குத்பாவுக்குச் செல்வதின் ஒழுங்கு குத்பாவுக்குச் செல்வது, அங்கு அமர்வது தொடர்பிலும் இஸ்லாம் எமக்கு வழிகாட்டியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றை நாம் இன்று மீறும் விதத்திலேயே நடந்து கொள்கின்றோம். 1. நேரத்துடன் பள்ளிக்குச் செல்வது: ஜும்ஆவுக்காக நேரகாலத்துடன் பள்ளிக்குச் செல்வது சுன்னாவாகும். இந்த சுன்னா இன்று பெரும்பாலும் மீறப்பட்டே வருகின்றது. ஜும்ஆ ஆரம்பிக்கப்படும் போது பள்ளியில் கொஞ்சம் பேர்தான் இருக்கின்றனர். இரண்டாம் ஜும்ஆ முடியும் தறுவாயில் பள்ளிக்கு வெளியிலும் மக்கள் நின்று கொண்டிருக்கின்றனர். …
Read More »