-அபூ நதா
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தனிப்பட்ட பயணத்தின் போதும், போர்க்களம் சென்றபோதும் ஸஹாபாக்கள் மத்தயில் கருத்து வேறூபடுகள் தோன்றின. இருந்தும் அதற்கான தீர்வாக இஜ்திஹாதின் அடிப்படையில் அவர்கள் கண்டதை நடைமுறைப்படுத்தினார்கள்.
மதீனா வந்த பின்னால் நபி (ஸல்) அவர்களிடம் அங்கீகரிகூறப்படும். அவற்றில் அவர்கள் அங்கீகரித்தவைகள் உள்ளன, திருத்திக் கொடுத்தவைகளும், அங்கீகரிக்காத அம்சங்களும் காணப்படுகின்றன.
பின்வரும் சம்பவங்களைக் கவனியுங்கள்,
ஒரு படையின் தளதியாக இருந்த நபித்தோழர் தொழுகையில் இமாமாக செயல்பட்ட போது அல்பாத்திஹா சூராவை ஓதிய பின்னர், (மற்றொரு சூராவை ஓதிய பின்னால்) அல்இக்லாஸ் அத்தியாத்தில் ரகத்துக்களை முடிப்பவராக இருந்தார். ஸஹாபாக்கள் இதைப் போர்களத்தில் பெரிது படுத்தவில்லை, மதீனாவை வந்தடைந்த பின்னர் அல்லாஹ்வின் தூதரிடம் அது பற்றி முறைப்பாடு செய்தார்கள், அவரிடம் ஏன் இவ்வாறு செய்தார் என விசாரிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள், அதற்கு
فَقَالَ لِأَنَّهَا صِفَةُ الرَّحْمَنِ وَأَنَا أُحِبُّ أَنْ أَقْرَأَ بِهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبِرُوهُ أَنَّ اللَّهَ يُحِبُّهُ (صحيح البخاري ، ومسلم )
அது அர்ரஹ்மானின் பண்பாக இருக்கின்றது. அதை நான் ஓதுவதை நேசிக்கின்றேன் எனக் கூறினார், அதற்காக அல்லாஹ் அவரை நிச்சயமாக நேசிப்பான் என அவரிடம் அறிவித்துவிடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
நபிகள் நாயகத்தின் தோழர் ஒருவருக்குக் கிடைத்த விளக்கத்தின் அடிப்படையில் அல்இக்லாஸ் அத்தியாயத்தை அவர் தொழுகையில் மீண்டும், மீண்டும் ஓதியுள்ளார், அது மற்றவர்களுக்குத் தென்படவில்லை, அதனால்தான் அவர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு தோன்றக்காரணமாக இருந்துள்ளது. அதற்கு அல்லாஹ்வின் தூதரின் அங்கீகாரம் அந்த தனிநபரின் இஜ்திஹாதைச் சரிகாண வழிகோலியுள்ளது என்பதை மேற்படி செய்தி தெரிவிக்கின்றது.
மற்றொரு சம்பவத்தைக் கவனியுங்கள். அம்மார் பின் யாஸிர், உமர் (ரழி) ஆகிய இரு நபித்தோழர்களும் ஒரு பயணம் சென்றிருந்தனர், தயம்மும் செய்ய முறை அவ்விருவருக்கும் தெரியாது. தொழுகை நேரம் வந்ததும் உமர் (ரழி) அவர்கள் தொழவில்லை, அம்மார் பின் யாஸிர் (ரழி) அவர்கள் தொழுதார்கள். ‘நீங்கள் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணை நாடுங்கள், என அல்மாயிதா அத்தியாம் ஆறாவது வசனத்தில் இடம்பெறும் வசனத்தை மண்ணில் புரள்வராக விளங்கி, அதில் புரண்டு தயம்மும் செய்து, அதன் மூலம் தொழுகையையும் நிறைவேற்றி விட்டு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து தனது விளக்கம் பற்றி பின்வருமாறு விபரித்தார்கள்.
وَأَمَّا أَنَا فَتَمَعَّكْتُ فِي التُّرَابِ وَصَلَّيْتُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَضْرِبَ بِيَدَيْكَ الْأَرْضَ ثُمَّ تَنْفُخَ ثُمَّ تَمْسَحَ بِهِمَا وَجْهَكَ وَكَفَّيْكَ فَقَالَ عُمَرُ اتَّقِ اللَّهَ يَا عَمَّارُ قَالَ إِنْ شِئْتَ لَمْ أُحَدِّثْ بِهِ (صحيح مسلم )
நானோ மண்ணில் புரண்டு தொழுதேன். (முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில்: ஒரு பிராணி மண்ணில் புரள்வது போன்று நான் புரண்டேன் என இடம் பெற்றுள்ளது). பின்பு, அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அது பற்றிக் கூறினேன், நீ உனது இரு கரங்களையும் இவ்வாறு மண்ணில் அடித்தால் போதும், எனக் கூறி (அடித்தார்கள்) பின்னர், அவ்விரண்டிலும் ஊதிக்கொண்டு, உனது முகத்தையும், எனது இரு மணிக்கட்டுகளையும் தடவிக்கொள் எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
மேற்படி செய்தி ஒரு சான்றை விளங்குவதில் ஏற்படும் குழப்பத்திற்கு தீர்வைக் கொண்ட விளக்கமாக இருக்கின்றது. எந்தப் பெரும் அறிஞருக்கும் விளக்கத்தில் தவறு ஏற்படும் என்ற நியதியை இது காட்டுகின்றது.
போரில் கலந்து கொள்வதற்காகச் சென்ற ஒரு மனிதரின் தலையில் காயம் ஏற்படுகின்றது. பின்பு அவருக்கு இஸ்கலிமாகின்றது, தனக்கு தயம்மும் செய்ய அனுமதி உண்டா எனக்கேட்ட அம்மனிதரை அவ்வாறு இல்லை எனக் கூறி அவரை அதற்காகக் குளிக்கும்படி ஒரு சாரார் கட்டயாப்படுத்தினர், அதனால் அவர் மரணித்துப்போனார், இது பற்றி நபி (ஸல்) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட போது அவரை இவர்கள் கொன்றது போல அல்லாஹ்வும் அவர்களைக் கொல்ல வேண்டும் என சபித்துவிட்டு, இயலாதவனுக்குரிய நிவாரணி கேள்விகேட்பதுதான் எனக் கூறியதாக, அபூதாவூத், இப்னுமாஜா போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பாரக்;கின்றோம்.
இங்கு இந்த சட்ட அகழ்வை நபி (ஸல்) அவர்கள் சரிகாணவில்லை என்பதை அறியமுடிகின்றது. மற்றொரு அறிவிப்பில் படைத்தளபதிக்கு குளிப்புக்கடமையானது போது தயம்மும் செய்து அவர்களுக்காக தொழுகை நடத்தினார், அது பற்றி மக்கள் ஒவ்வொன்றும் பேசிக் கொண்;டனர், நபி (ஸல்) அவர்களிடம் அவரின் செயல்பற்றி முறைப்பாடு செய்யப்பட்ட போது (அதைச்சரி காணும் முகமாக) சிரித்தார்கள் என இடம் பெற்றுள்ளது.
இந்த சான்றுகள் மூலம் நபி (ஸல்) அவர்களின் காலத்திலே அவர்கள் இல்லாத போது ஸஹாபாக்கள் மத்தியில் காணப்பட்ட கருத்து முரண்பாடுகளை களைவதற்கான வழிமுறையாக நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் பிரதான இடத்தை வகித்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நபியின் மரணத்தின் பின்னால் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தீர்த்துக் கொண்;ட முறை.
நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னால்ஸஹாபாக்கள் மத்தியில் பல முரண்பாடுகள் எழுந்தன, சான்றியை விளங்குவதில் ஏற்பட்ட குளப்பம், நேரடி சான்றின்மை, ஏறுக்குமாறாகப்புரிதல் போன்றவை இதன் காரணிகளாக இருந்தன.
நபி (ஸல்) அவர்களின் மரணம் பற்றி அறுவுறுத்தும் வசனத்தை உமர் (ரழி) அவர்கள் சரியாககப் புரியாயததன் காரணமாகவே அல்லாஹ்வின் தூதரின் மரணத்தை மறுத்தார்கள், ஆனால் அபூபக்கர் (ரழி) அவர்கள் மரணத்தை உறுதி செய்தது மாத்திரமின்றி அதற்கான சான்றையும் அல்குர்ஆனில் இருந்து ஓதிக்காண்பித்தார்கள், இந்த வசனம் அப்போதுதான் இறங்கிய போன்று மதீனாவின் சந்தைகளிலும், வீதிகளிலும் மக்கள் ஓதித்திரிந்ததாக நபித்தோழர்கள் கூறுகின்றார்கள். இதன் பின்பு உமர் (ரழி) அவர்கள் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள் என்ற செய்தியைப் பாரக்கின்றோம்.
அதே உமர் (ரழி) அவர்கள் தனது ஆட்;சி காலத்தில் சிரியாவில் தாவூன் என்ற பிளேக்கை ஒத்த கொடிய நோய் பரவியது. அவர்கள் ஸரிக் سرغ என்ற இடத்தை அடைந்த போது அங்கு நோய் ஏற்பட்டது தெரிய வந்தது. பயணத்தைத் தொடர்வதா? அல்லது துண்டிப்பதா என்ற திண்டாட்டமான நிலையில் ஆரம்ப முஹாஜிரீன்களை அழைத்து கலந்தாலோசனை நடத்தினார்கள், அவர்களில் ஒரு சாராரின் கருத்து மற்ற சாராரின் கருத்திற்கு முரணாக இருந்தது. அன்ஸாரிகளை அழைத்து ஆலோசனை செய்தார்கள், அவர்களும் முஹாஜிர்களைப் போன்றே காணப்பட்டனர், அவர்களது கருத்தையும் புறம் தள்ளி விட்டு குரைஷியர்களில் தலைவர்களாக உள்ள மக்கா வெற்றிக்கு முன்னர் ஹிஜ்ரத் செய்து வந்தோரை அழைத்து ஆலொசனை நடத்தினார்கள், அவர்களில் இருவர் வேறுவிதாமான கருத்தைக் கூறி இருந்தனர், இறுதியில் கலீபா அவர்கள் மக்களிடம் நாளை மதீனா திரும்பப் போவதாக அறிவித்தார்கள். படைகளின் தளபதியான அபூ உபைதா (ரழி) அவர்கள், உமர் அவர்களே! அல்லாஹ்வின் கத்ரில் இருந்தா வெருண்டோடுகின்றீர் எனக் கேட்டதற்காக கோபத்தை கொப்பளித்தவர்களாக, அல்லாஹ்வின் ஒரு விதியில் இருந்து மற்றொரு விதியின் பக்கமாகத்தான் வெருண்டோடுகின்றேன், அபூஉபைதாவே! நீ ஒரு பள்ளத்தாக்கில் உனது ஒட்டகைகiளுடன் செல்கின்றபோது அதன் ஒரு ஓரத்தில் செழிப்பும், மற்றொரு ஓரத்தில் வரட்சரியும் காணப்பட்டால் எதில்தான் அதை நீ மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதானே மேய்க்கின்றாய் என ஆத்திரமாகப் பதிலளித்த கலீஃபா அவர்கள் திரும்பிச் செல்லும் வழியில் அப்;துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களைச் சந்தித்தார்கள். அவர்கள் அவர்களின் ஒரு தேவை நிமிர்த்தமாக வெளியில் சென்றிருந்தார்கள்,
فَقَالَ إِنَّ عِنْدِي فِي هَذَا عِلْمًا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ فَلَا تَقْدَمُوا عَلَيْهِ وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلَا تَخْرُجُوا فِرَارًا مِنْهُ قَالَ فَحَمِدَ اللَّهَ عُمَرُ ثُمَّ انْصَرَفَ (صحيح البخاري )
(இது பற்றி அறிந்த) அவர்கள் தன்னிடம் அது பற்றிய அறிவு ஞானம் இருக்கின்றது. இவ்வாறான நோய் ஏற்பட்ட பிரதேசத்தில் வெளியில் இருப்போர் உள்ளே நுழையவும் வேண்டாம், உள்ளே இருப்பவர் அங்கிருந்து வெளியேறவும் வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூற நான் செவிமடுத்தேன் எனக் கூறினார்கள். இதைக் கேட்டு, அல்லாஹ்வைப் புகழ்ந்த கலீபா உமர் (ரழி) அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள் (புகாரி 5188- ஷாமிலா நூலகம்).
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நூல்வடிவில் தொகுக்கப்படாதிருந்த புனித குர்ஆனை ஒன்று திரட்டும் பணிக்கான அடிப்படையான சிந்தனையை அபூபக்கர் (ரழி) அவர்கள் முன்வைத்த போது உமர் (ரழி) அவர்கள் ஆரம்பித்தில் அதை எதிர்த்தார்கள், பின்னர் அதைச் சரிகண்டார்கள். தனது உள்ளத்தை அல்லாஹ் அதற்காக விரிவாக்கினான் எனக் கூறி பெருமிதமும் அடைந்தார்கள். (புகாரி) என்ற செய்தி கருத்து முரண்பாடுகளின் போது ஸஹாபாக்கள் கடைப்பிடித்த ஒழுங்கு முறைகளைக் குறிப்பிடுகின்றது.
முரண்பாடுகள் எழாமல் இருப்பதில்லை, எழவே செய்யும் அதற்காக முரண்பாடுகள் தோன்றுவதை அங்கீகரிப்போர் சான்றுகளுடன் நின்று அணுகும் போக்கினைக் கடைப்பிடிக்காது தமது பகுத்தறிவுக்கும், ஷேக்மார்களின் கருத்துக்களுக்கும், ஊர்மரியாதைக்கும், ஊர்ஜிமற்ற இரண்டாம் கருத்துகளுக்கும், முன்னுருமை வழங்குகின்ற போது தீர்வுக்குப் பதிலாக முரண்பாடு தொடர்கின்றது. இது தவ்ஹீத் ஜமாத் பேரில் இயங்கும் தக்லீத் வாதிகளிடம் ஆள வேரூன்றி இருப்பதுதான் இந்த நூற்றாண்டின் அதிசயம்.
சஹாபாக்களுக்கு மத்தியில் நடந்த கருத்து வேறுபாடுகளை விமர்சித்து எழுதியும் பேசியும் வரும் மக்களுக்கு நல்ல மறுப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…. சஹாபாக்களுக்கு மத்தியில் அகிதாவிலும் கருத்து வேறுபாடுகள் இருந்தாக சில ஆலிம்கள் கூரிப்பிட்டுவருகிறார்கள்…அது உன்மையா? அவ்வாறு இருந்து அதில் திர்வு ஏற்பட்டு இருக்கிராதா? விளக்கம் தரவும்….