Featured Posts

பக்காப் படிக்கு முக்காப்படி அளக்கிறார் நேசகுமார்.

இஸ்லாம் என்றால் என்னவென்றே விளங்காமல் நேசகுமார் என்பவர் ”பக்காப்படிக்கு முக்காப்படி அளந்து கணக்கு காட்டுகிறார். இவர் அளக்கும் படி சரியில்லை என்று ஏற்கெனவே திருப்பி அனுப்பியும், வருடம் கடந்து சென்று விட்டதால் மக்கள் மறதியை தனக்கு சாதகமாக்கி மீண்டும் அளவு சரியில்லாத பழையப் பக்காப் படியோடு மீண்டும் நேசகுமார்.

”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை”
”முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும், தூதரும் ஆவார்”

இதை வாய் மொழிந்தவர்கள் இஸ்லாம் என்ற வட்டத்தில் நுழைந்து முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவ்வளவுதான் இஸ்லாம்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதித்தூதர் என்று இஸ்லாம் சொல்வதால், நபி(ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார். அப்படி வருவதாக நம்பி, முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் யாரையேனும் நபியாக நம்பிக்கை கொண்டால் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவராவார். அதனால்…

//ம்யூஸ் என்பவர் அபூ முஹையிடம் இரு கேள்விகள் கேட்டிருக்கின்றார். மும்பை குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று சொல்வீர்களா, உடலை இஸ்லாமியச் சமாதியில் அடக்கம் செய்ய மறுப்பீர்களா என்று.

இதற்கு அபூ முஹை ‘அழகாக’ பதிலளிக்கிறார். கிப்லாவை நோக்கி வணங்குபவர்களை முஸ்லிம்கள் இல்லை என்று அறிவிக்கும் அதிகாரம் எந்த முஸ்லிமுக்கும் கிடையாதாம். மேலும் இறந்த பின் உடலை முறையாக அடக்கம் செய்வது – அது யார் என்றாலும் இஸ்லாமியர்களது நம்பிக்கையாம்.

எப்படி ஏமாற்றுகிறார்கள் பார்த்தீர்களா. அதே கிப்லாவை(காபா) நோக்கி வணங்குகிறவர்கள் தானே அகமதி முஸ்லிம்கள். அவர்களை மட்டும் முஸ்லிம்கள் இல்லையென்று அறிவிக்கும் அதிகாரம் உங்களுக்கு எப்படி கிட்டியது? அவர்கள் கிப்லா பக்கமே போகக் கூடாது என்றுதானே பாகிஸ்தான் தனது பாஸ்போர்ட்டில் மதம் என்று ஒரு பிரிவைச் சேர்த்து அவர்களை சவுதிக்காரர்கள் அடையாளம் கண்டு கொள்ள வழி செய்து தருகிறது.
பஹாய்களும் அதையேதானே செய்து வந்தார்கள்? – உங்களை விட அதீத ஈமான் கொண்டு, நல்லவர்களாக ஏக இறைவனை வணங்கிவருகிறார்களே – அவர்களை, அவர்களே முஸ்லிம் இல்லை என்று சொல்லும் படி ஓட ஓட அடித்து விரட்டியது யார்? அந்த அதிகாரம் உங்களுக்கு எப்படி கிட்டியது?//

– கிப்லாவை நோக்கினால் மட்டும் போதாது, முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறுதித்தூதர் என்றும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். நேர்மையான பக்காப்படி கொண்டு அளக்கட்டும் என்று மீண்டும் நேசகுமார் என்பவருக்கு சொல்லிக் கொண்டு –

-இஸ்லாத்தை முறையாக விளங்காமல், அரைகுறையாக விளங்கிச் செயல்பட்டு அதனால் இஸ்லாத்தைக் களங்கப்படுத்தி, ஏனைய முஸ்லிம்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் பெயர் தாங்கி முஸ்லிம் என்றாலும், ”நாம் அறுத்ததை புசித்து நமது கிப்லாவை நோக்குபவன் முஸ்லிம்” என்று இஸ்லாம் சொல்வதால் ் இவனை முற்றாக இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை. – Muse அவர்களின் பின்னூட்டத்திற்கு சரியாகத்தான் அபூ முஹை பதிலளித்திருக்கிறார்.

”பஹாய்கள்” முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொள்ளவில்லை, கிப்லாவை நாளெல்லாம் முன்னோக்கினாலும் ஒரு புண்ணியமும் இல்லை அறியவும்.

ஆரம்பத்தில் இவருடைய வாதங்கள் ஓரளவு ஏற்றுக் கொள்ளும்படி இருந்தது. இப்பெல்லாம் என்ன ஆச்சு இவருக்கு…?

அன்புடன்.
அபூ முஹை

6 comments

  1. பக்காப்படிக்கு முக்காப்படி போக மீதி கால்படி:

    -இரக்கமற்றவனுக்குத் தண்டனையாக, ஆன்மாவை அவனிடமிருந்து பிரித்த பின், சடலத்தை இழிவுபடுத்துவது தேவைதானா? – தண்டனை வழங்கப்பட்ட பின், சடலம் எங்காவது குற்றவாளியாகுமா? – மனித நேயமற்றவனின் சடலத்தின் மீது நாம் கருணை காட்டினால் என்ன?

    குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து முடிந்த பின், மதபாகுபாடின்றி எந்த மனித சடலத்தையும் இழிவுபடுத்த வேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நன்றி!

  2. என்ன சார் இது

    விட்டால், ராணுவ மரியாதையுடன் புதைக்க வேண்டும் என்பீர்கள் போல

  3. அபூ முஹை

    parama pitha உங்கள் வருகைக்கு நன்றி.

    //என்ன சார் இது
    விட்டால், ராணுவ மரியாதையுடன் புதைக்க வேண்டும் என்பீர்கள் போல//

    தேசத் துரோகிகள் சடலத்துக்கெல்லாம் ராணுவ மரியாதை ஒரு கேடா? ஒரு பிணத்துக்கு எதுவோ அதைத்தான் சொல்லியுள்ளேன்.

  4. அபூ முஹை

    அன்பின் ஆரோக்கியம் அவர்களே,

    முஸ்லிம்கள் பின்பற்றும் தலைவரை நீங்கள் தரக்குறைவாகப் பேசி வருவதால் உங்கள் பின்னூட்டங்களை நான் அனுமதிக்க மாட்டேன். எனினும் நானும் மனிதன் என்ற வகையில் தவறுகள் ஏற்படலாம். தக்க ஆதாரத்துடன் நீங்கள் சுட்டிக் காட்டினால் நன்றியுடன் ஏற்றுக் கொள்வேன்.

    நீங்கள் எழுதிய 16:126வது இப்படி கூறுகிறது.

    ”நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்கு தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைபிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது” (திருக்குர்ஆன், 16:126)

    நீங்கள் குறிப்பிட்டது போல உஹதுப் போரில், ஹம்ஸா (ரலி) அவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாகவே இவ்வசனம் இறங்கியது. ”நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்கு” என்பது உயிரோடு உள்ளவர்களைத்தான் துன்புறுத்த முடியும் சடலத்தை எவராலும் துன்புறுத்த முடியாது.

    ஒரு குற்றவாளி எந்த அளவுக்கு கொடியவனாக இருக்கிறானோ, அதே அளவு கொடிய தண்டனை விதிப்பதென்றால், குற்றவாளியை உயிருடன் வெடித்து சிதறவைக்கலாம், சடலத்தை சிதைப்பது சரியில்லை.

    வேறு சான்றுகள் இருந்தால் சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். பாகிஸ்தான் செய்வதெல்லாம் இஸ்லாம் ஆகாது. நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  5. புதுமை விரும்பி

    அபூ முஹை,

    சமீபத்தில், Dr. Isras Ahmad என்பவரின் “இஸ்லாமிய நாட்டில், முஸ்லிம் அல்லாதாரின் நிலை” பற்றி கருத்து கேட்க நேர்ந்தது.
    இவ்வளவு வெளிப்படையாக, இச்லாம் மதத்தில் இல்லாதார், ஒரு இரண்டாவது குடிமகன் என்று சொல்லப்பட்டிருப்பது ஒரு நகைப்பையே எனக்கு தருகிறது.
    ஒரு கல்வியறிவு பெற்ற ஒருவர், இது மாதிரியான கற்காலத்து கொள்கைகளை தவறு என்று உணராமால், பொதுவில் பேசியிருப்பது, எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. அவரின் பேட்டி அடங்கிய, ஒலி-ஒளி நாடா கீழேயுள்ள பதிவில் இருக்கிறது. மற்றபடி நான் பொதுவாக எந்த மதத்தின் மீதும் நம்பிக்கையில்லாதவன்.
    http://nesakumar.blogspot.com/2006/07/blog-post.html
    இது பற்றிய உங்களின் விளக்கம், இன்றைய சூழ் நிலையில், “மதங்கள் மனிதனுக்காகவா? இல்லை மதங்களுக்காக மனிதர்களா?” என்பதைப் புரிந்துகொள்ள உதவியாய் இருக்கும்.

  6. அபூ முஹை

    புதுமை விரும்பி, உங்களின் – //இன்றைய சூழ் நிலையில், “மதங்கள் மனிதனுக்காகவா? இல்லை மதங்களுக்காக மனிதர்களா?”// – கடைசி வினாக்களுக்கு, சிலக் கருத்துக்களை தனிப்பதிவு இட்டுள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *