Featured Posts

Tag Archives: அறிஞர்களின் பார்வையில்

முஃமின்களை பலப்படுத்தும் வார்த்தை! [உங்கள் சிந்தனைக்கு… – 015]

“நம்பிக்கை கொண்டோரை இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் உறுதியான வார்த்தையைக்கொண்டு அல்லாஹ் பலப்படுத்துவான்.” (அல்குர்ஆன், 14:27) என்ற இவ்வசனத்திற்கு அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்:- “வசனத்தில் வருகின்ற உறுதியான வார்த்தை என்பது: ஆதாரம் மற்றும் தெளிவான சான்று மூலம் இறைவிசுவாசியின் உள்ளத்தில் பலம்பெற்றிருக்கும் ‘கலிமதுத் தவ்ஹீத்’ எனும் வார்த்தையாகும். இதைக்கொண்டு இவ்வுலகில் இறைவிசுவாசிகளை பலப்படுத்துதல் என்பதன் பொருள்: இதன் பாதையில் பயணிக்கின்றபோது தொல்லையோ, வேதனையோ இவர்களுக்கு …

Read More »

எது நல்ல வாழ்க்கை? [உங்கள் சிந்தனைக்கு… – 014]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “நல்ல வாழ்க்கை என்பது, பொதுமக்கள் சிலர் விளங்கி வைத்திருப்பதுபோல வறுமை, நோய், கவலை போன்ற ஆபத்துக்களிலிருந்து ஈடேற்றமடைந்திருப்பது என்பதல்ல. மாறாக, ஒரு மனிதன் உள்ளம் தூய்மையானவனாகவும், (இஸ்லாத்தைத் தூய வடிவில் விளங்கிச் செயல்படுவதன்பால்) உள்ளம் விரிந்தவனாகவும், அல்லாஹ்வின் கழா கத்ரில் திருப்திகொண்டவனாகவும் இருப்பதுதான் நல்ல வாழ்க்கையாகும். அத்தோடு அவனுக்கு மகிழ்ச்சியான விடயம் ஒன்று ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவான்; அது …

Read More »

சத்தியத்திற்காகச் சோதனைகளைச் சந்திப்போர் இருக்கின்ற பாதையே சரியான பாதையாகும்! [உங்கள் சிந்தனைக்கு… – 012]

அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:- “(சத்தியத்திற்காகச் சோதனைகளைச் சந்திப்போர் இருந்து வருகின்ற) பாதையே சரியான பாதையாகும்!. இப்பாதையில்தான் ஆதம் (அலை) அவர்கள் களைப்படைந்தார்கள்; இந்த சத்தியத்திற்காக வேண்டித்தான் நூஹ் (அலை)அவர்கள் கடும் கஷ்டங்களை அனுபவித்தார்கள்; ‘அல்லாஹ்வின் தோழர்’ என்றழைக்கப்படும் இப்ராஹீம் (அலை) அவர்களும் நெருப்பில் எறியப்பட்டார்கள்; அறுவைக்காக இஸ்மாஈல் (அலை) அவர்கள் பூமியில் மல்லாக்கக் கிடத்தப்பட்டார்கள்; அற்ப விலைக்கு யூசுப் (அலை) அவர்கள் விற்கப்பட்டு, சில வருடங்கள் …

Read More »