Featured Posts

Tag Archives: வெளிச்சம்

மோசடி செய்யத் தடை.

1132. மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு ‘இது இன்னாருடைய மகன் இன்னோரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி)” என்று கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 6177 இப்னு உமர் (ரலி). 1133. மோசடி செய்பவன். ஒவ்வொருவனுக்கும் ஒரு கொடி உண்டு. (உலகில்) அவன் செய்த மோசடி(யை வெளிச்சமிட்டு)க் (காட்டுவதற்)காக மறுமை நாளில் அது …

Read More »

57.குமுஸ்-ஐந்திலொரு பங்கு கடமை

பாகம் 3, அத்தியாயம் 57, எண் 3091 அலீ(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து என்னுடைய பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி(ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத் தந்திருந்தார்கள். நான் அல்லஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் (முதன் முதலாக) வீடு கூட விரும்பியபோது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் …

Read More »

ஷபாஅத்தின் வகைகள்

ஷபாஅத் என்னும் பரிந்துரைத்தல் இரு வகைப்படும். ஒன்று: முஷ்ரிக்குகளிடையிலும், இவர்களைப் போன்ற அறிவீனமான மக்களிடையிலும் அறியப்பட்டிருந்த ஷபாஅத். இதை இறைவன் அடியோடு ஒழித்துக்கட்டி இல்லாமலாக்கி விட்டான். இரண்டு: அல்லாஹ்வின் அனுமதி பெற்றதன் பின்னர் கோரப்படும் ஷபாஅத். இதை அல்லாஹ் உறுதிப்படுத்தி கூறியிருக்கிறான். இந்த ஷபாஅத் அல்லாஹ்வுடைய அன்பியாக்களுக்கும், ஸாலிஹீன்களுக்கும் வழங்கப்படும். மறுமையில் சிருஷ்டிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஷபாஅத்தைக் கேட்கும்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் சமூகத்தில் வந்து …

Read More »

ஆதம் நபியவர்கள் பெருமானாரின் பொருட்டால் வஸீலாத் தேடினார்கள் என்று கூறப்படும் ஹதீஸைப் பற்றி…

ஆதம் (அலை) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள் என்று சொல்லப்படும் இந்த ஹதீஸ் நபிகளைப் பற்றி உமர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது. சுவர்க்கத்தில் பிசகிய ஆதம் (அலை) அவர்கள் ‘இறைவா! முஹம்மதின் பொருட்டால் அவரின் உரிமையைக் கொண்டு ஆணையிட்டுக் கேட்கிறேன். நீ என் குற்றங்களை மன்னித்தருள்’ என்றார்களாம். இதற்கு இறைவன் ‘ஆதமே! (நான் முஹம்மதைப் படைப்பதற்கு முன்னரே) நீர் அவரை எப்படி அறிந்து கொண்டாய்’ …

Read More »

படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (1)

இதுபோன்று தான் சிருஷ்டிகளைக்* கொண்டு ஆணையிட்டுத் தம் தேவையை வேண்டுவது. இதுவும் விலக்கப்பட்ட செய்கையாகும். படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்வதை எல்லா மத்ஹபுடைய இமாம்களும் வெறுத்திருக்கிறார்கள். சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்து இன்னொரு சிருஷ்டியிடம் கேட்பது கூடாதெனின், அதே சிருஷ்டியைக் கொண்டு படைத்தவனிடம் ஆணையிட்டுக் கேட்க முடியுமா? அது எப்படி அனுமதிக்கப்படும்? அல்லாஹ்வுக்கு வேண்டுமானால் தம் சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்யலாம். தன் சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிட்டுச் சொல்வதில் தன் …

Read More »

நபியின் ஷபாஅத்தை மறுக்கின்றவர்கள் யார்?

முஃதஸிலாக்கள், ஜய்திய்யாக்கள், கவாரிஜிகள் போன்ற பித்அத்துக்காரர்கள்தான் இவ்வுண்மையை ஏற்கமாட்டார்கள். நரகத்தில் அகப்பட்டவர்களுக்கு யாருடைய சிபாரிசும் பலனளிக்காது என்று அவர்கள் வாதாடுகிறார்கள். மனிதன் இரண்டே அமைப்புக்குரியவன். சுவனவாதி அல்லது நரகவாதி. நரகவாதியாக நரகில் பிரவேசித்தவனுக்கு என்றும் இருப்பிடம் நரகமே. சுவனத்தைத் தன் இருப்பிடமாக்கிக் கொண்டவனுக்கு என்றும் சுவனமே இருப்பிடமாகும். இவ்விரு இருப்பிடங்களிலிருந்தும் எக்காரணத்தாலும் இவர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள். தண்டனையும், நற்செய்கைக்கான நல்ல கூலியும் ஒருபோதிலும் ஒன்று சேராது. இவ்வாறு இவர்கள் வாதாடுகிறார்கள்.

Read More »