Featured Posts

ஜாஃபர் அலி

ஸுஜூதின் போது….

277- நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (ஸுஜுது செய்யும் போது) தமது இரு அக்குளின் வெண்மை தெரியும் அளவுக்குத் தமது இரு கைகயையும் விரித்து வைப்பார்கள். புகாரி-390: மாலிக் பின் புஹைனா (ரலி)

Read More »

ஸுஜூதில் நிலத்தில் படும் உடல் உறுப்புகள்..

276– நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு கால்கள் ஆகிய ஏழு உறுப்புக்கள் படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப் பட்டார்கள். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது எனவும் கட்டளையிடப் பட்டார்கள். புஹாரி-809: இப்னு அப்பாஸ் (ரலி)

Read More »

ருக்உ ஸுஜூதில் என்ன கூறுவது?..

275- நபி (ஸல்) அவர்கள் தமது ருகூவிலும் ஸஜ்தாவிலும் ஸுப்ஹான கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்மஃபிர்லி (இறைவா! நீ தூயவன்: எங்கள் இறைவா! உன்னைப் போற்றுகிறோம்: இறைவா! என்னை மன்னித்துவிடு) என்று அதிகமதிகம் கூறுவார்கள். (இதாஜாஅ… என்ற அத்தியாயத்தில் கூறப்படும்) குர்ஆனின் கட்டளையை இதன் மூலம் செயல் படுத்துவார்கள். புஹாரி-817: ஆயிஷா (ரலி)

Read More »

இமாமைப் பின்பற்றுதல்..

274- நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நாங்கள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று சொல்லி முடித்து (ஸுஜூதுக்குச் சென்று) நெற்றியைப் பூமியில் வைப்பது வரை எங்களில் யாரும் (ஸுஜூதுக்காகத்) தமது முதுகை வளைக்க மாட்டார்கள். புஹாரி-811: பராவு (ரலி)

Read More »

தொழுகையை சுருக்கமாக தொழுதாலும் பரிபூரணமாக தொழுதல்..

272- நபி (ஸல்) அவர்கள் ருகூவும் அவர்களது ஸஜ்தாவும் இரு ஸஜ்தாக்களுக்கிடையிலான இடைவெளியும் ருகூவிலிருந்து எழுந்து நிமிர்தலும் நிற்றல், உட்கார்தல் நீங்கலாக அனைத்தும் ஏறத்தாழ சம அளவில் அமைந்திருந்தன. புஹாரி-792: பராஉ (ரலி) 273- அனஸ் (ரலி) எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுதது போல் தொழுது காட்டினார்கள். அத்தொழுகையில் ருகூவிலிருந்து தம் தலையை உயர்த்தியதும் மறந்து விட்டார்களோ என்று நாங்கள் பேசிக் கொள்ளும் அளவுக்கு நிற்பார்கள். புஹாரி-800: ஸாபித் …

Read More »

இமாம் சுருக்கமாகவும் முறையாகவும் தொழுவித்தல்..

267.ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக இன்ன மனிதர் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் அதிகாலை (க்கூட்டு)த் தொழுகைக்கு வராமல் நான் தாமதித்து விடுகிறேன். என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அன்று ஆற்றிய உரையின்போது கோபப்பட்டதை விடக் கடுமையாகக் கோபப்பட்டு நான் ஒருபோதும் கண்டதில்லை. பிறகு அவர்கள் மக்களே! (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பூட்டுபவர்களும் உங்களில் உள்ளனர். ஆகவே, உங்களில் …

Read More »

இஷா தொழுகையில் சப்தமாக ஓதுதல்..

265– நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது இஷாத் தொழுகையின் ஒரு ரக்அத்தில் வத்தீனி வஸ்ஸைத்தூனி என்ற அத்தியாயத்தை ஒதினார்கள். புஹாரி-767: பராவு பின் ஆஸிப் (ரலி) 266– முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு தம் (பனூ ஸலமா) கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களுடன் தொழுத அதே தொழுகையைத் தொழுவிப்பது வழக்கம். (ஒரு முறை அவர் இஷாத் …

Read More »

ஸுப்ஹு மஃரிப் தொழுகையில் சப்தமாக ஓதுதல்..

262– எங்களில் ஒருவர் தம் அருகிலிருப்பவரை அறிந்து கொள்ளும் (அளவில் வெளிச்சம் ஏற்படும்) சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுபவர்களாக இருந்தனர். அறுபது (வசனங்கள்) முதல் நூறு வரை ஸுப்ஹில் ஓதுவார்கள். சூரியன் (உச்சியிலிருந்து) சாயும் போது லுஹர் தொழுபவாகளாக இருந்தனர். அஸரையும் தொழுவார்கள். (அஸர் தொழுகையை நிறைவேற்றிய) எங்களில் ஒருவர் மதீனாவின் கடைக் கோடிக்குச் சென்று விட்டுத் திரும்பி வந்தால் சூரியன் உயிருடன் (அதாவது ஒளி குன்றாமல்) …

Read More »

நீதவான்களை புகார் கூறுவதில் பயந்து கொள்ளுங்கள்

261– (கஃபாவில் அதிகாரியாக இருந்த) ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) மீது கூஃபா வாசிகளில் சிலர் உமர் (ரலி) இடத்தில் புகார் கூறினார்கள். அவர் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்களின் புகார்களில் ஒன்றாக இருந்தது. உடனே உமர் (ரலி) அவரை நீக்கி விட்டு அம்மார் (ரலி) அவர்களை அதிகாரியாக நியமித்தார்கள். ஸஃதை (மதீனாவுக்கு) வரவழைத்து அபூஇஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று கூஃபா வாசிகளில் சிலர் கூறுகின்றனரே! என்று கேட்டார்கள். …

Read More »

ளுஹர் அஸ்ர் தொழுகையில் சப்தமின்றி ஓதுதல்..

260– லுஹர் தொழகையின் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் நபி (ஸல்) அவர்கள் ஓதுவார்கள். (அந்த இரண்டு ரக்அத்துகளில்) முதல் ரக்அத்தில் நீண்ட அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் சிறிய அத்தியாயத்தையும் ஓதுவார்கள். சில சமயங்களில் சில வசனங்களை எங்களுக்கு கேட்குமாறு ஓதுவார்கள். அஸர் தொழுகையில் (முதல் இரண்டு ரக்அத்களில்) அல்ஹம்து அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். ஸுபுஹ் தொழுகையின் முதல் ரக்அத்தில் நீண்ட …

Read More »