Featured Posts

Tag Archives: ஒழுக்கம்

[பாகம்-7] முஸ்லிமின் வழிமுறை

அல்லாஹ்வின் வார்த்தையுடன்… அல்லாஹ்வின் வார்த்தையுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குகள்: அல்லாஹ்வின் வார்த்தை பரிசுத்தமானது. மற்ற எல்லா வார்தைகளை விட மேலானதும் சிறப்பானதும் ஆகும். திருக்குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தையாகும். திருக்குர்ஆனின் கூற்றை கூறியவர் உண்மையைக் கூறியவராவார். திருக்குர்ஆனின்படி தீர்ப்பு வழங்கியவர் நீதமாக நடந்து கொண்டவராவார். திருக்குர்ஆனை அறிந்திருப்பவர்கள் அல்லாஹ்வுக்குரியவர்கள்; அவனுக்கே உரித்தானவர்கள். அதைப் பற்றிப் பிடித்துக் கொள்பவர்கள்.  தப்பித்துக் கொள்வார்கள்; வெற்றி பெறுவார்கள். அதனைப் புறக்கணிப்பவர்கள் பேரிழப்புகளுக்கு  ஆளாவார்கள்; அழிந்து …

Read More »

[பாகம்-6] முஸ்லிமின் வழிமுறை.

அல்லாஹ்வுடன்… அல்லாஹ்வுடன் நடந்து கொள்ளவேண்டிய ஒழுங்குகள்: ஒரு முஸ்லிம் தன் தாயின் கருவறையில் இந்திரியத் துளியாக இருந்ததிலிருந்து அல்லாஹ் அவனுக்கு அருளிய அருட்கொடைகளை (இவ்வருட்கொடைகள் நாளை மறுமையில் அவன் இறைவனைச் சந்திக்கும்வரை அவனுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும்) எண்ணிப் பார்த்து அதற்காக வல்ல நாயனுக்கு, அவனை தனது நாவால் புகழ்ந்து, துதிபாடி, தன் அவயங்களை அவனுடைய வழிபாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் நன்றி செலுத்தவேண்டும். இதுதான் அல்லாஹ்வுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கமாகும். …

Read More »

ஒழுக்க விழுமியங்கள்

வழங்குபவர்: மௌலவி நைஸர் மதனீ வெள்ளி மேடை (34) – நாள்: 19.12.2008 இடம்: அல்-ஜுபைல் துறைமுக பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

குறிப்பு (2)

அல்லாஹ்விடம் அவன் படைப்பினங்களைக் கொண்டு ஆணையிட்டுப் பிரார்த்தித்தல் தடுக்கப்பட்டுள்ளது போல படைப்பினங்களிடம் சென்று அவற்றைக் காரணம் காட்டியும், அவற்றைப் பொருட்டாகக் கொண்டும் கேட்பது விலக்கப் பட்டிருக்கிறது. ஆனால் சிலர் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். சில ஸலபுஸ்ஸாலிஹீன்களுடைய குறிப்புகளையும் தம் தஃவாவுக்குச் சான்றாகக் கூறினார்கள். எனவே மக்களில் பலர் இம்மாதிரி துஆச் செய்வதைக் காணலாம். ஆனால் இது விஷயத்தில் நபிகளைப்பற்றி அறிவிக்கப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தும் பலம் குன்றியவையும், புனையப் பட்டவையுமாகும்.

Read More »