நம்நாட்டு தண்டனைச் சட்டப்படி ஒருவரை, ‘பறையன் ‘ என்று இழிவாகக் குறிப்பிட்டது நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை கிடைக்கும்! அதைவிட மோசமான ‘சூத்திரன்’ என்று சொன்னால் அதற்கு இந்திய தண்டனைச் சட்டப்படி எவ்வித தண்டனையும் இல்லை! (அவ்வாறு சொல்வதற்கு சிலருக்கு வேதரீதியில் அனுமதியும் உண்டு! ) இந்திய தண்டனைச் சட்டத்தில் தண்டனைக்குரியதாக நேரடியாகச் சொல்லப்படா விட்டாலும் தொடர்புடைய விசயங்களையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது நியதி. உதாரணமாக, “பூணூலை …
Read More »இரு பெருநாள் தொழுகைகள்
505. நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூ பக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுகை நடத்துபவர்களாக அவர்கள் இருந்தனர். அதன் பிறகே உரை நிகழ்த்துவார்கள். நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அவர்கள் மக்களைத் தம் கைகளால் அமரச் செய்தது இன்றும் நான் பார்ப்பது போலுள்ளது. பிறகு ஆண்களை (வரிசையினூடே) பிளந்து கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். ‘நபியே …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் அடிமைகள். பகுதி-1
இஸ்லாமும் – அடிமைகளும் என்ற முந்தைய பதிவில் ஏற்கெனவே எழுதியிருந்தாலும் மீண்டும்… குடியேற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கருப்பின அடிமைகளுடன் பின்னிப் பிணைந்திருந்தன. குடியேற்ற நாடுகளில் மக்கள் தொகைப் பெருக பெருக குடியேற்றங்கள் விரிவடைந்து, ஏராளமான விவசாயப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன. பண்ணைகளில் பணிபுரிய அதிகமான அடிமைகள் தேவைப்பட்டார்கள். தேவைக்கேற்ப கருப்பின அடிமைகள் இறக்குமதி செய்யப்பட்டார்கள்.
Read More »ஜும்ஆ ஸுபுஹ் தொழுகையில் என்ன ஓத வேண்டும்?
504. நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் ஃபஜ்ர் தொழுகையில் ‘அலிஃப் லாம் மீம் ஸஜ்தா’வையும் ‘ஹல்அதா அலல் இன்ஸான்’ என்ற அத்தியாயத்தையும் ஓதக் கூடியவர்களாக இருந்தனர். புஹாரி: 891 அபூஹூரைரா (ரலி)
Read More »இமாமின் குத்பா நடந்துகொண்டிருந்தாலும் 2 ரக்அத் தொழுதல்
502. ஜும்ஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘நீர் தொழுது விட்டீரா?’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து இரு ரக்அத்துகள் தொழுவீராக!” என்று கூறினார்கள். புஹாரி :930 ஜாபிர் (ரலி) 503. ”உங்களில் ஒருவர் இமாம் உரை நிகழ்த்தும்போது வந்தால் இரண்டு ரக்அத்கள் தொழட்டும்’ என்று தம் சொற்பொழிவின்போது நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். …
Read More »குர்ஆனிய வசனம் 62:11 இறங்கியதின் பின்னணி
500. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றி, ஒட்டகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்றுவிட்டனர். பன்னிரென்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், ‘அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் உம்மை நிலையில் விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்” (திருக்குர்ஆன் 62:11) என்ற வசனம் …
Read More »ஜூம்ஆவில் இரு குத்பாக்கள்..
499. நீங்கள் இப்போது செய்து வருவது போன்றே நபி (ஸல்) அவர்கள் நின்ற நிலையில் உரை நிகழ்த்திவிட்டுப் பிறகு உட்கார்ந்து, பிறகு எழக்கூடியவர்களாக இருந்தனர். புஹாரி :920- இப்னு உமர் (ரலி)
Read More »ஜூம்ஆவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்..
495. நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு” என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். ‘அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை” என்றும் குறிப்பிட்டார்கள். புஹாரி :935 அபூஹூரைரா (ரலி) 496. (உலகில்) இறுதிச் சமுதாயமான …
Read More »ஜூம்ஆ குத்பாவை அமைதியாக கேட்டல்..
494. ”இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 934 அபூஹுரைரா (ரலி)
Read More »இசையும் இசைக் கருவிகளும்
மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். எதற்காகவெனில் அவர்கள் எவ்வித அறிவுமின்றி (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அதை ஏளனம்செய்வதற்காகவும் தான்” (31:6). இவ்வசனத்திலுள்ள மனமயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் என்பதன் கருத்து பாடல்களே என இப்னு மஸ்வூத் (ரலி)அவர்கள் கூறியுள்ளார்கள். ‘விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை ஹலாலாக்கிக் கொள்ளக்கூடிய ஒரு கூட்டம் என்னுடைய சமுதாயத்தில் நிச்சயம் …
Read More »