Featured Posts

ஜாஃபர் அலி

திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)

884. நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது ‘மினா’வில் அன்னாரை உஸ்மான் (ரலி) சந்தித்து, ‘அபூ அப்தில் ரஹ்மானே! (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களே!) தங்களிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது” என்று கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும் ஒரு தனியான இடத்திற்குச் சென்றார்கள். அங்கே உஸ்மான் (ரலி) (அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம்) ‘அபூ அப்திர் ரஹ்மானே! உங்களின் இளமைக் காலத்தை நினைவுபடுத்துகிற ஒரு கன்னிப் …

Read More »

குபா பள்ளியில் தொழுவதின் சிறப்பு.

883. நபி (ஸல்) அவர்கள் குபா பள்ளிக்கு சில நேரங்களில் நடந்தும் சில நேரங்களில் வாகனத்தில் பிரயாணித்தும் வருவார்கள். மற்றோர் அறிவிப்பில் அங்கே இரண்டு ரகஅத்கள் தொழுவார்கள் என்று உள்ளது. புஹாரி :1194 இப்னு உமர் (ரலி).

Read More »

நன்மையை நாடி பயணம் செய்தல்.

882. ‘மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற் கொள்ளக் கூடாது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1189 அபூஹுரைரா (ரலி).

Read More »

மஸ்ஜிதுல் ஹராம் மஸ்ஜிதுந்நபவி பள்ளிகளின் சிறப்பு.

881. மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்’என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1190 அபூஹுரைரா (ரலி).

Read More »

உஹது மலையை நேசித்தல்.

880. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போரிலிருந்து (திரும்பியவாறு மதீனாவை) முன்னோக்கிச் சென்றோம். நாங்கள் மதீனாவை நெருங்கியபோது அவர்கள், ‘இது ‘தாபா’ (தூய்மையானது) ஆகும். இதோ இந்த உஹத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம்” என்று கூறினார்கள். புஹாரி :4422 அபூஹூமைத் (ரலி).

Read More »

சுவனப் பூங்கா.

878. ”என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1195 அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரலி). 879. ”என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர், என்னுடைய ஹவ்லுல் கவ்ஸர் அருகிலுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :1196 அபூஹுரைரா (ரலி).

Read More »

பிளேக் நோய் மற்றும் தஜ்ஜாலிடமிருந்து மதீனா பாதுகாப்பு.

871. ‘தஜ்ஜாலைப் பற்றிய அச்சம் மதீனாவுக்குள் நுழையாது! அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாசல்கள் இருக்கும்! ஒவ்வொரு வாசலிலும் இரண்டு வானவர்கள் இருப்பார்கள்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1879 அபூஹூரைரா (ரலி). 872. ”யத்ரிபு என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக் கூடிய ஓர் ஊருக்கு (ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன்! அதுதான் மதீனா! இரும்பின் துருவை உலை நீக்கிவிடுவதைப் போல் மதீனா …

Read More »

மதினாவின் சிறப்புக்கு நபி (ஸல்) அவர்களின் துஆ

863.”இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கினார்கள். அதற்காக பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கியது போல் நான் மதீனாவைப் புனித நகராக்கினேன். இப்ராஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தித்தது போல் நான் மதீனாவிற்காக அதன் ஸாவு, முத்து ஆகியவற்றில் (பரக்கத்துக்காக) பிரார்த்தித்தேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2129 அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி). 864. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ தல்ஹா (ஸைத் இப்னு ஸஹ்ல் …

Read More »

இஹ்ராமில்லாது மக்காவுக்குள் நுழையலாமா?

862. நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒருவர் வந்து, ‘இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்!’ எனக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘அவனைக் கொன்று விடுங்கள்!” என்று உத்தரவிட்டார்கள். புஹாரி :1846 அனஸ் (ரலி).

Read More »

மக்காவின் புனித தன்மையும் அதனைப் பேணுதலும்.

859. ”அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான்! எனக்கு முன்னர் எவருக்கும் (அதில் போரிடுதல்) அனுமதிக்கப்படவில்லை. எனக்குப் பின் எவருக்கும் அனுமதிக்கப்படாது. எனக்குக் கூட பகலில் சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டது! எனவே, இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது யாரேனும் தவறவிட்ட பொருட்களை, அது பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர மற்றவர்கள் எடுக்கக் கூடாது!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். …

Read More »