Featured Posts

Tag Archives: முகம்

கேள்வி-16: இஹ்ராமில் (ஹஜ், உம்ரா) பெண்கள் முகத்தை மூடுவதின் சட்டம்?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி [அல்-ஜுபைல்-2018] இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 கேள்வி-16: இஹ்ராமில் (ஹஜ், உம்றா) பெண்கள் முகத்தை மூடுவதின் சட்டம்? வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

நிராகரிப்போர் முகத்தால் நடத்தல்.

1789. ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! இறை மறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘இந்த உலகில் அவனை இரண்டு கால்களினால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?’ என்று (பதிலுக்குக்) கேட்டார்கள். (இதை அறிவித்த அறிவிப்பாளர்) கத்தாதா இப்னு திஆமா (ரஹ்) ‘ஆம்! (முடியும்.) எங்கள் இறைவனின் வலிமையின் மீதாணையாக!” என்று …

Read More »

முகத்தில் தாக்காதே.

1678. உங்களில் ஒருவர் (எவரையாவது) தாக்கினால் முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2559 அபூஹூரைரா (ரலி).

Read More »

7.தயம்மும்

பாகம் 1, அத்தியாயம் 7, எண் 334 நாங்கள் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். ‘பைதாவு’ அல்லது ‘தாத்துல் ஜைஷ்’ என்ற இடத்தை வந்தடைந்ததும் என்னுடைய கழுத்தணி அறுந்து (தொலைந்து)விட்டது. அதைத்தேடுவதற்காக நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கினோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சிலர் வந்து, ‘(உங்கள் மகளான) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் …

Read More »

பிரார்த்தனையின் படித்தரங்கள் (2)

முந்தைய நபிமார்களின் ஷரீஅத்துக்களிலும் ஷிர்க் அனுமதிக்கப் படவில்லை. இறைவனுக்கு இணைவைத்தல் என்பது நபி (ஸல்) அவர்கள் மட்டும் விலக்கிய ஒரு பாவமல்ல. மாறாக அனைத்து நபிமார்களும் தம் ஷரீஅத்துகளில் இத்தகைய ஷிர்க்குகள் பரவுவதைத் தடுத்தார்கள். இறந்துப் போனவர்களைக் கூப்பிட்டு பிரார்த்திக்காதீர்கள் என்றும், ஷிர்க்கான அனுஷ்டானங்களைச் செய்யாதீர்கள் என்றும் நபி மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ரவேலர்களைத் தடுத்திருந்தார்கள் என்று தௌராத்தில் வருகிறது. மனிதன் இத்தகைய அமல்களைச் செய்வதனால் அல்லாஹ்வின் தண்டனைக்கு …

Read More »

ஷபாஅத் விஷயத்தில் ஸுன்னத் ஜமாத்திற்கு மாறுபட்டவர்களின் அபிப்பிராயம்

ஸுன்னத் வல் ஜமாத்தை விட்டு அப்பாற்பட்ட முஃதஸிலாக்களும், காரிஜிய்யா வகுப்பாரைச் சேர்ந்த வயீதிய்யாப் பிரிவினரும் மறுமையில் நபிமார்களுக்குரிய ஷபாஅத்தை மூமின்களின் பதவியை உயர்த்துவதற்காக மட்டுமே என்று ஒதுக்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் பதவியை உயர்த்தும் விஷயத்தில் மட்டும்தான் மறுமையில் ஷபாஅத் செய்வார்களாம். இப்பிரிவினரில் மற்றும் சிலர் நபிகளின் ஷபாஅத்தை அடியோடு மறுக்கிறார்கள். பெருமானாருக்கு ஷபாஅத்தே இல்லையாம்.

Read More »

ஒரு ஸஹாபி அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு சட்டம் விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின் ஒப்புதலும் வேண்டும்.

ஒரேஒரு ஸஹாபியின் விளக்கத்தை மட்டும் வைத்து காரியங்களை நாம் தீர்மானித்து விடக் கூடாது. ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸில் உள்ள நேருரையின் கருத்தும், அறிவிப்பாளர் அது விஷயத்தில் விளங்கியிருக்கும் விளக்கமும் வித்தியாசமாகக் காணப்பட்டால் ஹதீஸின் உரையைத்தான் நாம் எடுக்க வேண்டும். அவ்விஷயத்தில் ஸஹாபியின் விளக்கம் சான்றாக எடுக்கப்பட மாட்டாது.

Read More »

கப்றும் திருவிழாக்களும்

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபியவர்கள் கூறியதாக அறிவிக்கும் ஒரு ஹதீஸில் ‘அல்லாஹ்வுக்குப் பூமியில் வந்து போகின்ற மலக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக என்னுடைய உம்மத்திலுள்ளவர்கள் என்மீது கூறுகின்ற ஸலாம் எனக்கு சேர்த்து வைக்கப்படுகிறது’ என்று அறிவிக்கிறார்கள். (நஸாயீ, அபூஹாதிம்) தூரத்திலிருக்கும் ஒரு முஸ்லிம் நபியின் மீது சொல்லும் ஸலாம் மலக்குகள் வழியாக நபியின்பால் சேர்த்து வைக்கப் படுகின்றது என்று இந்த ஹதீஸுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

Read More »

குறிப்பு (3)

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுடைய தோழர்களின் பிரபலமான நூற்களிலிருந்து இத்தகைய சம்பவங்களை காழி இயாள் தமது நூலில் தொகுத்துத் தந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் பலவீனமான பற்பல அறிவிப்பாளர்களால் சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தையும் தம் நூலில் எடுத்துக் கூறுகிறார்கள். அது வருமாறு: ‘மஸ்ஜிதுன் நபவியில் கலீபா அபூஜஃபருல் மன்ஸூர் அவர்கள் இமாம் மாலிக் அவர்களுடன் வாதிட்டுக் கொண்டிருந்தார்களாம். அந்நேரம் கலீபாவிடம் இமாம் அவர்கள் கூறினார்களாம்.

Read More »