மறுப்பில் நல்லடியார் என்ன சொல்ல வருகிறார் என்பதை பொறுத்திருந்து புரிந்து கொள்ளாமல் ”வா, வா இந்த வழியாகத்தானே வருவாய்” என்பது போன்ற அன்பான!? மிரட்டலும், எள்ளலும், ஐனோமினோ என்ற பெயரின் பின்னூட்டத்தில் தெரிகிறது. /-அபூ முஹை