1120. நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2697 ஆயிஷா (ரலி).
Read More »கோபத்திலிருக்கும் போது தீர்ப்பளிக்காதே.
1119. (என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் தம் புதல்(வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்ப)வருக்குக் கடிதம் எழுதினார்கள். -அவர் (ஈரான் – ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார். ‘நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்கவேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்” (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்). புஹாரி :7158 அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ரா …
Read More »வானவர்கள்!
அல்லாஹ்வின் படைப்பினமான இவர்களை நம்புவது இஸ்லாத்தில் இரண்டாவது அம்சமாகும். இவர்களை அரபு மொழியில் ‘மலாஇகா’ எனக் கூறப்படும். கண்களுக்குப் புலப்படாத இவர்களுக்கு அல்லாஹ்வின் இறைமையில் எத்தகைய பங்கும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அவனது அடிமைகளேயாவர். இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்பட முடியாது. பாவ காரியங்களில் ஈடுபடவும் முடியாது. இவர்களுல் பிரதானமானவர் பெயர் ஜிப்ரீல் (அலை) என்பதாகும். இவரது பொறுப்பு இறைச் செய்தியை இறைத்தூதர் வசம் கொண்டு …
Read More »நீதிபதியின் ஆய்வுசெய்து அளித்த தீர்ப்புக்கு கூலி.
1118. நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :7352 அம்ர் பின் அல் ஆஸ் (ரலி).
Read More »அளவுக்கதிகமான கேள்விகளைத் தவிர்.
1117. (பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப்பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2408 முகீரா இப்னு ஷுஅபா (ரலி).
Read More »கஞ்சனின் மனைவி கணவனின் பொருளைத் திருடலாம்.
1115. (ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா (ரலி) (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர்; அவருக்குரிய (செல்வத்)திலிருந்து எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என் மீது குற்றமாகுமா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘நியாயமன அளவு தவிர (அவ்வாறு செய்ய) வேண்டாம்” என்று பதிலளித்தார்கள். புஹாரி :5359 ஆயிஷா (ரலி). 1116. ஹிந்த் பின்த் உத்பா, …
Read More »முஸ்லிம் எதிர்ப்பு மூளைச்சலவையே!
தற்போதுள்ள நமது சரித்திரப் பாடப்புத்தகங்கள் அந்த கால முஸ்லிம் மன்னர்களைப் பற்றி தவறான ஒரு கருத்தைக் கூறி தற்போதைய தலைமுறையினரிடம் , உண்மைக்கு மாறான ஒரு கருத்தைப் பரப்பி வருகிறது. அந்தக்கால முஸ்லிம் மன்னர்களில் பலர் இந்துக்களை வெறுத்தவர்கள் போலவும், கோவில் சிலைகளை உடைத்து நொறுக்கியவர்கள் போலவும், இந்துக்களை வாள் முனையில் மிரட்டி முஸ்லிம் மதத்துக்குக் கொண்டு போனவர்கள் என்றும் சித்தரிக்கப்படுகின்றன. இவையெல்லாம் பொய்யானவை – முஸ்லிம்கள் மீது ஒரு …
Read More »வாதத் திறமையால் வெல்வது பற்றி…
1114. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, ‘நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம். மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கிறேனோ (அவருக்கு) அது …
Read More »குற்றமற்றவர் என நிரூபிக்க பிரதிவாதி சத்தியம் செய்தல்.
1113. இரண்டு பெண்கள் ‘ஒரு வீட்டில்’ அல்லது ‘ஓர் அறையில்’ (காலுறை) தைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரில் ஒருத்தி தம் கையில் (தைக்கும்) ஊசி குத்தப்பட்ட நிலையில் வெளியே வந்து மற்றொருத்தியின் மீது குற்றம் சாட்டினாள். இந்த வழக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (தீர்ப்புக்காகக்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மக்களின் வாதத்தை (முறையீட்டை) மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத் தீர்ப்பு) அளிக்கப்பட்டால் …
Read More »விலங்குகளால்,விபத்தில் மரணித்தவருக்கு இழப்பீட்டு தொகையில்லை.
1112. ”விலங்குகளாலோ (கால்நடைகளாலோ) கிணற்றின் மூலமாகவோ அல்லது சுரங்கத்திலோ ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் (அதன் சொந்தரக்காரனிடம்) நஷ்டஈடு கேட்கப்பட மாட்டாது. புதையலில் (ரிகாஸில்) ஐந்தில் ஒரு பங்கு (ஸகாத்தாக) வசூலிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :1499 அபூஹுரைரா (ரலி).
Read More »