மிகவும் கடினமாதொரு காலச் சூழலில் மனித சமூகம் உழன்று கொண்டிருக்கின்றது. இத்தகையதொரு சிரமநிலையில், தம்மைப் பெற்ற தாய்-தந்தையரைப் பொறுப்பாகக் கவனித்துக் கொள்வது, இறையருளுக்கும், மதிப்புக்கும் உரிய செயலாகும். அதுமட்டுமல்ல, இறைகட்டளையை மதித்து தமது ஆன்மிக நிலையை வளர்த்து கொள்ளும் ஒரு மாபெரும் வாய்ப்புமாகும் அது! தம்மைப் பெற்றெடுத்த தாய்-தந்தையருக்காக பிரார்த்திக்கும்படி மட்டும் மனிதனுக்கு இறைவன் கட்டளையிடவில்லை. மாறாக, நம்மைப் பராமரித்து வளர்க்க யாருமில்லாது நிராதரவான நிலையில் குழந்தையாக நாம் இருந்தோம். …
Read More »Tag Archives: இஸ்லாம் அறிமுகம்
கிறிஸ்தவ திருமணங்களைப் போன்றவையா இஸ்லாமிய திருமணங்கள்?
இஸ்லாமிய திருமணம் என்பது ஒரு இரகசிய சடங்கு (Sacrament) அல்ல! மாறாக, எளிமையான ஒரு உறவுமுறை ஆகும். இரு தரப்பாரும் நிபந்தனைகள் விதிக்க உரிமை பெற்ற ஒரு சட்டபூர்வ வாழ்க்கை ஒப்பந்தமே அன்றி வேறில்லை! எனவே, திருமண மரபும், வழக்கமும் நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடிய ஒரு விசாலமான செயல்முறை! விவாக விலக்கு என்பது பரவலான ஒன்றும் அல்ல! தடுக்கப்பட்ட ஒன்றும் அல்ல! மாறாக, வேறு தீர்வே இல்லை எனும் நிலையில் …
Read More »ஒரு முஸ்லிம் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணமுடிக்கலாமா?
இஸ்லாம் உலக சமூகங்கள் அனைத்துக்கும் ஒரு வாழ்க்கை நெறியாக அருளப்பட்டது. ஒவ்வொரு காலங்களிலும் வலியுறுத்தப்பட்ட இந்த இறைநெறி அந்தந்த சமூக அமைப்பின் பல்வேறு தேவைகளை ஆகுமான வகையில் பூர்த்தி செய்தது. சூழலும் தேவையும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணமுடிக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தலாம். இறைவன் அதற்குரிய நிபந்தனையையும் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: ….ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 4:3) …
Read More »முஸ்லிம் பெண்களின் நிலை என்ன?
இஸ்லாமிய கண்ணோட்டத்தின்படி, பெண் என்பவள், தனக்குரிய சொத்துக்களையும் உடைமைகளையும் தனது விருப்பப்படி ஆகுமான வகையில் பயன்படுத்திக் கொள்ள தன்னுரிமைக் கொண்ட சுதந்திரப் பறவையாவாள். அவள் தனி ஒருத்தியாக இருந்தாலும் சரி, திருமணமானவளாக இருந்தாலும் சரியே! தான் திருமணம் முடிக்க நாடும் ஆண்மகனிடமிருந்து தனக்குரிய பாதுகாப்புக் கவசமாக (மஹர் எனும் பெயரில்) ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்தையோ அல்லது அதற்கு பெறுமானமுள்ள ஒன்றையோ பெற்றுக் கொள்கின்றாள். அதுமட்டுமல்ல, மணமுடித்து சென்றாலும் தனது …
Read More »முஸ்லிம்கள் குடும்ப அமைப்பைப் போற்றுவது ஏன்?
இஸ்லாமிய சமூகத்தின் அடிப்படையே குடும்ப அமைப்பு தான்! நிலையான ஒரு குடும்ப அமைப்பு மட்டுமே அமைதியையும், பாதுப்பையும் தர முடியும். அதுமட்டுமல்ல, அக்குடும்ப உறுப்பினர்களின் ஆன்மிக நிலைப்பாடு உறுதி பெறவும் வளர்ச்சியடையவும் ஓர் அத்தியாவசிய காரணியாக அமைவது குடும்ப அமைப்பு மட்டுமே! குடும்ப அமைப்பு முறை வளர வளர, சாந்தியும் சமாதானமும் மிக்கதொரு சமூக அமைப்பு உருவாகி நிலைப்பெறுகின்றது. குடும்ப அமைப்பின் மாபெரும் செல்வங்களாக இருப்போர் குழந்தைகளே! அவர்கள் வளர்ந்து …
Read More »இயேசு குறித்து முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?
ஈஸா (அலை) – இயேசு – ஜீஸஸ் என்று வழங்கப்படும் இயேசு கிறிஸ்து அவர்களை முஸ்லிம்கள் மதிக்கின்றனர். உயர்ந்த அந்தஸ்தில் வைத்து அவரைப் போற்றுகின்றனர். அதுமட்டுமல்ல, இந்த உலகில் அவருடைய இரண்டாவது வருகையை நம்புகின்றனர். மனித குலத்துக்கு இறைவன் அனுப்பிய தூதர்களில் ஒருவராக அவரை நம்புகின்றார்கள். அனைத்துக்கும் மேலாக, முஸ்லிம்கள் அவரை வெறுமனே ஜீஸஸ் என்றோ, இயேசு என்றோ குறிப்பிடுவதில்லை! மாறாக, அவருடைய பெயருடன் சேர்த்து அலைஹிஸ்ஸலாம் – இறைசாந்தியும், …
Read More »இதர மதங்களை சகித்துக் கொள்கிறதா இஸ்லாம்?
திருக்குர்ஆன் கூறுகின்றது:- தீன் – இறைமார்க்கம் தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ – உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களை தடுப்பதில்லை! திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான் திருக்குர்ஆன்: 3:42-47. சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம் அல்லாத மக்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பது இஸ்லாமிய ஆட்சியின் ஒரு அம்சமே! இதனால்தான், இன்றும்கூட முஸ்லிம் நாடுகளில் பிற மதத்தவரின் வழிபாட்டுத் தலங்கள் …
Read More »இஸ்லாத்தைத் தாங்கும் ஐந்து தூண்கள் எவை?
ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கையை வரையறுக்கும் வரைச்சட்டங்களே இந்த ஐந்து தூண்கள்! இறைநம்பிக்கை, தொழுகை, நோன்பு (மூலம் நலிந்தோர் மீதான அக்கரை), ஜகாத் (மூலம் பொருளாதார தூய்மை), வசதி படைத்தோர் மக்கா மாநகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவையே அந்த வரைச்சட்டங்கள்! 1. இறைநம்பிக்கை லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மத் ரஸூலுல்லாஹ்! அல்லாஹ் (எனும்) ஏக இறைனைத் தவிர வேறு இறைவன் இல்லை! முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய (இறுதித்)தூதர் ஆவார்கள். இறைநம்பிக்கையின் …
Read More »முஹம்மத் (ஸல்) அவர்கள் மொழிந்தவை எவை?
சில உதாரணங்கள் மற்றவரிடம் கருணை காட்டாதவர்கள் மீது இறைவனும் தன் கருணையைப் பொழிவதில்லை! தான் விரும்புவதையே தன்னுடைய சகோதரருக்கும் விரும்பாதவரை ஒருவர் உண்மையான இறைநம்பிக்கையாளராக ஆக முடியாது! அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க, தான் மட்டும் வயிறார உண்பவன் இறைநம்பிக்கையாளன் அல்ல! பிறரை(த் தாக்கி) கீழே வீழ்த்தி விடுபவன் வலிமையாளன் அல்லன். (மாறாக) கோபம் வரும்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே (உண்மையான) வலிமையாளன்! இறைவன் உங்களுடைய உடலமைப்பையும், தோற்றத்தையும் கொண்டு …
Read More »இறைவேதத்தை விடுத்து வேறு புனித நூல்கள் உண்டா?
ஆம், உண்டு! அதுவே, முன்மாதிரியாக அமைந்த முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறை! அரபிமொழி வழக்கில் இது ஸுன்னாஹ் எனப்படுகின்றது. அதாவது, முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையில் கடைப்பிடித்தவை, கூறியவை, அங்கீகரித்தவை, அவரது குணநலன்கள் அனைத்தும் இதனுள் அடங்கும். திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக, முஸ்லிம்களுக்கு பின்பற்றத்தக்க சிறந்த வழிமுறையாக அமைந்தது இதுவே! ஸுன்னாஹ் எனப்படுகின்ற முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையை நம்புவதும், அதனைப் பின்பற்றுவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியே! …
Read More »