Featured Posts

Tag Archives: இலட்சியம்

வாழ்வின் இலட்சியம்

சிறப்புரை வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், பஹ்ரைன் Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/s777qu5h3n28a8a/mission_in_life_iyub.mp3] Download mp3 audio

Read More »

ஈடேற்றம் பெற அல்லாஹ்வின் அருள் அவசியம்.

1793. ”இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்களில் யாரையும் அவரின் நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப் படுவார்)” என்று கூறினார்கள். மக்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றாது?)” என்று வினவினார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘(ஆம்) என்னையும் தான். அல்லாஹ் அரவணைத்துக் கொண்டால் தவிர” என்று கூறிவிட்டு, ‘(எனவே, நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். (வரம்பு மீறி …

Read More »

பிரார்த்தனையின் படித்தரங்கள் (2)

முந்தைய நபிமார்களின் ஷரீஅத்துக்களிலும் ஷிர்க் அனுமதிக்கப் படவில்லை. இறைவனுக்கு இணைவைத்தல் என்பது நபி (ஸல்) அவர்கள் மட்டும் விலக்கிய ஒரு பாவமல்ல. மாறாக அனைத்து நபிமார்களும் தம் ஷரீஅத்துகளில் இத்தகைய ஷிர்க்குகள் பரவுவதைத் தடுத்தார்கள். இறந்துப் போனவர்களைக் கூப்பிட்டு பிரார்த்திக்காதீர்கள் என்றும், ஷிர்க்கான அனுஷ்டானங்களைச் செய்யாதீர்கள் என்றும் நபி மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ரவேலர்களைத் தடுத்திருந்தார்கள் என்று தௌராத்தில் வருகிறது. மனிதன் இத்தகைய அமல்களைச் செய்வதனால் அல்லாஹ்வின் தண்டனைக்கு …

Read More »

இறைவன் தன் சிருஷ்டிகளைக் கொண்டு ஏன் சத்தியம் செய்ய வேண்டும்

அல்லாஹ் தன் சிருஷ்டிகளில் விரும்பியவற்றைக் கொண்டு மனிதர்களிடம் சத்தியம் செய்கிறான். மனிதர்களைப் பொறுத்தவரை சிருஷ்டிகளைக் கொண்டு மற்றொரு சிருஷ்டியிடம் அனுமதிக்கப்படாதது போல அவற்றைக் கொண்டு இறைவனிடத்திலும் சத்தியம் செய்வதில் ஷிர்க் நுழைந்து விடுகிறது. அல்லாஹ் தன் சிருஷ்டிகளைப் பாராட்டி அவற்றின் கௌரவத்தையும், அமைப்பையும், அவற்றைப் படைத்தல் இலேசான காரியமல்ல என்பவற்றையெல்லாம் எடுத்துக் கூறி அதன் காரணத்தினால் தன் ஏகத்துவத்தை உறுதிப் படுத்துகிறான். இவையனைத்தையும் ஏகத்துவத்தின் அத்தாட்சிகள் என்று தெரிவிப்பதற்காகவும் அவற்றைக் …

Read More »

ஓதிப் பார்த்தல்

ஷிர்க் இடம்பெற வில்லையானால் ஓதி பார்ப்பதில் குற்றமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். இணை வைத்தலின் ஏதாவதொரு அம்சம் கலந்து விட்டால் கூட அத்தகைய ஓதிப்பார்த்தல் தடுக்கப்பட்டுள்ளது. ஜின்களைக் கொண்டு காவல் தேடி ஓதிப்பார்த்தலும் விலக்கப்பட்டுள்ளது.

Read More »

ஒரு ஸஹாபி அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு சட்டம் விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின் ஒப்புதலும் வேண்டும்.

ஒரேஒரு ஸஹாபியின் விளக்கத்தை மட்டும் வைத்து காரியங்களை நாம் தீர்மானித்து விடக் கூடாது. ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸில் உள்ள நேருரையின் கருத்தும், அறிவிப்பாளர் அது விஷயத்தில் விளங்கியிருக்கும் விளக்கமும் வித்தியாசமாகக் காணப்பட்டால் ஹதீஸின் உரையைத்தான் நாம் எடுக்க வேண்டும். அவ்விஷயத்தில் ஸஹாபியின் விளக்கம் சான்றாக எடுக்கப்பட மாட்டாது.

Read More »

பாங்கின் பிரார்த்தனை!

நபிகள் (ஸல்) அவர்கள் தமது உம்மத்துகளிடம் ஸலவாத்துச் சொல்லக் கூறியிருப்பதுபோல தமக்காக வஸீலாவையும், பளீலாவையும், புகழுக்குரிய இடத்தையும் கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் படியும் ஏவியிருக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘முஅத்தின் பாங்கு சொல்வதைக் கேட்டால் முஅத்தின் சொல்வதைப் போன்று நீங்களும் சொல்லுங்கள். பிறகு என்மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். ஒருமுறை என்மீது ஒருவர் ஸலவாத்துச் சொன்னால் அல்லாஹ் அவர்மீது …

Read More »

சிருஷ்டிகளிடம் எதைக் கேட்கலாம்?

கேட்காலாமென்று அனுமதிக்கப்பட்டவற்றில் ஒன்று கல்வி. கல்வியைத் தெரியாதவன் தெரிந்தவனிடம் கேட்கலாம். கேட்டு விளங்கலாம். இதை இறைவனும் மனிதனுக்கு ஏவியிருக்கிறான்: “நீங்கள் அறிந்து கொள்ளாமலிருந்தால் கற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்”. (16:43) “…(இதனை) நீங்கள் அறியாவிட்டால் முன்னருள்ள வேதத்தையுடையோரிடமேனும் கேட்டறிந்து கொள்ளுங்கள்”. (21:7) “உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களைப் பற்றி நீர் கேளும். வணங்கப்படுவதற்கு ரஹ்மானையன்றி வேறொரு ஆண்டவனை நாம் ஆக்கினோமா? (என்று)”. (43:45)

Read More »