கப்று (சமாதி) தரிசனம் என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட அமைப்பாகும். அனுமதிக்கப்படாத நூதன முறையில் அனுஷ்டிக்கப்படும் அமைப்பு மற்றொன்று. இப்படி ஸியாரத் இரு வகைப்படும். ஷரீஅத்தில் ஆகுமாக்கப்பட்ட ஸியாரத்திற்கு நமது இஸ்லாம் விளக்கம் தரும்போது ‘எந்த ஸியாரத்தினால் ஸியாரத் செய்கிறவனின் எண்ணம் கப்றாளிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல்’ என்று அமைகிறதோ அதுவே ஷரீஅத்தில் அனுமதிக்கப்படுகிற ஸியாரத்தாகும். மனிதன் இறந்ததன் பின் (ஜனாஸா) தொழுகை நடத்துகிறோமென்றால் அத்தொழுகையின் உட்கருத்து ஜனாஸாவுக்காக பிரார்த்தனை புரிவதாகும்.
Read More »Tag Archives: பிரார்த்தனை
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மதிப்பு.
நபிகள் (ஸல்) அவர்கள் எல்லா மக்களுக்கும் பரிந்து பேசி அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள். புகழுக்கு உரிய உன்னதமான ஸ்தானமும் அவர்களுக்கு உண்டு. பரிந்து பேசுகின்ற அனைத்து சிபாரிசுகாரர்களை விட மதிப்பிலும், அந்தஸ்திலும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்களாவார்கள். அவர்களின் அந்தஸ்தின் அருகில் எந்த நபிகளும், எந்த ரசூலும் நெருங்க முடியாது. இவர்கள் அல்லாஹ்விடம் எல்லோரையும் விட மதிப்புக்குரியவர். யார் யாருக்கு அவர்கள் இறைவனிடம் துஆச் செய்து மன்றாடி சிபாரிசு …
Read More »பாடம்-12 | அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் உதவி தேடுவதும் (இஸ்திகாதா), துஆ கேட்பதும் ஷிர்க்கான செயலாகும்.
அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் உதவி தேடுவதும் (இஸ்திகாதா), துஆ கேட்பதும் ஷிர்க்கான செயலாகும். “இன்னும் அல்லாஹ்வைத் தவிர உமக்கு பயனளிக்காதவற்றை மற்றும் உமக்கு இடர் செய்யாதவற்றை நீர் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்வீராயின் நிச்சயமாக அச்சமயமே அநியாயக்காரர்களில் (உள்ளவராக) நீர் ஆகிவிடுவீர். அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குகிறவன் அவனைத் தவிர (வேறு) எவரும் இல்லை. மேலும் அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனது …
Read More »