நரகத்தில் பெண்களே அதிகம்.
”இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்- 2911)
உலகத்தின் அனைத்து செல்வங்களையும் விட சிறந்தது நல்ல மனைவி என்று, பெண்களைப் பற்றி சிலாகித்து கூறும் இஸ்லாம், ”நரகத்தில் பெண்களே அதிகம்” என்றும் கூறுகிறது. (இவ்வுலக வாழ்க்கையில் தவறுகளுக்கான தண்டனைகள் அனுபவிக்கப்படும் இடமே நரகம் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.)
”நான் (மிஃராஜ் – விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையேக் கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்”. என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி- 3241, 5198)
மேற்கண்ட நபிமொழியை முன்வைத்து, இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தும், ஆணாதிக்க மதம் என்று வழக்கம் போல், விமர்சிக்கக் கிளம்பியுள்ளார்கள். இதனால் இவர்கள் பெறும் ஆதாயம் என்ன? ”ஆஹா அப்படியா?” என்று நாலு பெண்கள் வரிந்து கட்டிக் கொண்டு வருவார்கள், என்ற எதிர்பார்ப்பா? அல்லது ”நரகத்தில் பெண்களே அதிகம்” என்று சொல்லும் மதம் எங்களுக்குத் தேவையில்லை என, முஸ்லிம் பெண்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறுவார்கள் என்ற ஆவலா? திறந்த கண் கனவாளிகள்!
ஒரு பேரூந்தில் 42 பயணிகள் அமர்ந்திருக்கிறார்கள். 20 ஆண்களும், 22 பெண்களிருந்தால், பேரூந்தில் அதிகமாக இருப்பவர்கள் பெண்களே. அதற்காக, பேரூந்தில் ஆண்களே பயணிக்கவில்லை என்று அர்த்தம் செய்வது அனர்த்தமாகும், நரகத்தில் பெண்களே அதிகம் என்ற வார்த்தையே, நரகத்தில் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 1000 ஆண்களும், 1010 பெண்களுமிருந்தால், ஆண்களை விட பெண்களே நரகத்தில் அதிகம். இதில், ஆணாதிக்கமும் – பெண்ணடிமைத்தனமும் எங்கிருந்து வந்தது.
முழுமையான விபரங்களுடன் மற்றொரு நபிமொழி.
”எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, ‘இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?’ எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் ‘உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை’ என்று பேசிவிடுவாள்’ என்றார்கள்” (புகாரி- 29, 1052, 5197)
நரகத்தில் பெண்கள் அதிகமாவதற்குக் காரணம் என்ன? என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கலாம். கவனிக்க:-
”அவர்கள் கணவனை நிராகரிக்கிறார்கள்.”
”உதவிகளை நிராகரிக்கிறார்கள்.”
”நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் ‘உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை’ என்று பேசிவிடுவாள்”
மனைவியின் தேவைகள் அனைத்தையும் கணவன் பூர்த்தி செய்து – மனைவி விரும்பியதையெல்லாம் கணவன் வாங்கிக் கொடுத்திருந்தாலும், அற்பமான சிறு குறைகளுக்காக ”உனக்கு வாக்கப்பட்டு என்ன சுகத்தைக் கண்டேன்? என்று கணவனை எடுத்தெறிந்து பேசி விடுவார்கள் பெண்களில் சிலர். உண்டா, இல்லையா?
மாலையில் கடை வீதிக்கு, அல்லது கடற்கரைக்கு அழைத்துப் போவதாக மனைவியிடம் சொல்லிவிட்டு காலையில் கணவன் வேலைக்குப் போவான். போன இடத்தில், எதிர்பாராத விதத்தில் மேலதிகாரியின் வருகை, அல்லது கூடுதலான பணியின் காரணமாகவும், அப்பணியை அன்றே முடிக்க வேண்டுமென்றக் கட்டாயத்தாலும் கணவன் வீடு திரும்ப தாமதம் ஆகிவிடும். இந்த தாமதம் மனைவிக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பது உண்மைதான் ஆனாலும் கணவனின் சூழ்நிலையை புரிந்து கொள்ளாத பெண்களில் சிலர், ”உன்னைக் கட்டிக்கிட்டு ஒரு சுகத்தையும் நான் காணவில்லை” என்று நன்றி கெட்டத்தனமானப் பேசிவிட்டு, பெட்டியுடன் தாய் வீட்டுக்குச் செல்ல தயராகி விடுவார்கள். உண்டா இல்லையா? (இவற்றை மறுப்பவர்கள் மனசாட்சியை மறைத்து விட்டுத்தான் மறுக்க வேண்டும்)
இது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது. ”கணவனை நிராகரிக்கும்” ”கணவன் செய்யும் நன்மைகளை நிராகரிக்கும்” பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் பற்றியே, ”நல்ல கணவனுக்கு நன்றி மறக்கும்” பெண்களே நரகத்தில் அதிகம் என்று நபிமொழியில் விளக்கப்படுகிறது. ”நல்ல மனைவிக்கு நன்றி மறக்கும்” கணவனுக்கும் நரகம்தான் என்பதற்கும் இது பொருந்தும் – (இது பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் ஆதாரங்களுடன் பார்ப்போம் இறைவன் நாடட்டும்) – துவேசத்தை துடைத்தெறிந்து விட்டு சிந்தித்தால் மட்டுமே இதிலுள்ள நடுநிலையை விளங்க முடியும்.
அன்புடன்,
அபூ முஹை
ஒரு சொல்கூட அதிகமில்லாத கச்சிதமான வார்ப்பு; மிகத் தெளிவான விளக்கங்கள்.
வாழ்த்துகள் அபூ முஹை!
அருமையான விளக்கம்.
//துவேசத்தை துடைத்தெறிந்து விட்டு சிந்தித்தால் மட்டுமே இதிலுள்ள நடுநிலையை விளங்க முடியும்//
துவேசத்துடன் மட்டுமே அனைத்தையும் விமர்சிப்பவர்களிடம் நடுநிலையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
அழகு, ஜாஃபர் அலி உங்கள் வருகைக்கு நன்றி!
இஸ்லாத்தில் பெண் சமத்துவமும பெண் பெருமையும் ….
என்ன ஒரு சப்பைக்கட்டு!
எத்தனைதான் தாங்கினாலும் இந்த மதம் பெண் விஷயத்தில் நாறுகிறது. அந்த கும்பியை துணி போட்டு மூடினால் நாற்றம் நின்று விடுமா என்ன?
என்னவோ உலகில் எல்லோரும் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்ச்சியில் இல்லாததை சொல்கிறார்கள் என்று என்னமாய் பசப்புகிறீர்கள்? இஸ்லாத்தை குறை சொல்பவர்கள் எல்லோரும் மாங்காய் மடையர்கள் போலவும் தாங்கள் தான் இந்த மாதிரி பெண்ணடிமை விஷயங்களுக்கு புது விளக்கம் சொல்லி யாரையும் திருப்திபடுத்த வேண்டாம்!
இஸ்லாத்திலிருந்து பெண்கள் வெளியேற வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இது அபத்தம்.
நடுநிலையில் நின்று பார்க்க வேண்டியது பிற மத்த்தவர்கள் இல்லை. இஸ்லாம் என்ற மூட கல்டின் மயங்கி சமுதாயத்தை சாக்கடைக்குழியிலேயே அடைத்து வைத்திருக்கும் தங்களைப்போன்றவரகள்தாம்.
குரான்:
கொச்சையான என் தமிழாக்கம்தான். ஆனால், உண்மையானது.
1.உங்கள் வீட்டு பெண்கள் உங்கள் வயல்கள். அதில் உழுதுகொள்ளுங்கள் 2.223
ஆகா! என்ன ஒரு தத்துவம்.
2. பெண்கள் ஆண்களின் பொருப்பில் இருக்கிறார்கள். ஏனென்றால், அல்லா ஒருத்தர் மீது ஒருவர் ஆளுமைக்கு படைத்தான்… 4.34
3. பெண்கள் விரசமான செயல்களில் ஈடுபட்டால் அவர்களை சாகும் வரை அடைத்து வையுங்கள். ஆண்கள் விரசமான (ஓரின சேர்க்கை) ஈடுபட்டால் அவர்கள் வருந்தி திருந்தினால், விட்டுவிடுங்கள். 4. 15/16
தன் மனைவியை குற்றம் கூறுபவனிடம் சாட்சி இல்லாமல் இருந்தால் அவனின் குற்றச்சாட்டே நாலு பேரின் சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட்டும்.
இந்த குப்பைகள் போதாது என்று
பெண்களை எலும்பு உடையாதவரை அடிக்கலாம்; கணவனைக்கேட்காமல் தன் பணத்தை செலவழிக்க அதிகாரமில்லை (தானம் கூட செய்ய); கூப்பிட்ட போதெல்லாம் படுக்கைக்கு வர பெண் கட்டுப்பட்டவள்; தகப்பன் சொன்னால் மகன் மருமகளை தலாத் கொடுக்கலாம்….
என்றெல்லாம் பேசும் ஹதீத்.
இன்னும் எத்தனையோ சொல்ல்லாம்.
ஆனால், கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?
நன்றி
mr.abu muhai your statement are good. please continue
தங்கள் கருத்துக்கு எதிர்மறையான என் பின்னோட்டத்தை தாங்கள் பதிப்பிப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும், சிரத்தையாக எழுதினேன். அதில் உள்ள கருத்துக்களை உளமாற நம்புகிறேன்.
இதனால், தாங்கள் என் மதிப்பில் உயர்ந்துள்ளீர்கள்.
நன்றி
பி.கு; இந்த word verification ஐ எடுத்துவிடுங்களேன். மிகுந்த தொந்தரவாக இருக்கிறது.
ஜயராமன் சார்,
உங்கள் வருகைக்கு நன்றி.
நாற்றமிருப்பதாக மற்றவர்கள் மீது சந்தேகப்பட்டு, கடைசியில் அந்த நாற்றம் தம்மிடருந்தே வருகிறது என்பதை உணர்ந்தவர்களும் உண்டு. இதில் நீங்கள் எந்தரகம் என்பதை உங்கள் எழுத்திலிருந்தே உணர முடிகிறது.
இந்தப் பதிவை உங்களால் ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் போனாலும், விமர்சிக்கவும் முடியாமல் – வேறு எங்கெங்கோ தாவிச் செல்கிறீர்களே பார்த்தீர்களா? இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டியது அதற்கு விளக்கம் கிடைத்தால் அதை அப்படியே விட்டுவிட்டு வேறொரு விமர்சனத்துக்குத் தாவுவது இதுதான் அசல் துவேசம்.
கணவன் அழைக்க, மனைவி மறுத்தால்… என்ற நபிமொழியை கையிலெடுத்துக் கொண்டு, இஸ்லாத்தை ஆணாதிக்க மதமாக சித்தரிக்க, பகீரத பிரயாத்தனமாக பாடுபட்டு வலைப்பூவில் என்னமாய் உழைத்து எழுதி வருகிறீர்கள்.
இஸ்லாம் திருமணத்தை, ஒப்பந்தம் என்கிறது. கணவன் அழைக்க மனைவி மறுக்கக்கூடாது என்றால், மனைவிக்குத் தேவைப்படும்போதும் கணவன் மறுக்கக்கூடாது என்பதும் ஒப்பந்தத்தில் வந்து விடுமே! மனைவியழைத்தால் கணவனுக்குத்தானே வேட்டை. (இன்ஷா அல்லாஹ் இது பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்) இந்த மறுபக்கத்தை சிந்திக்க மறுக்கும் நீங்கள் – கைப்புண்ணுக்குக் கண்ணாடியைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களே. இது துவேசமில்லையா? கணவன் அழைத்து மனைவி மறுத்தால் தண்டனை வழங்கப்படும் என்று சட்டமே முன்பு சொல்லியிருக்கிறது பாருங்கள்.
இந்திய தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி திருமண வயது 10ஆக உயர்த்தப்பட்டது 1860ல் தான். ரக்மாபாய் என்ற சிறுவயது பெண்குழந்தையை எலும்புருக்கு நோயால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்யப்பட்டது. ஓரளவு கல்வி பெற்றிருந்த இந்த குழந்தை மணப்பெண் தன் கணவனோடு உடலுறவிற்கு சம்மதிக்க முடியாது என மறுத்தாள். ஆயிரக்கணக்கான மதவாதிகள் ரக்மாபாய்க்கு எதிராக களமிறங்கினர். அவள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
”மனைவியோடு உடலுறவு கொள்ளும் உரிமை கணவருக்கு உண்டு, இதை மறுக்கும் மனைவி தண்டிக்கப்படுவாள்” என்று 1877ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
கணவன் அழைத்து உடலுறவுக்கு வர மறுத்த மனைவி மீது மதவாதிகள் வழக்கே போட்டிருக்கிறார்கள் என்றால், இஸ்லாத்தை மட்டும் பெண்ணடிமை மதமாக வதந்தியைப் பரப்ப முயல்வது துவேசம் இல்லையா?
உங்கள் மற்ற கேள்விகளுக்கு ஏற்கெனவே, முஸ்லிம் வலைப்பதிவர்கள் பதிலளித்திருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். ஆனாலும் மீண்டும் அது பற்றிப் பேச எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதற்கு முன் ”நரகத்தில் பெண்கள்-ஓர்விளக்கம்” என்ற இந்தப் பதிவை பசப்பல் என்று நீங்கள் சொன்னதை நிரூபியுங்களேன். அதன் பிறகு மற்றவைகளைப் பற்றிப் பேசுவோம் சரியா?
அன்புடன்,
அபூ முஹை
ஜயராமன் சார்,
உங்கள் வருகைக்கு நன்றி.
நாற்றமிருப்பதாக மற்றவர்கள் மீது சந்தேகப்பட்டு, கடைசியில் அந்த நாற்றம் தம்மிடருந்தே வருகிறது என்பதை உணர்ந்தவர்களும் உண்டு. இதில் நீங்கள் எந்தரகம் என்பதை உங்கள் எழுத்திலிருந்தே உணர முடிகிறது.
இந்தப் பதிவை உங்களால் ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் போனாலும், விமர்சிக்கவும் முடியாமல் – வேறு எங்கெங்கோ தாவிச் செல்கிறீர்களே பார்த்தீர்களா? இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டியது அதற்கு விளக்கம் கிடைத்தால் அதை அப்படியே விட்டுவிட்டு வேறொரு விமர்சனத்துக்குத் தாவுவது இதுதான் அசல் துவேசம்.
கணவன் அழைக்க, மனைவி மறுத்தால்… என்ற நபிமொழியை கையிலெடுத்துக் கொண்டு, இஸ்லாத்தை ஆணாதிக்க மதமாக சித்தரிக்க, பகீரத பிரயாத்தனமாக பாடுபட்டு வலைப்பூவில் என்னமாய் உழைத்து எழுதி வருகிறீர்கள்.
இஸ்லாம் திருமணத்தை, ஒப்பந்தம் என்கிறது. கணவன் அழைக்க மனைவி மறுக்கக்கூடாது என்றால், மனைவிக்குத் தேவைப்படும்போதும் கணவன் மறுக்கக்கூடாது என்பதும் ஒப்பந்தத்தில் வந்து விடுமே! மனைவியழைத்தால் கணவனுக்குத்தானே வேட்டை. (இன்ஷா அல்லாஹ் இது பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்) இந்த மறுபக்கத்தை சிந்திக்க மறுக்கும் நீங்கள் – கைப்புண்ணுக்குக் கண்ணாடியைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களே. இது துவேசமில்லையா?
கணவன் அழைத்து மனைவி மறுத்தால் தண்டனை வழங்கப்படும் என்று சட்டமே முன்பு சொல்லியிருக்கிறது பாருங்கள்.
இந்திய தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி திருமண வயது 10ஆக உயர்த்தப்பட்டது 1860ல் தான். ரக்மாபாய் என்ற சிறுவயது பெண்குழந்தையை எலும்புருக்கு நோயால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்யப்பட்டது. ஓரளவு கல்வி பெற்றிருந்த இந்த குழந்தை மணப்பெண் தன் கணவனோடு உடலுறவிற்கு சம்மதிக்க முடியாது என மறுத்தாள். ஆயிரக்கணக்கான மதவாதிகள் ரக்மாபாய்க்கு எதிராக களமிறங்கினர். அவள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
”மனைவியோடு உடலுறவு கொள்ளும் உரிமை கணவருக்கு உண்டு, இதை மறுக்கும் மனைவி தண்டிக்கப்படுவாள்” என்று 1877ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
கணவன் அழைத்து உடலுறவுக்கு வர மறுத்த மனைவி மீது மதவாதிகள் வழக்கே போட்டிருக்கிறார்கள் என்றால், இஸ்லாத்தை மட்டும் பெண்ணடிமை மதமாக வதந்தியைப் பரப்ப முயல்வது துவேசம் இல்லையா?
உங்கள் மற்ற கேள்விகளுக்கு ஏற்கெனவே, முஸ்லிம் வலைப்பதிவர்கள் பதிலளித்திருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். ஆனாலும் மீண்டும் அது பற்றிப் பேச எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதற்கு முன் ”நரகத்தில் பெண்கள்-ஓர்விளக்கம்” என்ற இந்தப் பதிவை பசப்பல் என்று நீங்கள் சொன்னதை நிரூபியுங்களேன். அதன் பிறகு மற்றவைகளைப் பற்றிப் பேசுவோம் சரியா?
அன்புடன்,
அபூ முஹை
அபூ முஹை,
‘ஜெயராமன் ஸார்’ மாதிரி ஆட்களெல்லாம் குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறார்கள். இல்லையெனில், அவரது துவேஷப் பின்னூட்டத்தைக் கூட அனுமதித்ததை வாய் பிளந்து வியப்பாரா?
//நாற்றமிருப்பதாக மற்றவர்கள் மீது சந்தேகப்பட்டு, கடைசியில் அந்த நாற்றம் தம்மிடருந்தே வருகிறது என்பதை உணர்ந்தவர்களும் உண்டு. இதில் நீங்கள் எந்தரகம் //
சரியாகக் கேட்டுள்ளீகள்..
//எத்தனைதான் தாங்கினாலும் இந்த மதம் பெண் விஷயத்தில் நாறுகிறது//
என்று ஜெயராமன் எழுதியதில் ஒரேயொரு எழுத்துப் பிழை உள்ளது.
கணவன் செத்தால் மனைவியையும் எரிக்கும் சதி, மொட்டையடித்து அலங்கோலப் படுத்துதல், மறுமணத்தை மறுத்தல் என சாஸ்த்திரங்களால் பெண்ணுக்குக் கொடுமை இழைக்கும் மதம் பெண்விஷயத்தில் நாறுகிறது என்றுதான் ஜெயராமன் சொன்னார்.
பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசம் பிடித்திட்டென்னைக்
கண்ணால் மயக்கி முலையால் வெருட்டிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடை தள்ளி என் போதப் பொருள் பறித்திட
எண்ணாமல் உன்னை எண்ணி இருந்தேன் இறைவா கச்சி ஏகம்பனே
என்று பெண்களை இழிவு செய்யும் மதத்தைத்தான் ஜெயராமன் ஸார் கூறியுள்ளார்.
சிரீநிதி அவர்களுக்கு,
இது தமிழ் மொழியிலமைந்த வலைப் பதிவு. நீங்களும் இதை தமிழில் படித்துதான் பின்னூட்டமிட்டுள்ளீர்கள். ஆனால் ஆங்கிலத்தில்.
ஆங்கில மொழி எனக்கு சற்று தொலைவு.
எனவே சிரீநிதி, தாங்கள் சொல்ல வருவதை அருள் கூர்ந்து தமிழில் சொன்னால் நான் புரிந்து கொண்டு பதிலளிக்க ஏதுவாயிருக்கும், நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
குரானில் உள்ளவை பற்றி எனக்கு எந்தவித கருத்துமில்லை. ஆனால் உங்களின் இந்த விளக்கம் போதுமானதாயில்லை என நினைக்கிறேன்.
பஸ்ஸில் இருப்பதுபோல எண்ணிப் பார்க்குமளவுதான் நரகத்தில் ஆல் இருப்பார்களா? நரகம் காண்பிக்கப்படுகிறதென்றால் அது ஒரு மேலோட்டமானதாகத்தானே இருக்கவேண்டும்.
மனைவி ‘உன்னக் கட்டிக்கொண்டு என்ன சுகம் கண்டேன்’ என்பது ஒரு பெரிய விஷயமா? அதை உணர்ந்து நெஞ்சார சொல்லியிருந்தாள் அந்தக் கணவனோடு அவள் அதன்பின் வாழ்வாளா?
சிறில் அலெக்ஸ்,
உங்கள் வருகைக்கு நன்றி.
சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் மறுமையில் தீர்மானிக்க வேண்டிய விஷயம். நரகத்தில் எத்தனை ஆண்கள், எத்தனைப் பெண்கள் இருப்பார்கள் என்பதை இந்த உலக வாழ்வில் தீர்மானிக்க முடியாது.
நரகத்தில் ஆண்களும் இருப்பார்கள், ஆண்களை விடப் பெண்களே அதிகம் என்பதைச் சொல்லவே பஸ் உதாரணத்தை எழுதினேன். பஸ்ஸில் இருப்பது போல்தான் இருப்பார்கள் என்று நான் சொல்ல வரவில்லை. புரிந்து கொள்வதற்காகவே பஸ் பிரயாணிகள் பற்றி எழுதினேன்.
//மனைவி ‘உன்னக் கட்டிக்கொண்டு என்ன சுகம் கண்டேன்’ என்பது ஒரு பெரிய விஷயமா? அதை உணர்ந்து நெஞ்சார சொல்லியிருந்தாள் அந்தக் கணவனோடு அவள் அதன்பின் வாழ்வாளா?//
வார்த்தைகள் உள்ளத்திலிருந்து வருகிறதா? அல்லது உதட்டிலிருந்து வருகிறதா? என்று பார்ப்பதை விட, சொல்லும் வார்த்தைகள் சம்பந்தப்பட்டவர்களை எப்படித் தாக்குகிறது என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும். இறைவன் உள்ளங்களையேப் பார்க்கிறான், என்றாலும் வாயால் சொல்லும் வெறும் வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை, அது மற்றவர்களை மன உளச்சலுக்கு ஆக்காத வரை.
எல்லா புனித நூல்களையும் காலத்திற்கேற்ப நல்லன கொண்டும் அல்லன விலக்கியும் மறு அர்த்தம் காண்பது வளரும் சமூகத்திற்கு அடையாளம் மற்றும் அடிப்படை. பாரத ஆன்மீக மரபின் சிறப்பு அது இத்தகைய பரிணாம வளர்ச்சிக்கு இயல்பாகவே இடம் கொடுக்கிறது என்பதுதான். சித்தர்கள் சொன்னது ஒரு பக்கம் என்றால் பெண்மையையே மெய்ப்பொருள் வடிவமாகக் கொண்டு உமையொரு பாகனாக இறையை உயர்த்தியதும் இதே பாரத மரபுதான். பழையன கழித்து புதியன ஏற்பதும் சிந்தித்துப்பார்த்து செய்கையை மாற்றுவதும் இந்த மரபினாலேயே சாத்தியம் ஆகின்றது.
மாறாக ஏழு நாளில் அண்டம் படைக்கப்பட்டதையும், “செத்தபின் நகமும் சதையுமாய்” உயிர்த்தெழுந்தார் என்பதையும், “எலும்பு முறியாதவரை பெண்களை அடிக்கலாம்” என்பதையும் அல்லவை என்ற வகையில் ஒதுக்காமல், இன்றும் literal உண்மையென்று பிடிவாதிப்பதும், வரலாற்றில் நடந்த மாறா உண்மைகளாக முன்வைப்பதும் சுய சிந்தனை, உண்மை தேடல், தனிமனித ஆன்மீக வளர்ச்சி ஆகியவற்றை மறுதலித்து, ஆட்டு மந்தைச் சிந்தனைக்கு அடிகோலுவதாகவே உள்ளது.
ஆட்டு மந்தைச் சிந்தனை மூலம் மொத்த சமூகத்தையும் மூளைச்சலவை செய்வது ஆதிக்கவாதிகளுக்கு வசதி, ஆனால் அதனால் ஆடுகளுக்கு ஒரு பயனும் இல்லை.
இதே போல கணவனும் மனைவியைப் பார்த்து சொல்லலாமே அப்போ என்னவாகும்னு ஏதாவது இருக்குதா?
நீங்க சொன்ன பஸ் உதாரணத்துல குறைந்த பட்ச வித்தியாசத்துல ஆண் பெண் இருந்தார்கள் என்றால் அதை ஏன் பெரிய விஷயமாகச் சொல்லவேண்டும்?
இதையெல்லம் ஒரு தெளிவுக்காகத்தான் கேட்கிறேன் என்பதை மனம்கொள்க.
அருணகிரி,
உங்கள் வருகைக்கு நன்றி.
உங்கள் விமர்சனத்துக்கு மாலையில் விளக்கம் தருகிறேன் நன்றி,
சிறில் அலெக்ஸ், உங்களுக்கும் மாலையில் எழுதுகிறேன்.
அன்புடன்,
அபூ முஹை
ஐயா, அருணகிரி அவர்களுக்கு,
//இதே போல கணவனும் மனைவியைப் பார்த்து சொல்லலாமே அப்போ என்னவாகும்னு ஏதாவது இருக்குதா?//
”கணவனும் மனைவியைப் பார்த்து சொல்லலாமே” என்ன, சொல்லுவான். ஒரே மாதிரியான தவறுகளுக்காக பெண்ணுக்கொரு தண்டனை, ஆணுக்கொரு தண்டனை என்பதை மனித நியதிக்கே ஏற்றுக் கொள்ள முடியாது எனும் போது, இறை நியதிக்கு இது ஒரு போதும் பொருந்தாது.
கணவனை/மனைவியை நிராகரித்தல், உதவிகளை நிராகரித்தல், நன்மைகளை மறுத்தல் என்று செய்யும் தவறுகள் இங்கு விளக்கப்படுகின்றன. மனைவி கணவனை நிராகரித்தாலும், கணவன் மனைவியை நிராகரித்தாலும், பாலின வேறுபாடு இல்லாமல் இருவருக்கும் தண்டனைகள் உண்டு. ”நன்றி மறந்தவருக்கு உயர்வில்லை” என்றால் அது ஆண், பெண் இருபாலினத்துக்கும் பொருந்தும் என்பதை விளங்குவதில் உங்களுக்கு என்ன சிரமம் இருக்கிறது.
//நீங்க சொன்ன பஸ் உதாரணத்துல குறைந்த பட்ச வித்தியாசத்துல ஆண் பெண் இருந்தார்கள் என்றால் அதை ஏன் பெரிய விஷயமாகச் சொல்லவேண்டும்?//
நீங்கள் எதை, ”ஏன் பெரிய விஷயமாகச் சொல்ல வேண்டும்” என்கிறீர்களோ அதிலேதான் விஷயமே இருக்கிறது. பஸ்ஸில் பயணம் செய்யும் ஆண்களும், பெண்களும் பயணிகள் என்ற காரணத்தினால் ஒன்றுபடுகிறார்கள். நரகத்தில் இருக்கும் ஆண்களும், பெண்களும் நன்றியை மறுத்தல் என்ற காரணத்தினால் ஒன்றுபடுகிறார்கள்.
நரகத்தில் ஆண்களே இல்லை என்றால் அதை ஆணாதிக்கம் என்று சொல்லலாம். ஆண்களும், பெண்களும் கலந்து இருக்கும் நரகத்தில், மனைவியை நிராகரிக்கும் கணவன்மார்களும் இருக்கிறார்கள். மனைவியை நிராகரிக்கும் கணவன்மார்களை விட, கணவனை நிராகரிக்கும் மனைவிகளே அதிகம். இது எப்படிப் பெண்ணடிமைத்தனம் ஆகும் என்ற கருத்திலேயேக் கேட்டிருந்தேன். நான் எழுதியுள்ளதை மீண்டும் ஒருமுறைப் படித்துப் பார்க்கவும்.
அன்புடன்,
அபூ முஹை