Featured Posts

பெண்களை சீரழிக்கும் ரோஹிப்னோல் (ROHYPNOL) மருந்து

பெண்களை சீரழிக்கும் ரோஹிப்னோல் (rohypnol) மருந்து
ரோஹிப்னோல் எனும் மருந்து பெண்களை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அறியாமலேயே சீரழிக்க உதவுகிறது. சமீபத்தில் மும்பையில் மேஜிக் எனும் இரவு நேர விடுதியிலிருந்து 5 குண்டர்கள் ஒரு பெண்ணை கடத்திச் சென்று கற்பழித்து பேன்ட்ஸ்டான்ட் எனும் இடத்தில் தூக்கி எறிந்து விட்டதாக வழக்கு பதிவாகியது. பாதிப்புக்கு உள்ளான பெண்னை விசாரித்த பொழுது அவருக்கு என்ன நடந்தது என்பது சிறிதளவு கூட ஞாபகத்தில் இல்லை. பின்னர் மருத்துவ பரிசோதனை நடத்திய பொழுது அப்பெண்ணுக்கு ரேஹிப்னோல் என்னும் மருந்து கொடுத்து சீரழிக்கப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.

(rohypnol) மருந்து என்றால் என்ன?
(rohypnol) மருந்து சிறிய வில்லையாக வருகிறது மேலும் இம்மருந்து பல முன்னேறிய நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்தாகும். இந்த மருந்தை உட்கொள்பவர்களுக்கு தனக்கு கடந்த 10-12 மணிக்கு முன்னால் என்ன நடந்தது என்பதே நினைவில் இருக்காது. மேலும் இதை உட்கொள்ளும் பெண்களுக்கும் கருத்தரிக்கும் வாய்ப்பே கிடையாது அதற்கு மேல் நிரந்தரமாக மலட்டுத்தன்மை அடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வகையான மாத்திரை வில்லைகள் இந்தியா போன்ற நாடுகளில் கேளிக்கை விடுதிகள்ää கல்லூரிகள் போன்ற இடங்களில் இளவயதினரை குறிவைத்து விற்கப்படுகிறது என்பது வருந்தத்தக்க செய்தியாகும். இவ்வகை மாத்திரைகள் சமுதாயச் சீரழிவை உண்டாக்கும் கயவர்களின் கைகளில் சிக்கியிருப்பதுதான் மிகவும் வேதனையான விசயம்.

(ROHYPNOL) மருந்து எப்படி இருக்கும் எவ்வகையைச் சார்ந்தது அடையாளம் காணமுடியுமா?

இம்மருந்து வேலியம் (Valium )மற்றும் ஜனாக்ஸ் (xanox)போன்ற தூக்க மாத்திரை வகையைச் சார்ந்தது. இவ்வகை மருந்து ஆரம்பத்தில் தூக்கம் உண்டவாதற்காகவே உபயோகப்படுத்தப்பட்டது. மேலும் இம்மருந்தின் முக்கிய குணமானது இம்மருந்தை வேறொரு திரவமோ அல்லது மருந்துடனோ சேர்த்து உட்கொள்ளும் பொழுது மற்ற மருந்தின் வீரியத்தை கூட்டக்கூடிய சக்தி உடையது. அதன் காரணமாகவே அமெரிக்கா போன்ற மேல் நாடுகளில் கேளிக்கை விருந்துகளின் மது பானங்களுடன் உட்கொள்ள ஆரம்பித்தனர். பின்னர் அந்நாடுகளில் அதன் விபரீதத்தை அறிந்து தடை செய்யப்பட்டது. இம்மருந்தை உபயோகித்து கற்பழிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காகவே Drug Induced Rape Prevention and Punishment Act எனும் சட்டம் அமெரிக்காவில் இயற்றப்பட்டது. அதற்கும் மேலாக அம்மருந்து பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது.

அடையாளம்: (Rohypnol) மருந்து வண்ணம் வாடை சுவை எதுவும் இல்லாதது. அதனால் அம்மருந்தை குடிக்கும் பானத்திலோ வேறு எதிலும் சேர்க்கும் பொழுது உட்கொள்பவர்களால் அடையாளம் காண முடிவதில்லை. அக்காரணத்தினாலேயே நயவஞ்சகர்கள் இதைக்கேடான வழிக்கு உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள. இம்மருந்தை அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் RAPE DRUG என்று அழைக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அம்மாத்திரை எங்கு கிடைக்கும் மற்றும் எப்படி உபோயகம் செய்வது என்று பல வலைத்தளங்களிலும் விரிவாக விவரித்து இருப்பது மிகவும் கொடுமையான விசயம். மக்கள் குறிப்பாக பெண் மக்கள் இனிமேலாவது நவ நாகரீகம் என்ற மாய வலையில் விழாமல் விழித்துக் கொள்வார்களா…?

THANKS TO : செய்யத் ஆப்தீன்

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகம்

One comment

  1. Sir this is a sedative pill not a sterilization pill as mentioned by you. It is used in the short-term treatment of insomnia, as a pre-medication in surgical procedures and for inducing anaesthesia. Like other benzodiazepines (such as Valium, Librium and Xanax), Rohypnol’s effects include sedation, muscle relaxation, reduction in anxiety, and prevention of convulsions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *