Featured Posts

Tag Archives: தொழுகை

39.கஅபாலா (பிணையாக்கல்)

பாகம் 2, அத்தியாயம் 39, எண் 2290 ஹம்ஸா அல் அஸ்லமி(ரலி) அறிவித்தார்உமர்(ரலி) என்னை ஸகாத் வசூலிப்பவராக அனுப்பினார். (நான் சென்ற ஊரில்) ஒருவர் தம் மனைவியின் அடிமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தார். உடனே நான் அந்த மனிதருக்காக ஒரு பிணையாளைப் பிடித்து வைத்துக் கொண்டு உமர்(ரலி) அவர்களிடம் சென்றேன். உமர்(ரலி) அதற்கு முன்பே அவருக்கு, அவர் (மனைவியின் அடிமைப் பெண் தமக்கும் அடிமைப்பெண்தான் என்று கருதி) அறியாமையால் செய்த …

Read More »

38. ஹவாலா (ஒருவரின் கடனை மற்றொருவருக்கு மாற்றுதல்)

பாகம் 2, அத்தியாயம் 38, எண் 2287 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “செல்வந்தன் (வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Read More »

33.இஃதிகாஃப்

பாகம் 2, அத்தியாயம் 33, எண் 2025 இப்னு உமர்(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!” பாகம் 2, அத்தியாயம் 33, எண் 2026 ஆயிஷா(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!” பாகம் 2, அத்தியாயம் 33, எண் 2027 அபூ ஸயீத் அல் …

Read More »

31.தராவீஹ் தொழுகை

பாகம் 2, அத்தியாயம் 31, எண் 2008-2009 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளான் (மாதத்தின் சிறப்பு) பற்றி கூறினார்கள். “ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையைய் எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “(ரமளானின் இரவுத் தொழுகையை அவரவர் தனியாகத் தொழுது கொள்ளும்) இந்நிலையில் மக்கள் இருக்கும்பொழுது நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் …

Read More »

24.ஸகாத்தின் சட்டங்கள்

பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1395 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் முஆத்தை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; நான் இறைத்தூதர் என்ற உறுதிமொழியின் பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதாக அவர்களின் செல்வத்தில் …

Read More »

22.தொழுகையில் ஏற்படும் மறதி

பாகம் 2, அத்தியாயம் 22, எண் 1224 அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, மக்களும் நபி(ஸல்) அவர்களோடு எழுந்துவிட்டார்கள். தொழுகை முடியும் தருவாயில் நாங்கள் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்திருந்தபோது, அந்த இருப்பிலேயே ஸலாத்திற்கு முன் தக்பீர் கூறி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு …

Read More »

21.தொழுகையில் செய்யும் பிற செயல்கள்

பாகம் 2, அத்தியாயம் 21, எண் 1198 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் என் சிறிய தாயார் மைமூனா(ரலி)யின் வீட்டில் ஓர் இரவு தங்கினேன். ஒரு தலையணையின் அகலப்பகுதியில் படுத்துக் கொண்டேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவி (மைமூனா)வும் அந்தத் தலையணையின் நீளப்பகுதியில் படுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை அல்லது அதற்குச் சற்று முன்புவரை அல்லது அதற்குச் சற்றுப் பின்பு வரை தூங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்து அமர்ந்தார்கள். …

Read More »

18.கஸ்ருத் தொழுகை

பாகம் 1, அத்தியாயம் 18, எண் 1080 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாள்கள் தங்கினார்கள். அந்நாள்களில் கஸ்ருச் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாள்களுக்குப் பயணம் மேற்கொண்டால் கஸ்ருச் செய்வோம். (அதை விட) அதிகமானால் முழுமையாகத் தொழுவோம். பாகம் 1, அத்தியாயம் 18, எண் 1081 யஹ்யா இப்னு அபீ இஸ்ஹாக் அறிவித்தார். ‘நாங்கள் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கி நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் …

Read More »

16.கிரகணங்கள்

பாகம் 1, அத்தியாயம் 16, எண் 1040 அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தோம். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை …

Read More »

15.மழை வேண்டுதல்

பாகம் 1,அத்தியாயம் 15, எண் 1005 அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டி(த் தொழும் திடலுக்கு)ப் புறப்பட்டார்கள். (அப்போது) தம் மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பாகம் 1,அத்தியாயம் 15, எண் 1006 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கடைசி ரக்அத்தின் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியதும் ‘இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்று; இறைவா! ஸலமாபின் ஹிஷாமைக் காப்பாற்று. இறைவா! வலீத் இப்னு …

Read More »