M.T.M.ஹிஷாம் மதனீ
அன்பின் வாசகர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும். இஸ்லாம் கல்வி இணையத் தளத்தின் மூலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். அல்ஹம்து லில்லாஹ். புனிதமிக்க இஸ்லாமிய மார்க்கத்தில் நாமனைவரும் இணையப் பெற்றிருக்கின்றோம். அவ்வாறு இஸ்லாத்தில் சங்கமித்த எம்மத்தியில் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்யும் பண்பு காணப்பட வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டே நானும் உங்களுடன் இவ்வலையமைப்பில் இணைந்துள்ளேன்.
அப்படியிருக்க எனது உபதேசத்தின் முதற்கட்டமாக அகீதாவின் பால் அழைப்பு விடுப்பதைத் தேர்ந்தெடுத்துள்ளேன். நிச்சயமாக ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய இறைவனைப் பற்றியும் அவனது தூதரைப் பற்றியும் அவனது மார்க்கத்தைப் பற்றியும் அறிந்திருப்பது அவசியமாகும். அவற்றை செவ்வனே அறிந்திறாவிட்டால் எம்மை முஸ்லிம் என்று சொல்வதில் அர்த்தற்றுப் போய்விடும். அத்தோடு எம்மை அறியாமலேயே வழிகேட்டில் வாழ்;ந்து கொண்டிருப்போம். அல்லாஹ் இந்நிலையைவிட்டும் எம்மைப் பாதுகாப்பானாக.
எனவே, இதனை விளக்கும் ஒரு சிறு முயற்சியாகவே எனது இந்த வகுப்பை அமைத்துள்ளேன். இவ்வகுப்பானது இலங்கைத் திருநாட்டில் போருதொட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ள அத்தார் அஸ்ஸலபிய்யா தஃவாப் பணிமனையில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இம்முயற்சி தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்ற நோக்கில் இவ்விணையதளத்தில் பிரசுரிக்க ஆரம்பித்துள்ளோம். எல்லாம் வள்ள அல்லாஹ் எம்மனைவரினதும் பணிகளை ஏற்றும் கூலி தரப்போதுமானவனாக இருக்கின்றான். வஸ்ஸலாம்
———–
முன்னுரை:
எல்லாம் வள்ள நாயன் அல்லாஹூத்தஆலாவைப் போற்றிப் புகழ்ந்தவனாக, இறுதித் தூதர் கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மீதும், அன்னாருடைய குடும்பத்தினர் மீதும், அன்னாருடைய வாழ்க்கை வழிமுறைகளை அப்படியே பின்பற்றிய ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத்தாபயீ;ன்கள் மற்றும் முஃமினான முஸ்லிமான நல்லடியார்கள் அனைவர் மீதும் என்றென்றும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
இவ்வாக்கம் ‘ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா’ (ரஹ்) அவர்களின் நூலான ‘அல் அகீததுல் வாஸிதிய்யா’ வின் விரிவுரையாகும். இஸ்லாம் பல நம்பிக்கை சார்ந்த அம்சங்களைத் தன்னகத்தே கொண்ட மார்க்கமாகும். அவ்வம்சங்களைப்பற்றி ஒவ்வொரு இஸ்லாமியனும் அறிந்திருப்பது இன்றியமையாத ஒன்றாகும். அதற்கான முயற்சிகள் புத்திஜீவிகளினாலும் அறிஞர்பெருமக்களினாலும் காலத்திற்குக் காலம் மேற்கொள்ளப்படவேண்டும்.
அம்முயற்சிகள் நனிசிறக்கும் உரைகளாகவோ எழுத்துருப்பெற்ற நூட்களாகவோ சஞ்சிகைகளாகவோ மொழிபெயர்ப்புக்களாகவோ இருக்கலாம். இத்தகைய முயற்சிகள் அற்றுப்போகும் பட்சத்தில் எம் சமூகத்தினர் துடுப்பற்ற ஓடம்போலாகிவிடுவர்.
இம்முயற்சியின் ஓரங்கமாக எனது இந்த விளக்கவுரை இருக்கும் என நினைக்கின்றேன். எம் முன்னோர்களில் பலர் உருக்குலைந்த இந்த அகீதாவை தர்க்கவாதிகள் மற்றும் வழிகேடர்கள் கரங்களில் இருந்து மீட்டி எமக்கு தெளிவுபடுத்தித்தந்துள்ளார்கள். புத்திக்கு முதலிடம் கொடுத்து இஸ்லாத்தை அரட்டை அரங்கமாக மாற்றியவர்களின் நாவை அடக்கிய அவர்களின் பணிகள் போற்றத்தக்கவை அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரியட்டும்.
இத்தகைய செயல் வீரர்கள் பட்டியலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் பிரதானமானவராவார். இஸ்லாத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் இவர் ஆற்றிய சேவைகள் எண்ணிடங்காது. அவற்றின் அடையாளச் சின்னங்களே எம்மத்தியில் தவலக்கூடிய அவரின் நூட்களாகும். இத்தகைய நூட்கள் அவர் வாழ்ந்த காலத்தில் காணப்பட்ட வழிகேடர்களுக்கு மாத்திரமல்லாது அவை என்றென்றும் வரலாற்றில் தோன்றக்கூடிய பகுத்தறிவுவாதிகளுக்கு சாவுமணியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதனைக் கருத்தில் கொண்டே அன்னாரின் நூட்களில் ஒன்றான இந்நூலை விளக்கவுரைக்காக எடுத்துக்கொண்டுள்ளேன். இந்நூல் தம்மை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்தவர்கள் என்று பறைசாட்டிக்கொண்டு அவர்களின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக நடக்கின்றவர்களுக்கு சிறந்த தெளிவாக இருக்கும். அதிலும் குறிப்பாக அல்லாஹ்வின் திருநாமங்கள் பண்புகள் விடயத்தில் தெளிவற்றுக்கிடப்பவர்களுக்கும் சிறந்த முன்மாதிரி நூலாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
எனது இவ்விளக்கவுரையை அறிஞர்களின் கருத்துக்களுக்கு முதலிடமளித்து அமைத்துள்ளேன். இந்த நூலை வியாக்கியானம் செய்த அறிஞர்களின் விளக்கவுரைகளை மயிற்கட்களாகக்கொண்டே என்பிரயானத்தை ஆரம்பித்துள்ளேன். இப்பணியைப் பூரணமாக நிறைவேற்றி முடித்திட எல்லாம் வள்ள நாயன் அல்லாஹ் துனை புரிவானாக.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..
محاولة ممتازة حيث أن التراث العقدي لأهل السنة والجماعة لم ينقل الى اللغة التاملية كما نقل الى لغات أجنبية كثيرة مما كان سببا للمشاكل العقدية لدى كثير من العلماء قبل العوام
فشكرا لك على هذه المحاولة
وبارك الله في مسيرتك
very good begining from hisham madani ( jazakallahu khairan )
அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ் இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். “அக்கீதத்துல் வாசிதீயா” என்ற புத்தகம் பொது மக்களுக்கு நிச்சயமாக சென்றடைய வேண்டிய ஒரு பொக்கிஷம். இதன் மூலம், ” அல்லாஹ் வின் பண்புகளை” மக்கள் நன்றாக விளங்க கூடும். அல்லாஹ்விற்கு உருவம் இல்லை என்று வாதாடும் அத்வைத கொள்கையுள்ளவர்களும் , அல்லாஹ் வை பற்றி வரம்பு மீறி பேசும் “இல்முல் கலாம் ” என்று சொல்லக்கூடிய “மு அத்தசிலா ” கொள்கையுள்ளவர்களும், மக்களை குழப்பாமல் இருக்க இந்த புத்தகத்தின் விளக்கம் மிகவும் அவசியமாகும்.
இக்வானிய சிந்தனைகள் மேலோங்கி விட்ட காரணத்தினால் அக்கீதாவின் முக்கியத்துவம் சமுதாயத்தில் குறைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் இத்தொடர் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக அமையும் இம்முயற்சிக்கு அல்லாஹ் ஈருலகிலும் தங்களுக்கு நற்பாக்கியங்களை வழங்குவானாக !
அருமையான முயற்சி. அல்லாஹ் தங்களுக்கு அருள்புரிவானாக. எழுத்துப்பிழைகளை சரிபார்த்துக் கொள்வது நல்லது
im very happy 4 getting the chance 2 read this book.
Assalamu alaikum As-Shiek Hisham,
May Allah Bless you and guide you in this work and protect you from any error that may fall due to the error of human nature.
I hope you do double check with learned salaifi sheiks in Sri Lanka, before you make it public in IslamKalvi.
Insha Allah, once this work completes in pure form, May Allah help you in publicing this in a book form, which will be more useful to Tamil speaking communities in SriLanka and India.
Brother AbuNusra
Pls post as pdf format all these topic
Masha ALLAH. .மிகவும் அவசியமானதும், கலத்தின் தேவையுமே அகீதா அறிவு .
மிகவும் பிரயோசனமாக இருந்தது
jazakallahu khair sheikh. taqqabal allahu minna wa minkum
அகீதா சம்பந்தமான நூல்கள் மற்றும் இசுலாம் சம்பந்தமான நூல்களை வாங்குவதற்கு தாங்லிடம் தொடர்பு கொள்வது எப்படி?