மனிதர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க நினைத்தால் ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட துஆக்களால் அல்லது திருமறையிலிருந்தும் பெருமானாரிடமிருந்தும் அறியப்பட்ட துஆக்களைக் கொண்டு பிரார்த்திக்க வேண்டும். இத்தகைய துஆக்களை எடுத்துரைத்து பிரார்த்திப்பதில் சந்தேகமின்றி நிறையப் பலாபலன்களை காண முடிகிறது. இந்த துஆக்களினால் மனிதன் நேரான வழியைப் பெறுகிறான். அன்பியாக்கள், ஸித்தீகீன்கள், ஷுஹாதாக்கள், ஸாலிஹீன்கள் இவர்கள் வழியும் இதுதான். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சில பொதுமக்கள் கூறுகின்ற ‘உங்களுக்கு ஏதேனும் தேவைகள் ஏற்பட்டால் எனது மதிப்பை …
Read More »Tag Archives: நூல்கள்
ஹதீஸ்களின் தராதரங்கள்
இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் தமது ஜாமிஉ என்ற ஹதீஸ் தொகுப்பில் ஹதீஸ்களை மூன்றாகத் தரம் பிரித்தார்கள். அவை: ஸஹீஹ், ஹஸன், ளயீஃப் என்பன. இமாம் திர்மிதி அவர்கள்தாம் முதன் முதலாக ஹதீஸ்களை இப்படி பிரித்துக் காட்டியவர்கள். ஒரே ஹதீஸ் பல வழிகளில் அறிவிக்கப்படும் போதும், அறிவிப்பாளர்கள் பட்டியலில் குற்றம் சுமத்தப்பட்டவர்களும், ஒற்றையாக நிற்பவர்களும் இல்லாமல் இருக்கும்போதும் தான் அந்த ஹதீஸுக்கு ‘ஹஸன்’ என்று பெயரிட்டார்கள். இமாம் திர்மிதி ஹஸன் …
Read More »கப்றும் திருவிழாக்களும்
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபியவர்கள் கூறியதாக அறிவிக்கும் ஒரு ஹதீஸில் ‘அல்லாஹ்வுக்குப் பூமியில் வந்து போகின்ற மலக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக என்னுடைய உம்மத்திலுள்ளவர்கள் என்மீது கூறுகின்ற ஸலாம் எனக்கு சேர்த்து வைக்கப்படுகிறது’ என்று அறிவிக்கிறார்கள். (நஸாயீ, அபூஹாதிம்) தூரத்திலிருக்கும் ஒரு முஸ்லிம் நபியின் மீது சொல்லும் ஸலாம் மலக்குகள் வழியாக நபியின்பால் சேர்த்து வைக்கப் படுகின்றது என்று இந்த ஹதீஸுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
Read More »குறிப்பு (3)
இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுடைய தோழர்களின் பிரபலமான நூற்களிலிருந்து இத்தகைய சம்பவங்களை காழி இயாள் தமது நூலில் தொகுத்துத் தந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் பலவீனமான பற்பல அறிவிப்பாளர்களால் சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தையும் தம் நூலில் எடுத்துக் கூறுகிறார்கள். அது வருமாறு: ‘மஸ்ஜிதுன் நபவியில் கலீபா அபூஜஃபருல் மன்ஸூர் அவர்கள் இமாம் மாலிக் அவர்களுடன் வாதிட்டுக் கொண்டிருந்தார்களாம். அந்நேரம் கலீபாவிடம் இமாம் அவர்கள் கூறினார்களாம்.
Read More »