நான்காம் கட்டம்: விடுதலை பெற்ற பின் முஸ்லிம் நாடுகளின் நிலை. முஸ்லிம் நாடுகள் ஒவ்வொன்றாக விடுதலையடைந்த பொழுது எமது வரலாற்றின் நான்காம் கட்டம் உதயமாயிற்று. இக்காலப்பிரிவை உற்று நோக்கும் போது, சோர்வூட்டும் ஒரு பரிதாபக் காட்சி நம் கண்களை சந்திக்கின்றது. இப்புது அரசுகளின் அலுவல்களை நிர்வகித்து நடாத்தும் நிலையில் இருப்போர் அத்தனை பேரும் மேனாட்டுக் கலாச்சாரத்தில் முதல் நிலைப் பற்றுடையோராயும் இஸ்லாமிய பாரம்பரியங்களுக்கு சிறிதும் மதிப்பளிக்காதோருமாய் இருக்கக் காணப்பட்டனர். அவர்கள், …
Read More »Tag Archives: நூல்கள்
இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (19)
மேலே விவரிக்கப்பட்ட நிகழ்ச்சிப்போக்கு, சில மாற்றங்களுடன் மேனாடுகளின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி விடுதலையடைந்த எல்லா முஸ்லிம் நாடுகளிலும் இடம் பெற்றது. அல்ஜீரியாவில் பெரும் இடர்பாடுகளுக்கிடையே நீண்ட காலமாக மக்கள் கடுமையாகப் போராடினார்கள்.ஈவிரக்கமற்ற பிரெஞ்சு ஆட்சியாளர்கள் அவர்களைத் துன்புறுத்தியது மட்டுமன்றி சித்திரவதையும் செய்தனர். ஆனால் இக்கொடுமைகள் எதனாலும் அம்மக்களின் திடசங்கற்பத்தைக் குலைக்க முடியவில்லை. அவர்கள் தம் நீண்டகால தீவிரப் போராட்டத்தின் முடிவில் வெற்றியீட்டியபொழுது, அவர்கள் உயிரைப் பயணம் வைத்துப் போராடிப் பெற்ற …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (18)
விடுதலை இயக்கம் மேனாடுகளிலிருந்து பெற்ற அரசியல், பொருளாதாரக் கருத்துக்கள் ஒவ்வொரு முஸ்லிம் நாட்டிலும் விடுதலை இயக்கத்திற்கு ஊக்கமளித்தன. விடுதலைக்காக போராடி வெற்றி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம் நாட்டிலும் ஒரே வகையான நிகழ்ச்சித் தொடர் இடம் பெற்றது. எல்லா நாடுகளிலும் மேனாட்டுக் கல்வி பெற்றவர்களே விடுதலை இயக்கத்தின் முன்னணியில் நின்றனர். எல்லா நாடுகளிலும் இஸ்லாத்தின் பெயரால் வேண்டுகோள் விடுப்பது கொண்டே முஸ்லிம் பொதுமக்கள் செயல்படத் தூண்டப்பட்டனர். இப்போராட்டத்தின் பின் தோன்றிய ஆட்சி …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (17)
தலைமை மாற்றம் பொருளாதாரத்தின் தேவை, விவேகமும் பேரவாவுமிக்க முஸ்லிம் இளைஞர்கள் அனைவரையும் அரசாங்கக் கல்வி நிலையங்களுக்குத் துரத்தியது. அங்கு அவர்கள் பெற்ற கல்வி, அவர்களைத் தம் சொந்த பாரம்பரியத்திலிருந்தும் பிரித்து விட்டது. அவர்கள் மேனாட்டுக் கருத்துக்களை ஏந்தி வெளியேறியதோடு, தம் சொந்தக் கலாச்சாரத்தில் பெறுமதி வாய்ந்த எதுவுமில்லையென்றும் தம் சென்ற கால வரலாற்றில் தாம் பெருமைப்படக்கூடியது ஒன்றுமில்லை என்றும் நம்பினர். மேனாட்டு வாழ்க்கை முறையினை மிக நுணுக்கமாகப் பின்பற்ற அதன் …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (16)
அன்னிய ஆட்யின் கீழ் சிறுவரும் சிறுமியரும் பெற்ற புதுமுறைக் கல்வியினால் விளைந்த ஒழுக்கக் கேட்டை மிகைப்படுத்திக் கூறுவது கடினமாகும். அவர்கள் தம் சொந்த கலாச்சாரத்திற்குப் பதில் இழிந்த, பகட்டு மிக்க மேனாட்டுப் போலிக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். மேனாட்டு அறிவு தான் மிக்க உண்மையானது, நம்பத்தக்கது என்றும் மேனாட்டு ஒழுக்க முறை தான் தூய்மை மிக்கதென்றும் மேனாட்டு நாகரிகமே மனித மூளை தோற்றுவித்த மிகச் சிறந்த நாகரிகம் என்றும் …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (15)
மூன்றாவது கட்டம்: அன்னியர் ஆட்சியும் அதன் விளைவுகளும். எமது வரலாற்றின் மூன்றாவது கட்டத்தை விரிவாக விளக்க வேண்டிய அவசியமில்லை. அதிலிருந்து நாம் மீட்சி பெற்று சில ஆண்டுகளே ஆகின்றன. அக்கட்டம் எப்படியிருந்தது என்பதை மறந்து விடாது நினைவில் வைத்திருக்கும் பலர் எம்மிடையே இருக்கின்றனர். இருப்பினும் மக்களின் சுதந்திரத்தின் மீது அந்நியர் ஆட்சி விதித்த கட்டுப்பாடுகள் பற்றி மங்கலான நினைவுள்ள ஒரு புது சந்ததியினர் வளர்ந்துள்ளனர். அவர்களின் பயன் கருதி இங்கு …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (14)
இதுவரை, இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் கட்டத்தில் முஸ்லிம் உலகில் பல்கிப் பெருகிய தீமைகளை அளவிட்டுக் காண்பிக்க ஒரு முயற்சி செய்துள்ளேன். இரண்டாம் கட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட தீய சக்திகள் இஸ்லாமிய வரலாற்றின் மூன்றாம் கட்டம் தோன்றுவதற்கு ஒத்துழைத்தன. இம்மூன்றாம் கட்டத்தில் முஸ்லிம் உலகின் ஒரு பெரும் பகுதியில் ஐரோப்பியக் குடியேற்ற நாட்டு ஆட்சி தாபிக்கப் படுவதைக் காண்கிறோம். பிலிப்பைன் முதல் மொரோக்கோ வரையுள்ள பூகோளப் பகுதியில் எல்லா இஸ்லாமிய நாடுகளும் …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (13)
முடியரசு முஸ்லிம்களிடையே இன உணர்ச்சியை பிறப்பித்து வளர்த்தது. தம் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மன்னர்கள் இனவேறுபாடுகளை, பழி பாவத்திற்கு அஞ்சாமல் பயன்படுத்தினர். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உமையாக்களுக்கும் அப்பாசியருக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தில் அப்பாசியர் பாரசீகர்களின் ஆதரவைப் பெற நாடினர். இதற்காக அரேபிய உமையாக்களுக்கு எதிராகப் புரட்சி செய்யுமாறு அவர்கள் பாரசீகர்களைத் தூண்டினர். பல்வேறு முஸ்லிம் குழுக்களுக்கு இடையே நிலவிய பகைமையைப் பயன்படுத்தும் கொள்கையைப் பல நூற்றாண்டுகளாக மன்னர்கள் கடைபிடித்து …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (12)
இன, பிரதேச வேறுபாடுணர்ச்சிகள் இக்காலப்பிரிவில் மற்றொரு தீமை தலைதூக்கியது. இது இஸ்லாமிய உலகின் ஐக்கியத்தையே சிதறடிக்கக் கூடிய ஆபத்தாக மாறியது. அது முஸ்லிம் நாடுகளில் வளர்ந்த பிரதேசவாதமும் இனவாதமுமாகும். இஸ்லாமியக் கொள்கையில் மனிதத் தன்மைக்கு ஒரு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. மனித இனம் இறைவனின் குடும்பம் என்றும், அதன் ஒவ்வோர் உறுப்பினரும் மற்றவர்கள் அனைவரதும் நல்வாழ்வுக்குப் பொறுப்பாளராவார் என்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள். முஸ்லிம் சகோதரத்துவத்தின் ஒருமைப் பாட்டினை …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (11)
கல்வியை வளர்ப்பதற்கு அரைகுறையாக எடுக்கப்பட்ட முயற்சிகள் முஸ்லிம் சமுதாயத்தின் தேவைகளை நிறைவு செய்ய இயலவில்லை. பெரும்பான்மையான மக்கள் அறியாமையிலேயே உழன்றனர். ஆதலால் அரச அலுவல்களில் விவேகத்துடன் கூடிய அக்கறை கொள்ளும் தகைமையை அவர்கள் பெற்றிருக்கவில்லை. அவர்கள் எளிதில் மன்னர்களுக்கு வசப்படக்கூடிய பிரசைகளாகவே இருந்தனர். இஸ்லாத்தின் சனநாயக இலட்சியம் அவர்களைக் கவரவில்லை. அதிகாரத்திற்கு கண்மூடித்தனமாக அடிபணிதல் முடியாட்சியில் ஒரு நல்ல பணியாகக் கருதப்பட்டது. தன்மான உணர்ச்சிக்கு அங்கு இடமே இருக்கவில்லை. இஸ்லாம் …
Read More »