1403. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள். புஹாரி :5232 உக்பா பின் ஆமிர் (ரலி).
Read More »Tag Archives: மனைவி
கஞ்சனின் மனைவி கணவனின் பொருளைத் திருடலாம்.
1115. (ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா (ரலி) (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர்; அவருக்குரிய (செல்வத்)திலிருந்து எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என் மீது குற்றமாகுமா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘நியாயமன அளவு தவிர (அவ்வாறு செய்ய) வேண்டாம்” என்று பதிலளித்தார்கள். புஹாரி :5359 ஆயிஷா (ரலி). 1116. ஹிந்த் பின்த் உத்பா, …
Read More »64 (1). (நபிகளார் காலத்துப்) போர்கள்
பாகம் 4, அத்தியாயம் 64, எண் 3949 அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார் நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, ‘நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?’ என்று அவர்களிடம் வினவப்பட்டது. ‘பத்தொன்பது” என்று அவர்கள் பதிலளித்தார்கள். ‘நபி(ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?’ என்று வினவப்பட்டபோது, ‘பதினேழு” என்றார்கள். ‘இவற்றில் முதல் போர் எது?’ என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘உஸைரா’ அல்லது ‘உஷைர்’ என்று …
Read More »63.அன்சாரிகளின் சிறப்புகள்
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3776 ஃகைலான இப்னு ஜரீர்(ரஹ்) அறிவித்தார் நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘(அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரான உங்களுக்கு) ‘அன்சார் உதவியாளர்கள்’ என்னும் பெயர் வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்கு முன்பே) சூட்டப்பட்டிருந்ததா? அல்லது அல்லாஹ் உங்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினானா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அல்லாஹ் தான் எங்களுக்கு (‘அன்சார்’ என்று திருக்குர்ஆன் 9:100-ம் வசனத்தில்) பெயர் …
Read More »60.நபிமார்களின் செய்திகள்
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3326 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்” என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் …
Read More »57.குமுஸ்-ஐந்திலொரு பங்கு கடமை
பாகம் 3, அத்தியாயம் 57, எண் 3091 அலீ(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து என்னுடைய பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி(ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத் தந்திருந்தார்கள். நான் அல்லஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் (முதன் முதலாக) வீடு கூட விரும்பியபோது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் …
Read More »53.சமாதானம்
பாகம் 3, அத்தியாயம் 53, எண் 2690 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்குள் ஏதோ தகராறு இருந்து வந்தது. எனவே, நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலர் புடைசூழ அவர்களிடையே சமாதானம் செய்து வைப்பதற்காக அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள். (நபி(ஸல்) அவர்கள் அங்கு சென்றிருந்த போது) தொழுகை நேரம் வந்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் இன்னும் (திரும்பி) வரவில்லை. அப்போது பிலால்(ரலி) பாங்கு …
Read More »52.சாட்சியங்கள்
பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2637 இப்னு ஷிஹாப்(ரஹ்) அறிவித்தார். உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்), இப்னுல் முஸய்யப்(ரஹ்), அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்) மற்றும் உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) ஆகியோர் எனக்கு (மக்கள் சிலர்) ஆயிஷா(ரலி) அவர்களை (அவதூறு பேசியது) பற்றிய ஹதீஸை அறிவித்தார்கள். ஒருவர் அறிவித்த ஹதீஸ் மற்றவர் அறிவித்த ஹதீஸை உறுதிப்படுத்துவதாக இருந்தது. ‘அபாண்டப் பழி சுமத்தியவர்கள் தாங்கள் பேசிய அவதூறுகளையெல்லாம் சொன்னபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் …
Read More »50.எஜமான் அடிமையிடையே உள்ள ஒப்பந்தம்
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2565 அபூ அய்மன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, நான் உத்பா பின் அபீலஹபுக்கு அடிமையாக இருந்தேன். அவர் இறந்து விட்டார். பிறகு, அவரது மக்கள் எனக்கு எஜமானர்கள் ஆனார்கள். மேலும், அபூ அம்ருடைய மகனுக்கு என்னை அவர்கள் விற்றார்கள். அப்போது உத்பாவின் மக்கள், எனது வாரிசுரிமை தமக்கே கிடைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள் என்று கூறினேன். …
Read More »44.வழக்குகள் (முறையீடுகள்) தகராறுகள்
பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2410 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். “ஒருவர் (திருக்குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதைக் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி(ஸல்) அவர்கள், ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்” என்று கூறினார்கள். “நபி(ஸல்) அவர்கள், ‘வேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில், …
Read More »