ஹதீஸில் முரண்பாடா? ‘நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது’ என்ற ஆதாரபூர்வமான அறிவிப்பை ‘அல்குர்ஆனுக்கு முரண்படுகின்றது’ என்று கூறி, சகோதரர் மறுத்து வருகின்றார். இவர் கூறும் காரணம் தவறானது என்பதை இதுவரை நாம் ஆராய்ந்தோம். ‘குறித்த இந்த ஹதீஸிற்குள்ளேயே முரண்பாடு இருக்கின்றது’ என்ற மற்றுமொரு வாதத்தையும் இந்த ஹதீஸை மறுப்பதற்குத் துணையாக முன்வைக்கின்றார்.
Read More »Tag Archives: பீஜே
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 06)
‘முஹம்மத்(ஸல்) சூனியம் செய்யப்பட்டவர்?’ இஸ்லாத்தின் எதிரிகள் நபி(ஸல்) அவர்களை மஸ்ஹூர் – சூனியம் செய்யப்பட்டவர் என விமர்சித்துள்ளனர். அப்படி விமர்சித்தவர்களைக் குர்ஆன் அநியாயக்காரர்கள் என்று கூறுகின்றது. இதன் மூலம் அவர்களது விமர்சனம் அல்லாஹ்வால் மறுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக ஹதீஸ் கூறுகின்றது. எனவே இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தோரணையில் வாதித்து சகோதரர் ஹதீஸை மறுக்கின்றார்.
Read More »மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 05)
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருந்தால் அதைக் காஃபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்கள். அப்படி விமர்சனம் செய்ததாக எந்தத் தகவல்களும் இல்லை. எனவே, விமர்சனம் இல்லை என்பதே நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவில்லை என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றது என்ற அடிப்படையில் சகோதரர் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுக்கின்றார்.
Read More »மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 04)
பாதுகாக்கப்பட்ட இறைவேதம்: நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை ஏற்றுக்கொண்டால் குர்ஆனின் நம்பகத் தன்மையில் அது சந்தேகத்தை ஏற்படுத்தி விடும் என்ற வாதத்தை முன்வைத்து பிஜே அவர்கள் அது பற்றிய ஸஹீஹான ஹதீஸை மறுக்கின்றார். அவர் முன்வைக்கும் வாதத்தின் போலித் தன்மையையும், அவர் தனக்குத் தானே முரண்படும் விதத்தையும், தனது வாதத்தை நிலைநிறுத்துவதற்காக ஹதீஸில் கூறப்பட்டதற்கு மாற்றமாக மிகைப்படுத்தும் அவரது போக்கையும், குர்ஆன் தொகுப்பு வரலாற்றில் குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் …
Read More »மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 03)
அன்பின் நண்பர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். சூனியம் என்றால் வெறும் தந்திர வித்தைதான் என்ற கருத்துத் தவறானது என்பது குறித்தும், ‘(நபியே) மனிதர்களிலிருந்து உம்மை அல்லாஹ் பாதுகாப்பான்’ என்ற குர்ஆன் வசனத்திற்கு நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகச் கூறும் ஹதீஸ் முரண்படுகின்றது என்ற வாதம் போலியானது என்பது குறித்தும் இந்தொடரில் ஆராயப்படுகின்றது.
Read More »பீ.ஜைனுல் ஆபிதீன் தர்ஜமாவில் தவறுகள்! – தொண்டியில் ஒரு விவாத ஒப்பந்தம்!
by ஹாபிழ். எம்.ஏ. அஹமது ஹசன் (முன்னால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாயீ) அல்குர்ஆன் மொழியாக்கம் மற்றும் விரிவுரை என்ற பெயரில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை தகர்க்கும் விஷக்கருத்துக்களை பீ.ஜை திணித்துள்ளார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அவருடைய தர்ஜமாவில் ஊடுறுவிக் கிடக்கும் ஏராளமான கொடிய தவறுகளை மார்க்க அறிஞர்கள் அடையாளம் காண்பித்து ஆங்காங்கே எச்சரித்து வருகின்றனர்.
Read More »மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 02)
அன்புள்ள வாசகர்களுக்கு, இக்கட்டுரையை நிதானமாக நடுநிலையோடு வாசியுங்கள். சத்தியத்தை விட தனிநபரை நேசிக்கும் வழிகேட்டிலிருந்து விடுபட்டு வாசியுங்கள். கட்டுரைத் தொடர் முடியும் வரை முடிவு எடுக்காது உண்மையைத் தேடும் உணர்வுடன் வாசியுங்கள். சூனியம் இருக்கின்றது என்று நாம் கூறுவதை சூனியம் சம்பந்தமாக நடைபெறும் ‘ஷிர்க்’குகளையோ மூட நம்பிக்கைகளையோ நாம் ஆதரிக்கிறோம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். இங்கு சூனியம் என்ற அம்சத்தை விட ஹதீஸ் மறுக்கப்படுவது என்ற அம்சமே பிரதானமானது என்பதைக் …
Read More »மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 01)
அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். அல்குர்ஆனில் “அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள்” என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத்தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நம்புவதும் அவற்றை ஏற்று நடப்பதும் நபி(ஸல்) அவர்களது நபித்துவத்தை நம்புவதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் வெளிப்படையாகக் காட்டும் முக்கிய அம்சங்களாகும்.
Read More »திருக்குர்ஆனில் விளையாடும் குழப்பவாதிகள்
வழங்குபவர்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி வெளியீடு: இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை
Read More »ஏகத்துவம் மாத இதழ் ஆசிரியர்கள், மற்றும் ஆலோசனைக் குழுவினர்க்கு
திருந்தி, நம்பிக்கைகொண்டு பின்னர் நேர்வழியில் நடப்பவரை நிச்சயமாக நான் மன்னிப்பவானாக இருக்கிறேன் (20:82). இறைவா! எங்களுக்கு சத்தியத்தை சத்தியமாகக் காட்டி அதை பின்பற்றும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்குவாயாக! இறைவா! அசத்தியத்தை எங்களுக்கு அசத்தியமாகக் காட்டி அதிலிருந்து தவிர்ந்து கொள்ளும் பாக்கியத்தையும் எங்களுக்கு அருள்வாயாக! ஏகத்துவம் மாத இதழ் ஆசிரியர்கள், மற்றும் ஆலோசனைக் குழுவினர்க்கு கே.எஸ். ரஹ்மத்துல்லா இம்தாதி ஸலாமுடன் எழுதிக்கொள்வது, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
Read More »