அறிஞர் தபரானி தமது ‘முஃஜமுல் கபீர்’ என்ற நூலில் ‘ஒரு நயவஞ்சகன் மூமின்களுக்கு கெடுதிகள் செய்து கொண்டிருந்தான். இதைக் கண்ட அபூபக்கர் ஸித்தீக் (ரலி) மூமின்களை நோக்கி, வாருங்கள்! அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் செல்வோம். இந்த நயவஞ்சகனின் தொல்லையிலிருந்து தப்பிக்க நபிகளைக் கொண்டு உதவித் தேடுவோம்’ என்றார்களாம். இதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘என்னைக் கொண்டு எப்படி உதவித் தேட முடியும். அல்லாஹ்வைக் கொண்டுதான் உதவி …
Read More »Tag Archives: சட்டம்
இது விஷயத்தில் அப்துல் மலிக் பின் ஹாரூன் ரிவாயத்
ஆனால் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் இப்னு அப்பாஸைப் பற்றி ஒரு ஹதீஸை ரிவாயத் செய்கிறார். அதில் இப்னு அப்பாஸ் ‘கைபரில் உள்ள யூதர்கள் கத்பான் கோத்திரத்தாருடன் போராடி யுத்தம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் இந்த யூதர்கள் கத்பான்களுடன் மோதும் போதெல்லாம் தோல்வி அடைந்து விடுவது வழக்கம். எனவே கீழ்வரும் துஆவைக் கொண்டு யூதர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினார்களாம். ‘இறைவா! எழுதப்படிக்கத் தெரியாத நபியான முஹம்மத் (ஸல்) அவர்களின் …
Read More »வஸீலாவின் மூன்றாவது வகை*
வஸீலாவின் மூன்றாவது வகை அனுமதிக்கப்படாத வஸீலாவாகும். அதுவே நபிமார்கள், ஸாலிஹீன்கள் இவர்களைப் பொருட்டாக வைத்தும், மேலும் இவர்களைக் காரணம் காட்டியும், இவர்களை கொண்டு ஆணையிட்டும் அல்லாஹ்விடம் வஸீலா தேடுதல். இத்தகைய வஸீலா முழுக்க முழுக்க விலக்கப்பட்டிருக்கிறது. இந்த வஸீலாவிற்கு திருமறையும், ஸஹீஹான ஹதீஸும் ஸஹாபாக்களின் தீர்ப்புகளும் இமாம்களின் கொள்கைகளும் எதுவுமே சான்றாகாது. இதை அனுமதித்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில உலமாக்கள் மட்டுமே. பெரும்பாலான அறிஞர்கள் சிருஷ்டிகளைக் …
Read More »ஹதீஸ்களின் தராதரங்கள்
இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் தமது ஜாமிஉ என்ற ஹதீஸ் தொகுப்பில் ஹதீஸ்களை மூன்றாகத் தரம் பிரித்தார்கள். அவை: ஸஹீஹ், ஹஸன், ளயீஃப் என்பன. இமாம் திர்மிதி அவர்கள்தாம் முதன் முதலாக ஹதீஸ்களை இப்படி பிரித்துக் காட்டியவர்கள். ஒரே ஹதீஸ் பல வழிகளில் அறிவிக்கப்படும் போதும், அறிவிப்பாளர்கள் பட்டியலில் குற்றம் சுமத்தப்பட்டவர்களும், ஒற்றையாக நிற்பவர்களும் இல்லாமல் இருக்கும்போதும் தான் அந்த ஹதீஸுக்கு ‘ஹஸன்’ என்று பெயரிட்டார்கள். இமாம் திர்மிதி ஹஸன் …
Read More »குறிப்பு (3)
இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுடைய தோழர்களின் பிரபலமான நூற்களிலிருந்து இத்தகைய சம்பவங்களை காழி இயாள் தமது நூலில் தொகுத்துத் தந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் பலவீனமான பற்பல அறிவிப்பாளர்களால் சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தையும் தம் நூலில் எடுத்துக் கூறுகிறார்கள். அது வருமாறு: ‘மஸ்ஜிதுன் நபவியில் கலீபா அபூஜஃபருல் மன்ஸூர் அவர்கள் இமாம் மாலிக் அவர்களுடன் வாதிட்டுக் கொண்டிருந்தார்களாம். அந்நேரம் கலீபாவிடம் இமாம் அவர்கள் கூறினார்களாம்.
Read More »தவஸ்ஸுல் வஸீலாவில் ஏற்பட்ட பிசகுதல்கள்
மேற்கூறிய விளக்கங்களெல்லாம் சரிவர நாம் புரிந்து கொண்டோம். அவ்விளக்கங்களிலிருந்து ‘தவஸ்ஸுல் வஸீலா’ என்ற வார்த்தைகளைப் பற்றி ஓரளவுக்கு விளங்க முடிந்தது. இவ்விரு வார்த்தைகளும் அடக்கியிருக்கும் சரியான கருத்துகள் யாவை என்பதுப் பற்றி மேலும் நாம் தெரிய வேண்டியிருக்கிறது. ஏனெனில் பற்பல மாறுபட்ட பிசகுதலான கருத்துகளை மக்கள் அவற்றிலிருந்து எடுத்துக் கொள்கின்றனர். ‘வஸீலா, தவஸ்ஸுல்’ என்பதின் உண்மையான கருத்துகள் யாவை? வஸீலா என்ற வார்த்தைக்குப் பொருந்தாத பொய்யான கருத்துகள் யாவை? என்பவற்றை …
Read More »அனுஷ்டானங்களில் சிறந்தது தொழுகை
வழிபாடுகளில் ஏற்றமானது தொழுகை. அத்தொழுகையில் குர்ஆன் ஓதுதல், துஆக்கள் கேட்டல், திக்ரு செய்தல் யாவும் அடங்கியிருக்கின்றன. இதில் ஒவ்வொன்றும் அதற்குரிய குறிப்பிட்ட இடத்தில் சொல்ல வேண்டுமென்பது சட்டம். தக்பீர் கட்டித் தொழுகையில் நுழைந்து ‘வஜ்ஜஹ்த்து, தனா போன்றவை ஒதி முடித்ததும் குர்ஆனிலிருந்து சிறிதளவு ஓதவேண்டும். ருகூவிலும், ஸுஜுதிலும் குர்ஆன் ஓதுதல் விலக்கப்பட்டுள்ளது. இவ்விரு இடங்களிலும் திக்ருகள், துஆக்கள் தான் ஓதவேண்டும். பெருமானார் அவர்கள் தொழுகையின் இறுதியில் பிரார்த்தித்திருக்கிறார்கள். தோழர்களிடமும் அதைப் …
Read More »பாடம்-01 | இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதின் உண்மை அர்த்தம்
இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதின் உண்மை அர்த்தம். லா இலாஹ இல்லல்லாஹ் என்று இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதில் இரண்டு அம்சங்கள் அடங்கியுள்ளன. அவையாவன மறுப்பதும் உறுதிபடுத்துவதுமாகும். முதலாவது: எல்லாப் புகழுக்கும் உரிய அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும் அல்லது வேறு எதற்க்கும் தெய்வீகத் தன்மை கிடையாது என்று இறை நம்பிக்கையை சாட்சி கூறும் ஷஹாதா மறுக்கிறது. அல்லாஹ்வை அன்றி ஏனையவைகள் மலக்குகள், நபிமார்கள், ஏனைய மனித இனங்கள், சிலைகள், உலகின் …
Read More »