ஸுனன் றவாதீப் – ஐவேளை கடமையான தொழுகைக்கு முன் பின் தொழ வேண்டிய சுன்னத்தான தொழுகையின் சிறப்புகள் மற்றும் அதன் சட்டங்கள் பற்றிய தொடரில் ஆசிரியர் அவர்கள் பல்வேறு ஆதாரப்பூர்வமான செய்திகளை கொண்டு விளக்குவதோடு மக்களிடம் நடைமுறையிலுள்ள சில வழிமுறைகள் ஆதாரப்பபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்தவை அல்ல என்பதையும் கோடிட்டுகாட்டுகின்றார்.
இந்த தொடரில்..
- அஸர் தொழுகைக்கு முன்னால் ஸுன்னத் தொழு இயலுமா? எத்தனை ரகஅத்துக்கள் தொழவேண்டும்?
- அஸர் தொழுகைக்கு பின் ஸுன்னத் தொழுவது அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா?
- மக்ரிப் தொழுகைக்கு முன் ஸுன்னத் உள்ளனவா? எத்தனை ரகஅத்துக்கள் தொழவேண்டும்?
- மக்ரிப் தொழுகை-யின் பின் ஸுன்னத்-தின் சிறப்புகள் என்ன?
- இஷா தொழுகைக்கு முன் பின் ஸுன்னத்துக்கள் எத்தனை ரகஅத்துக்கள் தொழவேண்டும்?
- பஜ்ர் தொழுகை-யின் முன் ஸுன்னத்-தின் சிறப்புகள், அதில் நபி (ஸல்) அவர்கள் ஓதிய குர்ஆன் அத்தியாயங்கள், வசனங்கள் என்ன? மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றிய தெளிவான ஒரு விளக்கத்தை தருகிறார்.
சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை பெற்றுத்தரகூடிய ஸுன்னத் தொழுகை 12 ரக்அத்துக்கள் (ஒரு நாளைக்கு) ஐவேளை தொழுகையின் முன், பின் ஸுன்னத்கள் பற்றி தெளிவாக அறிவதற்கு இந்த தொடரில் உள்ள வீடியோக்களை பார்வையிடவும்
இஸ்லாமிய சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி
வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி — அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (AIC)
இடம்: அல்-ஜுபைல் மாநகரம்
நாள்: 26-04-2013
வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக்