உள்ளங்களைப் பண்படுத்தும் எழுச்சியுரை: மவ்லவி. அப்துல் பாஸித் அல்புகாரீ
மண்ணறை வாழ்க்கை மறுமையின் முதல் படி. அதில் ஈடேற்றறம் பெற்று விட்டால் மறுமையின் காரியங்கள் சீராகி விடும். மண்ணறை வாழ்க்கையில் ஒருவர் வெற்றியடையவில்லையெனில் அது மிகப்பெரும் பேரிழப்பு. நபி (ஸல்) அவர்களின் இந்த முன்னெச்சரிக்கையை நினைத்தே உஸ்மான் (ரழி) அவர்கள் கப்றுகளைத் தரிசிக்கும்பொதெல்லாம் அழுவார்கள்.
ஸஅத் இப்னு முஆத் – இவரது மரணத்தின் காரணமாக ரஹ்மானுடைய அர்ஷ் அதிர்ந்து விட்டது. அப்படிப்பட்ட ஒரு நபித்தோழரையே கப்று சற்றேனும் நெருக்கியது! அப்படியெனில் மண்ணறை வாழ்வை சந்திக்க நமது தயாரிப்புகள் என்ன?
நீங்களும் உங்கள் குடும்பத்தவர்களும் அவசியம் பாருங்கள். அத்துடன் நன்மையைப் பகிர்ந்துகொள்ளுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் மண்ணறையின் குழப்பங்களிலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
அன்புடன்
தமிழ் அழைப்புக்குழு, பஹ்ரைன்
Download mp4 Video Size: about 147 MB
Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/file/suq72uls8bp8dy7/fearing_of_the_Grave_life-Abdul_basith.mp3]
Dwonload link is not here…
நிச்சயம் நாம் அனைவரும் மரணத்தைச் சுகித்தே ஆக வேண்டும் என்பதை மறந்து உலக ஆசாபாசங்களில் மூழ்கி அல்லாஹ்வை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோமே. என்றோ ஒருநாள் நாம் மண்ணறையைச் சென்றடையத்தான் போகிறோம் அதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. அது இன்றாகக் கூட இருக்கலாம். இதனைத் தெளிவாக விளக்கி மனித உள்ளங்களில் அச்சத்தையும், திகிலையும் ஏற்படுத்தப் பாடுபடும் சகோதரர் மௌலவி அப்துல் பாஸித்தின் உரை எம்மைப் போன்ற சகோதர, சகோதரிகளுக்கு மிகவும் பயனளிக்கும் என நம்புகிறேன். இன்ஷா அல்லாஹ்…! யா அல்லாஹ்…! எங்களை மன்னிப்பாயாக ஸாலிஹான கூட்டத்தாரில் எங்களைச் சேர்த்துக் கொள்வாயாக…ஆமின்..!